‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 2 of 12 in the series 27 டிசம்பர் 2020

கவிதையின் சாவி முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும் கற்களாகத் தலைக்குள் அடுக்கித் தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும் மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும் நூற்பிரிகளையும் சுவராக்கிக் தரையாக்கிக் கூரையாக்கிக் கட்டும் கவிதைவீட்டுக்குக் கதவிருப்பதே அபூர்வமாக, கருத்தாய் சாவி கேட்கிறாய் அருவ மேடுபள்ளங்கள் அறைகளாக மூடியிருக்கும் உன் என் உள்ளங்கைகளில் பலநூறு திறவுகோல்கள் உருக்கொண்டவாறிருக்க முறிந்த சிறகுவிரித்துப் பறந்து உள்ளே புகத் தத்தளித்துக்கொண்டிருக்கும் கவியின் வீட்டுக்குள் குவித்துவைத்திருப்பதெல்லாம் […]

இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது

This entry is part 1 of 12 in the series 27 டிசம்பர் 2020

      இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ‘முப்பெரும் விழா’ மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளிலும் பல நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு உரிய எழுத்தாளர்களுக்கு இந்த விழாவில் விருதோடு பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.       அந்த விதத்தில் இந்த வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘முப்பெரும் விழா’ மேடையில், இந்த வருடத்திற்கான ‘தமிழ் இலக்கிய விருதுகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த வருட ‘முப்பெரும் விழா’ […]