அதிகாரப்பரவல்

This entry is part 9 of 11 in the series 3 டிசம்பர் 2017

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது.  கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும் குரல்களின் நிலவறைகளில் நிரம்பிவழிகின்றன கூராயுதங்களாய் வன்மம் நிறைந்த வக்கிரம் பிடித்த வார்த்தைகள். என்றும் விநியோகமும் விற்பனையும் ஏறுமுகமாகவே.  நியாயத்தராசுகளின் மொத்த விற்பனையாளர்களாய் தம்மை நியமித்துக்கொண்டிருப்பவர்களும் மறவாமல் எடைக்கற்களின் அடியில் ஒட்டிவைக்கிறார்கள் சிறியதும் பெரியதுமான புளிமொந்தைகளை. துலாக்கோலைப் பிறரறியாமல் ஒரு பக்கமாய் […]