சிசுபால வதம் இரண்டாம் பகுதி இன்று கூட நமது தேசத்தில் பெரிய மனிதர்களுக்கு மாலை அணிவித்து பூர்ணகும்ப மரியாதை அளிக்கப் படுவது ஒரு வழக்கமாகவே உள்ளது. தனிநபர் மரியாதைக்காக தேர்வு செய்யப் படும் மனிதர் அவருடைய பிறப்பின் காரணமாக தேர்வு செய்யப் படுவதில்லை. சமூகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கே காரணமாக அமைகிறது. ஒரு சபையில் அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுள் வயது முதிர்ந்தவர் தேர்வு செய்யப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் இந்த முறைமை […]
ஷாலி // இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.// இன்றைய ஹிந்து சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் மூடுமந்திரமே மேலுள்ளது.எப்படி? ஹிந்து வேத தர்மத்தின் அடிப்படை இரண்டு, 1. ஸ்ருதி.நிலையானது. 2.ஸ்மிருதிகள். காலத்திற்க்கேற்ப மாறுவது.ஸ்ருதி-அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும்,ஸ்ருதி-அந்த தத்துவங்களையொட்டி காலத்திற்க்கேற்ப ஏற்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக் காலத்திற்க்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/ வேத காலத்திலும் ஒருபால் புணர்ச்சியாளர்களுக்குள் […]
காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு ஓடித் தொட்டு விளையாடும். யாரும் தோற்கவில்லை. யாரும் ஜெயிக்கவில்லை. விழுந்து எழும். எழுந்து விழும். கூட ஓடி ஓடி மைதானமும் களைத்துப் போய் ஒரு மூலையில் போய் உட்காரும். குழந்தைகளின் விளையாட்டு கலையும். குழந்தைகள் விட்டுப் போன விளையாட்டைக் கண்டு கலையாது வெளியில் தட்டான் பூச்சிகள் விளையாடும். கு.அழகர்சாமி
ஜோதிர்லதா கிரிஜா சென்ற கட்டுரைகளில் ஒன்றில், தினமணி கதிரிலிருந்து திரும்பிவந்த ஒரு குறுநாவலை ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்தும் அது திரும்பிவந்தால் எழுதுவதையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு விரக்தியில் இருந்தது பற்றிச் சொன்ன ஞாபகம். எட்டு மாதங்கள் ஆன பிறகும் அது பற்றிய முடிவு தெரிவிக்கப்படாத நிலையில் அது திருப்பப்பட்டுத் தபாலில் தவறியிருந்திருக்க வேண்டும் என்று தோன்றியதில் விரக்தி மேலும் மிகுந்தது. ‘என் கதை என்னவாயிற்று?’ என்று எழுதிக் கேட்பதற்கும் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. எனினும் தயக்கத்தை […]