பூவில் ஒருபூவாய் அழகிற்கோரணியாய் அடியோ தாமரையிதழாய் அகம்பாவம் அறியாதவளாய் குணம் வெள்ளை நிறமாய் குறுநகையால் வெல்வாய்…! மகிழ்ந்தால் மங்கலப்புன்னகையாய்… மதியால் மாநிலம் காப்பவளாய்… அழுதால் ஆற்றிடை ஆம்பல் மலராய்… அதிர்ந்தால் நாற்றிடை நாதஸ்வரமாய்… அயர்ந்தால் தென்னங்கீற்றிடைப் பூவாய் உறைவாய். சீருடைச் சிப்பிக்குள் முத்தாய்… தேரிடைப் பூவுக்குள் தேனாய்… நேர்த்தியாய் பாடசாலையில் பயில்வாய் சீரிய குழந்தாய் சுறுசுறுப்பாய்..! ஜுமானா ஜுனைட், இலங்கை.
____________________ தென்னைமர உச்சி கிளைகள், அடர்த்தியான வெண் மேகம் நீல வான பின்னணியில் .. இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில் கிறுக்கல் கோடுகள் – கோணல் மாணலாய் தொங்கும் கேபிள் டிவி கம்பிவடங்கள்.. சாலை அமைக்கவே ஒரு துறையும் கொத்தி குதறவே மற்ற துறைகளும் வீட்டு ஜன்னலிருந்து கைநீட்டினால் சாலை தரை தட்டும் – மேன்மேலும் உயர்ந்து விட்ட சாலை-சீரமைப்புகளும்!! அவரவர்களுக்கு உண்டான காரணங்களோடு .. காற்றிலும் , அதிராத அளவான ஒயிலாக கிளையிலை அசைக்கிற அழகியல் […]
அதைப் போலொரு பறவையைப் பலியிட்டு படையலுடன் பிரார்த்தனனகளுடன் அண்ணாந்து வானம் நோக்கி அழைத்த படியிருந்தான். குறித்த நேரத்தில் அவ்விடத்தைத்தினம் வந்தடைகிற அது அன்று வரவே இல்லை. ஆளற்ற வானந்தரத்தில் நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த அவனை போலொரு அழுகிய ஒன்றை கொத்தி தின்று கொண்டிருந்தது அது . ரவிஉதயன் raviuthayan@gmail.com
தன் உறுதின் மீது கலைந்திருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளை சேகரிக்கிறேன் . நாளையின் மீது அவை இன்னும் நிர்பந்திக்கவில்லை இன்றைய இப்பொழுதைய கடக்கும் நிமிடத்தில் தனக்கு உண்டான கட்டமைப்பை சரி பார்த்து கொள்கிறது . இயங்குதலில் கவலை கொள்வதில்லை அது என் பிரபஞ்சம் பார்த்து கொள்கிறது . என் இருப்பின் என்றைக்குமான அவசியம் தன் எண்ணத்தின் உறுதியில் திளைத்திருப்பது வெறும் கற்பனை கொண்ட கனவல்ல என்பதை நிருபணம் செய்வதே . பகடை செய்யப்பட்ட வாழ்வு அல்ல மற்றவர்கள் […]
“” என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆலோசனை எதுவும் உதவாது காதலர் தமக்கு ! மலை நெடுவே ஓடும் நீரோட்டம் போலில்லை அவருக்குக் குறுக்கிடும் அணையின் திறம் ! குடிகாரன் உணர்ச்சி ஒரு ஞானிக்குத் தெரியாது ! காதலருக்குள் தம்மை இழந்தவர் அடுத்தென்ன செய்வார் என்றறிய முயலாதே ! மேற்பதவி யாளன் தன் பதவியைக் கைவிடுவான் தனியாகக் காதலியுடன் வீட்டில் மாட்டிக் கொண்டால் ! +++++++++ மலை ஊடே ஒருவன் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மையில் உழலும் என் தோழனே ! செல்வீகம் ஏழ்மைத் தீங்கை நிவர்த்தி செய்தாலும், வறுமைதான் ஆன்மாவின் பெருந்தன்மையைத் தோன்ற வைக்கிறது. துயர் ஏழ்மையின் உணர்ச்சிகளை மிதமாக்குகிறது. களிப்பு இதயத்தின் காயங்களை ஆற்றுகிறது. வறுமையும், துயரும் நீக்கப் பட்டால், மனித ஆன்மா தன்னலம், பேராசை சின்னகளாய்த் தெரியும் ஒரு சூனிய வில்லை போல் ஆகிறது.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) என் ஆத்மா […]
தோற்ற மயக்கம் தொற்றாகி மொட்டை மாடியில் மல்லாந்து கிடந்த கல்லூரிக் காலங்களில் அவளை வருணிக்க வாய்த்திருந்த நிலா காய்ந்திருக்கும் நிலா நுகர்ந்த முல்லையெனவும் என் நெஞ்சுக்குள் அடைபட்ட காலங்களே அகிலத்தாருக்கு அமாவாசை யெனவும் ஒளிந்தும் ஒளிர்ந்தும் நிலா நிலவியதை அவளோடு ஊடல் கூடல் என் ஒப்பிட்டும் கசிந்துருகிய காலங்களிலும் நிலா காய்ந்திருக்கும் கலைந்திறாத கூந்த லொதிக்கிய கையினூடே கழட்டியனுப்பிய கடைக்கண் பார்வை குறித்து கிறுக்கித் தள்ளிய கவிதைகளிலும் நிலா இருக்கும் மேலேப் பார்த்தபோது நிலா உதிர்ந்துகொண்டிருக்கும் பெள்ர்னமி! […]
சென்னை ஓவியங்கள் எஸ். வேலுமணி
சூரியன் உதிக்கும் கிழக்கில் தனது வாழ்வின் சூரியன் பறித்தெடுக்கப்பட்டமையால் இளமையிலேயே வாழ்க்கை முழுதும் இருண்டு போயுள்ள இன்னுமொரு இளம் தாயை கடந்த சில தினங்களுக்கு முன்னரான திருகோணமலைப் பயணத்தின்போது எமக்கு சந்திக்கக் கிடைத்தது. இது எம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அவரது நீண்ட கதையின் சுருக்கம். அவரது பெயர் ஆரியரத்னம் ரமணி. இருபத்தெட்டு வயதாகும் அவர் இரு பிள்ளைகளின் தாய். இளையவர் நிலுக்ஷன் முன்பள்ளி செல்லும் வயதில் இருக்கிறார். மூத்தவர் தனுஷ் மூன்றாம் ஆண்டில் […]