தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம். நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும். இந்திய சினிமா நூற்றாண்டை […]
மே 5 2001 இதழ்: Rewarding the Politicians Financially for their work – T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி செய்த சாதனை மற்றும் உயர் வரி வருவாய் அடிப்படையில் ஒரு தொகையை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தால் அப்போது நல்ல விளைவுகள் காணப்படும் என்னும் கட்டுரை. நகைசுவை மற்றும் வித்தியாசமானவை பகுதியில் வந்திருக்க வேண்டிய கட்டுரை. அரசியல் சமூகம் பகுதியில் வந்துள்ளது. கிஷோரும் […]
காசுக்கடை மீன்மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் குப்பு காத்துக் கொண்டிருப்பதாக ஏழுமலைக்கு தகவல் வந்தது. ரொட்டிக்கடைக்கு தேவையான மாவு மூட்டையை சைக்கிள் கேரியரில் வைத்துத் தள்ளiக்கொண்டு வந்தபோது சிக்னலுக்குப் பக்கத்தில் குப்புவே பார்த்து கைதட்டி கூப்பிட்டு நிறுத்தி விஷயத்தைச் சொல்லியனுப்பியதாக தெரிவித்துவிட்டுப் போனான் முத்துராஜா. அன்று இரவு கோயம்பத்தூருக்கு லோடு ஏற்றிக்கொண்டு கிளம்பவேண்டிய லாரிக்கு கிரீஸ் போட்டு ப்ரேக் சரிபார்த்துக்கொள்வதற்காக பட்டறையில் நின்றிருந்தவன் “இது ஒரு எழவு நேரம் கெட்ட நேரத்துல..” என்று சலித்துக்கொண்டான். இரும்புச்சட்டியில் ஸ்பேர் பார்ட்ஸ்களை […]
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் […]
குறிப்பு : பொதுவாக பீஷ்மர் இறுதி வரையில் துரியோதனன் பக்கமே இருந்தாலும் ரதசப்தமி அன்று பீஷ்மருக்காக அனைத்து மக்களும் தலையில் எருக்க இலை வைத்து அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு நீராடுகிறோம். என்ன காரணம் என்று மகாபாரத்தில் தேடினேன். விளக்கம் கிடைக்கவில்லை. யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கொல்ல அனுமதி கேட்கும் இடம் இதற்கு விடை சொன்னது. அந்த விடைதான் இந்த சிறுகதை. போர் தொடங்கி ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது.ஏதற்காக இவ்வளவு உக்கிரமான போர்? வெறும் ஊசி […]
வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் மகாபாரதத்தில் நாம் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரை ஹஸ்த்தினாபுரத்தின் அருகில் காண்டவம் என்ற பிரதேசத்தின் எல்லையில் இருந்த பெரிய காட்டின் அருகில் பாண்டவர்களுடன் சந்திக்கிறோம். காண்டவ வனம் எரிக்கப் படும் கதைகளை நாம் கேட்டால் அவற்றில் பாதி வெறும் கற்பனை என்பது தெளிவாகும்.உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். சுவேதகி என்றொரு அரசன் இருந்தான். அவன் யாகங்கள் புரிவதற்கு மிகவும் விருப்பம் கொண்டவன். ஒரு முறை அவனது யாக குண்டத்தில் எவ்வளவு […]
நான் சுமார் பதினைந்து வருடங்களாக மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கையான ” தமிழ் நேசன் ” ஞாயிறு மலர்களில் ” மருத்துவ கேள்வி பதில் ” பகுதி எழுதிவருகிறேன். இது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. வாசகர்கள் கேட்கும் சிக்கலான சில கேள்விகளுக்கு சரியான பதில் தர மருத்துவ நூல்களைப் புரட்டுவதும், தெரிந்த மருத்துவ நிபுணர்களை நாடுவதும் மனதுக்கு இதமானது. நான் மருத்துவம் படித்தது 1965 முதல் 1971 வரை இந்த 32 வருட இடைவெளியில் மருத்துவம் […]
ஷைன்சன் இத்திரைப்படம் பிரஞ்சுப் பாடகியான இடித் பியாஃபின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே பிரஞ்சுத் திரைப்படம் இது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது மற்றும் ஒப்பனைக்கான விருது). (இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் வெளிவந்த, வெளிவராத வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழில் இதுவரையில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய முழுமையான திரைப்படம் வந்ததில்லை. பெரியார், காமராஜ் என்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் […]
(1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா எல்லாமே ஓர் ஊர்வலம் தான், இந்தப் பிரபஞ்சமே நெடுந்தூரப் பயணம் தான் ! அளக்கக் கூடியது; ஒழுக்க விதிகளைப் பின்பற்றும் முழுமை நகர்ச்சி ! உன்னைப் பற்றி பூராவும் உனக்குத் தெரியுமா ? அற்ப மனிதரை அறிவிலி என்று விளிப்பீரா ? நற்பார்வை பெற உமக்குத்தான் உரிமை உள்ள தென உரைப்பீரா ? […]