வெகுண்ட உள்ளங்கள் – 12

This entry is part 12 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன் கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” என்று கத்தி விட்டு “கமலம், கமலம்” என்று உள்ளே ஒடினாள். அவனுக்கு அந்தரமாக இருந்தது. பர,பரவென சைக்கிளை ஒழுங்கு படுத்தி விட்டு காசையும் எடுத்துக் கொண்டு ஒடினான்.அவன் சந்தைக்கு போற வழியில் குவனை இருந்தது. சுந்தரம் மாஸ்டரின் தோட்டக் காணியில் இருந்த பாழுங் கிணற்றில் இருந்து பிரேதத்தை எடுத்து அருகில் வைத்திருந்தார்கள். காலைப் போதில், […]

ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்

This entry is part 11 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே. மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல் இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு சிறுபகுதி. ஒருமனிதனும் ஒருபெண்ணும்ஒன்றுஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்ஒன்று. நெளிவுகளின் அழகா,மறைமுகக் குறிப்புகளின் அழகா-கரும்பறவை கீச்சிடும் போதேஉடன் பிறகா- நீண்ட ஜன்னலைபண்படாத கண்ணாடியால்நிறைத்தன பனித்துகள்கள்முன்னும் பின்னும்அதன் குறுக்கே சென்றது.கரும்பறவையின் நிழல்கண்டு விவரிக்காத காரணமொன்றினைநிழலில் வரைந்ததுமனநிலை. ஓ, ஹாடம்-மின் மெலிந்த மனிதர்களே,நீங்கள் பொன் பறவைகளைக் கற்பனை செய்வதேன்?உங்களுக்கிருக்கும் பெண்களின்கால்கசை; சுற்றிநடக்கும்கரும்பறவை உங்கள் கண்ணில் படவில்லையா? பண்பட்ட மொழிகளும்தெளிவான […]

சொல்லத்தோன்றும் சில…..

This entry is part 15 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினையாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்றுவருகிறது. Out of Context சில வரிகளை எடுத்துக்காட்டுவதுபோல். ஒரு வினைக்கு எல்லோரும் ஒரேவிதமாக எதிர்வினையாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது; எதிர்பார்க்கவும் முடியாது. சகிப்புத்தன்மை எல்லோரிடமும் ஒரேயளவாய் இருக்கும் என்று சொல்லமுடியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்பாலினத்தைச் சேர்ந்த முகநூலினர் ஒருவர் ‘அவனா, சரியான […]

குளியல்

This entry is part 14 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள்  தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல்  காட்டுப் பூக்களின் வாசனை  திசை எங்கும் சலசலத்தோடும் ஆறு ஆம். கல்லாறு  நண்பரும் நானும் ஆதிமனிதர்கள் ஆகி  உடைகளின்றி நீரில் இறங்கினோம் கதை கவிதை திரைப்படம் என்று  பலவாறு பேசிக் கொண்டே நீராடினோம்  நேரம் போனது தெரியாமல்.  திடீரென்று இரண்டு  பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்  விவரம் கேட்டதற்கு யானை வருகிறது என்று சொல்லியவாறு ஓடினார்கள்  நண்பனும் நானும் அச்சத்தோடு நீரை விட்டு […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

This entry is part 9 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா கள்ளி – 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா தாள அசுரர்களையெல்லாம் பல்லைப் பிடித்துப் பார்த்த கை. இங்கே இருக்கிற கீர்த்தி போதாதென்று நினைத்தோ என்னவோ பல பாஷைகள் பேசுகிற சங்கீதக் கோஷ்டியோடு அவரை வெள்ளைக்கார நாடுகளுக்கு அனுப்பினார்கள். அவர் போனார். ஆறு மாசம் […]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 13 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளஅவர்களில் பலர் சத்தமில்லாமல் கட்டிக்கொண்டாயிற்று,அல்லது கட்டிக்கொண்டுவிடுவார்கள் _உணவுப்பொருட்களும், புதுத்துணிகளும். பணக்கற்றைகளும்,நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்நவீன நிலவறை மாளிகைகள்அயல்நாடுகளில்மாக்கடலாழத்தில்அந்த நிலவிலும்கூட.அடிபட்டுச் சாவதெல்லாம்அன்றாடங்காய்ச்சிகளும்அப்பாவிகளுமே.   தன்வினை நிராயுதபாணியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்குறிபார்த்துஅம்பெய்தி தலைகொய்யும்போதுஅசகாயசூரராக இறுமாப்படைகிறேன்.ஆஹா ஓஹோ என்று அவரிவர் புகழும் பேரோசையில்விழுந்தவரின் மரண ஓலம் எனக்குக் கேட்பதில்லை.கேட்டாலும் கேட்டுக்கொள்ளாமல்காலெட்டிப் […]

கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்

This entry is part 8 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

  அழகர்சாமி சக்திவேல்  அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த தொற்றுநோய் சுகாதார நிலையத்தில், கிட்டத்தட்ட இருநூறு பேர்கள், கூடியிருந்தார்கள். எல்லார் கையிலும், எரியும் மெழுகுவர்த்திகள். மெழுகுவர்த்திகளின் வெளிச்சம், சுகாதார நிலையம் அமைந்த அந்தப் பரந்த புல்வெளியின் இருளில், ஒரு அழகான ஓவியம் போலத் தெரிந்தது. நாங்கள், பரந்த புல்வெளியின், நடுவில் இருந்த அந்த எய்ட்ஸ் பிரிவு மையத்திற்கு, கையில் மெழுகுவர்த்தியோடு, ஊர்வலமாய்ப் போக ஆரம்பித்தோம்.  […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 7 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

                                                                                      அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே                   பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை]       பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம் என்னும் பறவையும் இந்த மரத்தில்தோன்றிய பறவையே ஆகும். =====================================================================================                                     பைந்நாகம் இருநான்கும் அதன்வேரில் பயில்வனவே                   கைநாகம் இருநான்கும் அதன்வீழில் கட்டுபவே.          [152] பைந்நாகம்=நச்சுப்பை உடைய பாம்பு; கைந்நாகம்=துதிக்கை உடைய யானை] […]

பரகாலநாயகியின் பரிதவிப்பு

This entry is part 6 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

                                         பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் மிகவும் ஈடுபாடுகொண்டு 100 பாசுரங்கள் பாடியுள்ளார். மேலும் இத் தலத்து நம்பியை நாயகி பாவத்தில் அனுபவிக்க ஆர்வம் கொண்டு பெரிய திருமடலை இயற்றியுள்ளார். திருநரையூர் சென்ற பொழுது பரகாலநாயகியாகி இந்த நம்பியிடம் காதல் கொண்டதை விவரிக்கிறார். நம்பியின் அழகு.                          முருகன் என்றாலே அழகு என்று சொல்வது போல் நம்பி என்றாலும் நற்குணங்களும் வீரமும் […]

மூட்டம்

This entry is part 5 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல மூங்கில்தொட்டி வியாபாரிக்கும், சின்ன மூங்கில் குச்சிகள் கேட்டிருப்பார்கள். விலைக்கு வாங்கிப்போய் பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்தால் பாதி விலைக்கு கடையிலேயே எடுத்துக் கொள்வார்கள். நாலைந்து நாளாகவே ஊரில் ஒரு இறுக்கம் வந்திருந்தது. யாரோ இந்துக் கடவுளை […]