வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

 (Children of Adam) ஒரு மாநகரை நான் கடந்த சமயம்   (Once I Passed Through a Populous City) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பெருநகர் ஒன்றைக் கடந்த போது, ஒரு சமயம் என் கண்கள் கண்ட காட்சிகள், கட்டடக் கலைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள், பதிவு செய்ய எதிர்காலப் பயன்பாட்டுக்கு என் மூளையில் பதித்து வைக்க நினைத்தேன் ! எல்லா வற்றுக்கும் மேலாய் அந்நகரின் […]

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது. சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான்.  பிரசவ அனுபவம்தான்.  ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில்  கர்வம் […]

தினம் என் பயணங்கள் – 6

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்த காட்டும் மலர்களைப் போலநிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும் ! – வைரமுத்து. தினம் என் பயணத்தில் நான் மகிழ்ச்சியாய் கலந்து கொண்ட இரு நிகழ்வுகளைப் பற்றி பதிவிட வேண்டும் என்று முன்பு குறித்திருந்தேன். தீடீர்மாற்றம் போல் நிகழ்ந்த ஒரு நிகழ்வு மகிழ்ச்சியைப் புறந்தள்ளியது. இரு இனம் புரியாத வலி மனதை ஆட்கொண்டு விட மன அழுத்தத்தின்பாற் ஈர்க்கப்பட்டேன். என் பேஸ்புக் கணக்கை யாரோ களவாடிவிட்டார்கள். அப்படிக் களவாட முடியுமா என்பது குறித்து […]

பிழைப்பு

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறு எனது இயலாமையின் வெளிப்பாடு பஞ்சத்தில் அடிபட்டது போல் பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன நைந்த புடவையின் முந்தானையால் கண்ணீரைத் துடைத்து விடுகிறாய் வெள்ளிக் கொலுசை காகித பொட்டலத்தில் மடித்து கைகளில் திணிக்கிறாய் வாழ்க்கை கடல் எங்கு நம்மை கரை சேர்க்கும் எனத் தெரியாமல் பேருந்தில் மொழி தெரியா ஊருக்கு பயணித்துக் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      47,கடவு​ளைக் கண்ட ஏ​ழை……………………      “​தெய்வம் இருப்பது எங்​கே………….? ​தெய்வம் இருப்பது எங்​கே……….? அது இங்​கே அது எங்​கே…?​வே​றெங்​கே…? வாங்க…வாங்க,,,என்னங்க இப்பவும் பாட்​டைப் பாடிக்கிட்​டே வர்ரீங்க…என்ன ஒங்களுக்குப் ​போனவாரம் நான் ​கேட்ட ​கேள்விக்கு வி​டை ​தெரிஞ்சுருச்சா…? என்னது ​தெரியலயா…?அப்பறம் பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு வர்ரீங்க…? கடவு​ளைக் கண்டவங்க யாருன்னு ​கேக்குறீங்களா…? […]

ஹாங்காங் தமிழ் மலர்

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

Dear all, This is the second issue of ஹாங்காங்  தமிழ் மலர்.  Thanks for the support for January Issue.  This is small effort to encourage the Tamil writers in Hong Kong. More than 150 people had viewed it. This month issue is a Photo issue as we had lot of celebrations this month. Please click the […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 23

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

மே 4, 2003 இதழ்: எதிர்பாராத அடி- நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு- அ.முத்துலிங்கம்- “நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி – நடக்கற காரியமா?” www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305043&edition_id=20030504&format=html பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 1- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷத் அறிவியலைப் பரப்பும் இயக்கம் மட்டுமல்ல SCIENCE FOR SOCIAL REVOLUTION என்ற நோக்கில் பல பிரஸ்சனைகளை அணுகிப் பணியாற்றி வருகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305044&edition_id=20030504&format=html ) அர்ஜெண்டினா ஆகி விடுமா இந்தியா? – […]

குலப்பெருமை

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. நான்காவது தலைமுறையாக அதில் வாழ்கிறார். கிழக்கு முனையில் இரண்டு தடுப்புகள் பூட்டியே கிடக்கின்றன. மேற்கு முனையில் மூன்று தடுப்புகளில்தான் புழக்கம். ‘த.சொ.அ. தனுஷ்கோடி நாடார் மரம் ஓடு வியாபாரம்’, ஏழெட்டு ஏக்கர் விவசாய நிலம் இவைகள்தான் வருமானம் தரும் சொத்து. மனைவி காமாட்சி அம்மாள். அவரின் ஒரே கொள்கை. ‘யார் எங்கு போனாலும் சாப்பிட […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.

This entry is part 6 of 20 in the series 23 பெப்ருவரி 2014

கடோத்கஜனின் மரணத்தை வருணிக்க வந்த  கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை நிருவுகிறார். இடும்பன் என்ற அரகனுக்கு இடும்பி என்ற பெயரில் ஒரு சகோதரி இருக்கிறாள். ஒரு சமயம் இடும்பனைப் போரிட்டுக் கொல்லும் பீமன் இடும்பியை மணந்து கொள்கிறான். ( என்னிடம் கேட்டால் பீமன் இடும்பி இருவரும் சரியான இணை என்று சொல்வேன் ). அவர்கள் இருவருக்கும் பிறக்கும் மகனுக்கு கடோத்கஜன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவனும் வளர்ந்து ஒரு இளைய அரக்கனாகத் திகழ்கிறான் […]

ஒரு மகளின் ஏக்கம்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா என்று பகிரங்கமாகச் சொல்ல வைத்து, ஊர் அறிய தன்னை மகளாக அவரை ஏற்று கொள்ள வைப்பதுதான். அவளுடைய அப்பா யார் என்று அவள் அம்மா சுந்தரவல்லி கடைசி வரைக்கும் சொல்லவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதே ஊரில் அவர் இருக்கிறார். […]