ஸ்ருதி ரமணி ஏ, பாரதி…! பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட முயன்றவனே நீ விட்டுச் சென்ற அக்கினிக் குஞ்சை நாங்கள் இன்று தேடிக் கொண்டிருக்கின்றோம் வீரத்தைப் பறைசாற்றிய அது இன்று எங்களின் அவசியத் தேவை…
சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில் தனக்கான அழுத்தங்களைப் பதித்து கோடுகளில் கலயங்களின் தலைவிதி எழுதினான் குயவன். பின்பு நிலவின் இரவொன்றில் காந்தர்வக் கண்ணன்களை ராதைகளோடு உலவ விட்டான் உலக வீதிகளின் ஆடை விலக்கி. குயவனுள்…
மழை பெய்து கொண்டிருக்கிறது ரசித்துக் கொண்டிருக்கிறேன் நொறுக்குத் தீனியுடன்.. பாழாய்ப்போன மழை வெளியே செல்ல இயலவில்லை என்கின்றேன்.. தொலைபேசியில் அழைப்பவனிடம்.. நல்லது செய்யும் மனிதன் மட்டுமல்ல மழையும் சபிக்கப்படும் போல..
ஒருபக்கத்தில்..! கம்பன் பயிரிட்ட தமிழ்... காளிதாசன் நிறைத்த தமிழ்.. பாரதியார் வளர்த்த தமிழ்.. கண்ணதாசன் நீந்திய தமிழ்... எதிலும் தமிழே சுதந்திரமாய்..! கவிக்கெனவே .. உதித்திட்டாயோ பாரதி...! எட்டயபுரத்தின் கதாநாயகன் நீ...! அகத்தியரும் ஔவையாரும்…
கணேஷ் நானூறு மெல்லிய கதிர்கள் ஒருங்கிணைந்து ஒற்றைக்கதிரானது. திண்மை பெருகி ஒளியின் உக்கிரம் ஆயிரம் மடங்கானது. நேர்க்கோட்டில் பயணித்தது கதிர். எதிர்வந்த திடப் பொருள்கள் கிழிந்தன. திரவப்பொருள்கள் கொதித்தன. ஏழைச்சுவர் ஒன்று அதன் பாதையில்…
என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர்…
எங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் 'காந்தி சிலை இறங்கு'…
இரவின் முடிவில் புறாக்கள் பறந்தன. நாகங்கள் புற்றுக்குள் இரையோடு பதுங்கின. இரவின் சோம்பலை விரட்ட சூரிய கிரணங்கள் பாய்ந்தன. நதியெங்கும் புனிதங்கள் வாய் மூடிக் கிடந்தன. நிர்வாண சடலங்கள் சிதைகுள் வெந்தன. மழைத்துளி பட்டு…
சக்தி சக்திதாசன் எனக்குள்ளே என்னைப் பரப்பி அதற்குள்ளே அதனைத் தேடி எதற்காக இத்தனை ஏக்கம்? விடைகாணா வினாக்களின் முழக்கம் நினவாலே இசைத்திடும் சங்கீதம் கனவோடு கலந்திடும் சிலநேரம் முடிவோடு தொடக்கம் முடியாமல் ப்கலோடு இரவாகத்…
பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு (சென்ற வாரத் தொடர்ச்சி) வழிப் பயணிகள் பின்னே நடந்து செல் விளக்கேற்றிய சில விளக்குகள் அணைந்து…
துளி துளியெனத் தூளியில் ஆடிப் பாடுகிறது மழை. பக்கம் பக்கமாய் மணலில் எழுதி கடலில் சேர்க்கிறது காவியமாய். வரையும் சித்திரம் வளர்கிறது விரிகிறது இலையாய் மலராய் மரமாய்.வனமாய். காங்கிரீட் தளங்களில் விழுந்து எழுந்து காயமும்…
அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே -…
வறுத்தெடுக்க மனிதன் கொத்திக் குடிக்கப் பாம்பு இயற்கையும் சிதைக்க.... உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம்…