‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.

This entry is part 1 of 31 in the series 2 டிசம்பர் 2012

    இது என்னுடைய முதல் நாவல். தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை.  எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. […]