யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)

This entry is part 13 of 23 in the series 21 டிசம்பர் 2014

சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் காணலாம். எவ்வளவு வேகத்தில் வெகு இயல்பாக முக பாவங்கள் மாறுகின்றன, எத்தனை உணர்வுகளை அவை சட்டென மாறி மாறிக் காட்டுகின்றன. அத்தனை அழகுடனும் துவளும் கைகள், விரல்கள், வித வித அழகான தோற்றங்களில் காட்சி தரும் உடல்வாகு, சட்டென அழகாக வடித்த சிலையென சலனமற்று உறைந்து காட்சி தரும் பயிற்சியின் லாகவம், அதே போல் […]

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

This entry is part 5 of 23 in the series 21 டிசம்பர் 2014

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.   பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு […]

தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3

This entry is part 14 of 23 in the series 21 டிசம்பர் 2014

    திரு.வையவன் அவர்களின் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழ் வரும் போது, பல நாள் பழகிய உறவுகளை விட்டு விலகுவதைப் போன்றதோர் உணர்வு. செங்கை. சொர்ப்பனந்தலிலும் ஒரு இயக்கத்தை துவங்க வேண்டும் என்ற ஜானகி அம்மாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்தேன். அங்கிருந்து திரு.வையவன் அவர்கள் அன்றாடம் செல்லும் பார்த்த சாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு எங்கள் தாயாரின் குலத் தெய்வமான பத்மநாப சுவாமிகள் கோவில். எப்பொழுதேனும் அவர் கோவிலில் இருக்கும் போது கைப்பேசியில் பேச நேரும் […]

சுசீலாம்மாவின் யாதுமாகி

This entry is part 7 of 23 in the series 21 டிசம்பர் 2014

  குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.   முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் […]

அந்த நீண்ட “அண்ணாசாலை”…

This entry is part 3 of 23 in the series 21 டிசம்பர் 2014

(ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு ஒரு அஞ்சலி) “இதழ்”இயல் என்றால் முத்தமும் காதலும் மட்டும் அல்ல. மூண்ட கனல் உமிழும் மானிட உரிமைக்குரலும் தான். பத்திரிகைக்குரல்களின் சுதந்திர சுவாசமே! கல்லூரிகளின் வயற்காட்டிற்கே சென்று இளைய எழுத்துகளின் நாற்றுகளை இலக்கிய மின்னல் ஊற்றுகளாய் உரு காட்டி வழி காட்டிய‌ புதுமைப்பாணி உனது பாணி. விகடன் “முத்திரை”யைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கலாம் சாஹித்ய அகாடெமிகளும் ஞான பீடங்களும். இந்த முத்திரைக்கு ஈடாக‌e ஏது இங்கே இலக்கியத்தின் அக் மார்க […]

மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு

This entry is part 8 of 23 in the series 21 டிசம்பர் 2014

                                         ரஸஞானி. “காலத்தை    பிரதிபலிப்பவர்கள் இலக்கியப்படைப்பாளிகள்.   அவர்களின் மறைவு    இழப்பாக கருதப்படும்பொழுது அவர்கள் குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக    அவர்தம் படைப்புகளை  மதிப்பீடு செய்யும் அரங்குகளை நடத்தி கலந்துரையாடும்பொழுது வாழும் படைப்பாளிகளும்  வாசகர்களும் பயனடைவார்கள். மறைந்த படைப்பாளிகளின்  ஆளுமையை அவர்களின் படைப்புகளிலிருந்தே இனம் காண முடியும்.” என்று கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் Darebin Inter Cultural Centre இல் நடந்த – சிட்னியில் மறைந்த மூத்த படைப்பாளிகள் காவலூர் ராஜதுரை, எஸ்.பொன்னுத்துரை ஆகியோருக்காக நடத்தப்பட்ட […]

சாவடி – காட்சிகள் 16-18

This entry is part 2 of 23 in the series 21 டிசம்பர் 2014

காட்சி 16 காலம் இரவு களம் உள்ளே சவுக்கார்பேட்டை சத்திரம் ஊமையனும், மனைவியும். வள்ளி: எத்தினி நேரம் தான் நடந்ததையே நினச்சுக்கிட்டு உக்காந்திருக்கப் போறீங்க? வந்து சாப்பிடுங்க.. சோறு பொங்கியாச்சு.. குழம்பு கூட வச்சிருக்கேன்.. வெண்டிக்கா இருந்தா போட்டிருக்கலாம்.. ஊமையன்: பசியே இல்லே வள்ளி.. பட்டணத்துலே தொழில் நடத்த கொத்தவால் சாவடிக்குள்ளே மொதல் அடி எடுத்து வச்சா, தாணக்காரன் கண்ணுலேயா பட்டுத் தொலைக்கணும்..நேரம்.. எக்குத் தப்பா பேசிடுவேன்னு பயத்துலே ஊமையனா உக்காந்தாலும் நம்ம விதி.. மனைவி: தாணாக்காரரு […]

கிளி ஜோசியம்

This entry is part 15 of 23 in the series 21 டிசம்பர் 2014

சீட்டாட்டம் எங்காவது நடப்பதை வழியில் பார்த்தால் சிலர் அப்படியே அங்கு நின்று விடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம் அவர்கள். இந்த சீட்டுப் பைத்தியங்களைப் போலவே சில கிரிக்கெட் பைத்தியங்களும் உண்டு. கிரிக்கெட் ஆடினாலோ அல்லது அதைப் பற்றி யாராவது பேசிக் கொண்டிருந்தாலோ அவை அப்படியே அவற்றில் மூழ்கிப் போய் விடும். அதுபோல குமார் ஒரு ஜோசியப் பைத்தியம். யாராவது கைரேகை பார்ப்பவர்களோ அல்லது கிளி ஜோசியக்காரர்களோ அவர்கள் தெருவின் வழியாய் வந்து விட்டால் […]

இது பொறுப்பதில்லை

This entry is part 16 of 23 in the series 21 டிசம்பர் 2014

கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன சிலைகள் சிதிலமான போதே மனித குலமே தாக்கப் படும் சமிக்ஞை வந்து விட்டது கொலையே இல்லா உலகம் காணும் கனவே பண்பாடு கொலைகாரர்களைக் கண்டிக்க உலகே ஒன்று படாவிட்டால் உலகே கொலைக்களம் ஆகிவிடும் நூற்றுக்கும் […]

பெஷாவர்

This entry is part 17 of 23 in the series 21 டிசம்பர் 2014

            பெஷாவர்   (1)   எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள்.   நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.   நெஞ்சில் இருள்.   (2)   குழந்தைகளுக்கு என்ன தெரியும்?   பட்டாம் பூச்சிகள் தெரியும்.   ஓடியாடி விளையாடத் தெரியும்.   பயங்கரவாதிகளையும் மனிதர்கள் என்று தான் தெரியும்.   எப்படி மனம் வந்தது சுட?   (3)   வகுப்பறைகளில் வார்த்தை கற்கும் குழந்தைகள் சுடப்பட்டார்கள். […]