ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

This entry is part 21 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தெலுங்கிலிருந்து தமிழில் – கௌரி கிருபானந்தன் அட்டை ஓவியம் : ரோஹிணி மணி இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல. பொதுவுடைமைக் கட்சியில் ஒரு கால நிகழ்வை, வலிய மனிதர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூல் இது. காலப்பெண்ணின் வாழ்வு இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது. […]

புரட்சிக்கவி – ஒரு பார்வை

This entry is part 22 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

கோவை எழிலன் கடந்த நூற்றாண்டின் தலைச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பது ஆகும். பாவேந்தர் அவர்களுக்கு இக்காவியத்தின் பெயரே ஒரு சிறப்புப் பெயராகவும் அமைந்தது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டாலும் பாவேந்தர் கதை முடிவில் காட்சி அமைப்பை மாற்றி மக்கள் புரட்சி அமைவதாகக் காட்டியுள்ளார். இக்காவியத்தில் நாட்டின் அரசன் உதாரன் எனும் கவிஞனை தன் மகளுக்குத் தமிழ் கற்பிக்கத் தருவிக்கிறான். […]

முதுமையின் காதல்

This entry is part 23 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

ரமணி எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிக நாட்கள் இல்லை என்வசம். உயிருக்கு வயதில்லை எனினும் வயதான உடலைத்தான் போர்த்திக்கொண்டிருக்கிறது என் உயிர். அது சரி முதுமையின் ஆரம்பம் எந்த வயதில் என்று தீர்மானித்தாகிவிட்டதா? அரசாங்கம் வகுத்த எல்லைகள் தாண்டியும் எல்லைக்கு வெகு உள்ளேயும் பல உடல்களுக்குள் அல்லாடுகிறதே வயோதிகம்! இந்தக் கிழ நாட்களில் இழந்து போனவையும் போய் இழந்தவையும் சேர்த்துக் கொண்டவையும் கொண்டு சேர்த்தவையும் பேசித் தொலைத்தவையும் தொலைத்துப் பேசியவையும் கடந்து போனவையும் போய்க் […]

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015

This entry is part 24 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015 கம்பன் கழகம் காரைக்குடி – ஆகஸ்டு மாதக் கூட்டம் கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக நிகழ உள்ளது. பாராட்டு வழங்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை ப. சிதம்பரம் அவர்கள் முன்வந்துள்ளார்கள். சிறப்பிக்கக் கவிஞர் சொ. சொ. மீ சுந்தரம்அவர்கள் விழாவில் பங்குபெறுகிறார்கள் இது எட்டாம் தேதி ஆகஸ்டு […]

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு

This entry is part 25 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

மு. கோபி சரபோஜி நாளிதழகள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதி தான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து உண்மை நிலையை உரக்கப் […]