நள்ளிரவில் நனைந்திருந்த நிலையத்தில் நின்றது பேரூந்து முன்னிரவின் மழை மிச்சமிருந்தது மசாலாப் பால் கடையின் மக்கிப்போன கூரையில் மஞ்சள் தூக்கலாக யிருந்த மசாலாப் பாலில் மடிந்த ஈசல் பாலை மேலும் அசைவமாக்கியிருந்தது எடை குறைந்த பயணப் பொதியோடு ஈரத்தில் நடந்து என் வீடிருந்த சந்தின் முச்சந்தியை அடையவும் காணும் தூரத்தில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் மேடையிட்டத் திண்ணையில் கண்ணம்மா பாட்டி உட்கார்ந்திருந்தது கண்ணம்மா பாட்டி கதை சொல்லாது காதைக் கிள்ளாது பாதையில் செல்வோரை வதைக்கவும் செய்யாது […]
சிறகு இரவிச்சந்திரன். மயக்கம் என்ன செ.ரா. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ‘ சொந்தக் கற்பனை இல்லாதவர்களை, ஆங்கிலப் படங்களிலிருந்து ஒற்றி எடுப்பவர்களை நடுத்தெருவில் வைத்து அடிக்க வேண்டும் ‘ இதே வார்த்தைகள் இல்லை என்றாலும் இது போன்ற ஒரு தொனியில் சொல்லப்பட்டதாக நினைவு. ஆஹா இவர்தான் ஒரிஜினல் பார்ட்டி என்று மனம் துள்ளிக் குதித்தது. எல்லாம் மம்மி பார்க்கும்வரைதான். சமீபத்தில் சோனி பிக்ஸில் போட்டார்கள். அட! ஆயிரத்தில் ஒருவன் போல இருக்கிறதே என்று யோசித்தேன். அப்போதும் தமிழனை […]
சிறகு இரவிச்சந்திரன். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்காக எடுக்கப்பட்ட படம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கற்பனை, கருப்பு வெள்ளை, கலர் என்று பயணிக்கிறது படம். அறியப்பட்ட நடிகர்கள் வெகு சிலரே. எல்லாம் புதுமுகங்கள். ஆனாலும் யாரும் அப்படித் தோன்றவில்லை என்பது பலம். தொலைக்காட்சிக்கான படம் போல சில காமிரா கோணங்கள் மட்டுமே. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் இந்தச் சிக்கலைச் சந்திக்கின்றன. தவிர்க்க முடியாதது. கதாநாயகன், மற்றும் இயக்குனரே தயாரிப்பாளர்கள், முதன்மை நடிகர்கள். கதாநாயகி இல்லை. டூயட் […]
கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே ஸ்னானா”. இச்சடங்கில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின்மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தம்மேல் படும்போது சுப்பிரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைத்து தோல்வியாதிகளும் மற்ற பரிகாரபலன்களும் கிடைக்குமென்பதே அந்த நம்பிக்கை. இது காலம்காலமாக தொடரும் உற்சவம். இது போக, இன்னும் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் ‘கழிவுத்துணிகளை’ தலித்துகள் மட்டுமே சேகரித்து துவைத்து கொடுக்கும் […]
நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம். ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்) —————— எல்லா உயிர்களும் அடிப்படையில் புத்தர்களே தண்ணீரையும் பனிக்கட்டியையும் போல தண்ணீரில்லாமல் பனிக்கட்டி இல்லை ஏனைய உயிர்களிடமிருந்து பிரிந்த புத்தர்கள் இல்லை தமக்கு எவ்வளவு நெருங்கியது இவ்வுண்மை என்றறியாமல் தொலைவில் எங்கேயோ தேடுகிறார்கள்; பரிதாபம்! […]
வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் ஒழுகியது. “டங்..டங்…” தப்பாத தாள லயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துவிழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. பழசாகிப் போன கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு […]
1 சிறுகதை நிறையும் பொறையும் – வே.சபாநாயகம் – கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும் அறுபதை எட்டிப் பிடிக்காதவர்கள் – ஆணும் பெண்ணுமாய், கைகூப்பி வணங்குகிறார்கள். அப்பா, புதுமெருகுடன் மின்னுகிற பொற்றாலியை அம்மாவின் சிரத்திற்கு வலப்புறமாகக் கையைச் சுற்றி, அணிவிக்கிறார். அனசூயா அம்மாவின் நெஞ்சுக்கு நடுவில் மாங்கல்யம் வருகிற மாதிரி, பழைய தாலிக்கு மேலே பளிச்சென்று […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமுதாய வாழ்வு மேம்பாடு அடைவதற்குச் சமய வழிபாட்டு முறைகள் வழிகோலுகின்றன. எவ்வண்ணம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை நம் முன்னோர் வரையறை செய்துள்ளனர். யாருக்கெல்லாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இறைவனை வணங்குதல், அரசன் சான்றோர் ஆகியோருக்கு வணக்கம் செய்தல், பெரியவர்களை வணங்குதல் ஆகிய வழிபாட்டுப் பண்பாடுகளை வகுத்துக் கூறியுள்ளனர். நெடுந்தொகை என்று வழங்கப்படும் அகநானூற்றில் வழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் […]
அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் “ஏறக்குறைய சொர்க்கம்” சொல்ல வருவது இதனை தான் குமுதம் பத்திரிக்கையில் தொடர் கதையாக வெளி வந்த போது, வாரா வாரம் கத்தரித்து பைன்ட் செய்து, யாரோ வாசித்ததை பழைய புத்தக க்டையிலிருந்து கிடைக்க பெற்றேன். ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் […]