கலை – இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ — உமர்கய்யாம் ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு ) ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, […]
– சேயோன் யாழ்வேந்தன் நன்றிகெட்டு மாமழை தூற்றுதும் நாகரிகக் கோமாளிக் கூட்டம். நீர்த்தடங்களை மறித்து மனைகளாக்கிய சுயநலம், வடிகால்களை பாலிதீனால் நிரப்பிய கொடூரம் மறைத்து மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள் பழுதடைந்ததுதான் காரணமென விதி எண் 110ன் கீழ் வெள்ளை அறிக்கை! குடும்பத்துக்கு ஓர் இலவசப் படகு அடுத்த தேர்தல் அறிக்கை! ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் இப்படித்தான் நிரம்பியிருக்கும் கடல்கள். seyonyazhvaendhan@gmail.com
டாக்டர் ஜி. ஜான்சன் 99. கங்கைகொண்ட சோழபுரம் அண்ணனும் அண்ணியும் குழந்தை சில்வியாயும் ஊருக்கு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது – கோகிலத்தைத் தவிர. அவளுக்கு அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாதே என்ற கவலை. அப்படியே அம்மாவுக்கு உதவுவதுபோல் வந்தாலும் என்னிடம் முன்புபோல் தாராளமாகப் பேசமுடியாது. ஊரில் அண்ணனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவர்தான் சுற்று வட்டாரத்தில் முதன்முதலாக கல்லூரி சென்று பட்டம் பெற்றவர். கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்புதானே. வள்ளுவர்கூட கல்விக்கு ஓர் அதிகாரம் ஒதுக்கி அதன் […]