தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.

This entry is part 2 of 13 in the series 10 டிசம்பர் 2017

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் . நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்… “வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் […]

”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

This entry is part 3 of 13 in the series 10 டிசம்பர் 2017

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”மழையில் நனையும் மனசு” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார். ”மழையில் நனையும் மனசு” என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது […]

குருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை

This entry is part 4 of 13 in the series 10 டிசம்பர் 2017

வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழ் நாட்டை வசிப்பிடாகவும் கொண்டுள்ள ரேகா கோவிந்தராசா இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல், வணிக ஆய்வியல், முதுகலை வணிக நிர்வாகவியல், வணிக நிர்வாக ஆய்வியல் ஆகியனவற்றைக் கற்று தற்போது உதவிப் பேராசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு இனத்தின் குரலாக 65 பக்கங்களில் வெளிவந்துள்ள இவரது குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலில் […]

நிமோனியா

This entry is part 5 of 13 in the series 10 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதுதான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். பேக்டீரியா வகையில் முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே ( Streptococcus Pneumoniae ) , நீமோகாக்கஸ் ( Pneumococcus ) , […]

சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்

This entry is part 7 of 13 in the series 10 டிசம்பர் 2017

கருத்துக்கள் சங்கமித்த கலை – இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி நடந்த கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் அவர்களும் இலங்கையின் மூத்த படைப்பாளி சமூகப்பணியாளர் ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஸ்ணன் அவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டார்கள். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிட்னியில் Black town இல் அமைந்துள்ள பல்தேசிய கலாசார மண்டபத்தில் சங்கத்தின் நடப்பாண்டு நிதிச்செயலாளர் எழுத்தாளர் லெ. முருகபூபதியின் தலைமையில் […]

தொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

This entry is part 8 of 13 in the series 10 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. டாக்டர் பார்த் அவரின் மனைவியுடன் மிஷன் பங்களாவில் தங்கியிருந்தார். அதுபோன்று மொத்தம் நான்கு பங்களாக்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தன. அவற்றைக் கட்டி பராமரித்தவர்கள் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த சுவீடிஷ் மிஷன் சபையினர். அவர்களின் பிரதிநிதிகளாக திருப்பத்தூரில் அப்போது இரண்டு மிஷனரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவவர்தான் டாக்டர் பார்த். இன்னொருவர் சிஸ்டர் சோஞ்ஜா பெர்சன் என்னும் பெண்மணி. அவர்தான் விழியிழந்தோர் பள்ளியின் மேலாளர். அவர் ஒரு முதிர் […]

நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து

This entry is part 9 of 13 in the series 10 டிசம்பர் 2017

பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் கவலைப் படாதே அவனோட ஆசைக்கெல்லாம் தொணை நிக்கறவன். கட்டினவகிட்டயும் தோழிகிட்டயும் போயி அவன் சார்பாப் பேசறவன்; ====================== பாணற்கு உரைத்த பத்து—1 நன்றே பாண! கொண்கனது நட்பே— ததில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கௌவை எழாக் காலே! [தில்லை=ஒருவகை மரம்; அம்மரத்தின் பால் உடலில் பட்டால் புண்ணாகி விடுமாம்; கௌவை=ஊரார்க்குத் தெரிந்து அலர் தூற்றல்] […]

நல்ல நண்பன்

This entry is part 10 of 13 in the series 10 டிசம்பர் 2017

நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே எனக்கு ஒன்று ருசி என்றால் அவனுக்கும் அது ருசியே இப்படித்தான் நானென்று நான் சொல்வதும் என் நண்பன் சொல்வதும் ஒன்றே புறத்தை மட்டும் சொல்பவன் நண்பனல்ல அவன் அகத்தையும் சொல்வான் தப்பான பாதையில் அவன் முள் நல்ல பாதையில் அவன் புல் இன்று நல்ல பழம் நாளை […]

இரணகளம் நாவலிலிருந்து….

This entry is part 11 of 13 in the series 10 டிசம்பர் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா (விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…) மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் ! என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின் தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. « எழுந்திருடா, […]