இடம் : மெட்ராபோல் ஹோட்டல் நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 – தேனீர் வரவேற்புரை : கோபால் ராஜாராம் முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு உரைகள் : முனைவர் முத்து மோகன் வ. கீதா ஸ்டாலின் ராஜாங்கம் 15 நிமிட இடைவேளை இரண்டாவது அமர்வு : சமயவேல் விருது வழங்கும் விழா உரைகள்: சா தேவதாஸ் ச தமிழ்ச்செல்வன் எஸ் ராமகிருஷ்ணன் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை வாசகர்கள் விதவிதமான கவிதைகளைப் படித்து ரசிக்கிறார்கள். எந்த விதமான மொழி நயங்களும் இல்லாத யதார்த்தக் கவிதைகளும் பலரால் எழுதப்படுகின்றன. நகுலன் , விக்ரமாதித்யன் , ரவி சுப்ரமணியன் , ஜீவி , இளம்பிறை எனப் பலர் யதார்த்தக் கவிதைகள் எழுதியுள்ளனர். நகுலன் கவிதைகளை எதிர் – கவிதைகள் [ anti – poetry ] என வகைப்பபடுத்தலாம். யதார்த்தக் கவிதை உரைநடை போலத்தான் இருக்கும். வழக்கமான உரைநடைக்கும் இதற்கும்வித்தியாசம் உண்டு. நகுலன் கவிதைகளில் […]
சுயாந்தன் “ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து” என்கிற செழியனின் எழுத்துக்களை வாசித்திருந்தேன். சகோதரப் படுகொலைகள் உச்சம் பெற்றிருந்த 1986-1987 காலத்தில் தான் உயிர்தப்பிய சம்பவங்களைச் செழியன் எழுதியுள்ளார். இது ஈழத்து இலக்கியத்தில் முக்கியமான ஆவணம் என்றுதான் சொல்லவேண்டும். இதில் செழியன், “அவர்கள்” என்று குறிப்பிட்டது விடுதலைப் புலிகளைத்தான். இதற்குக் காரணம் எண்பதுகளில் புலிகள் இயக்கம் சகோதரப் படுகொலைகளை அதிகம் நிகழ்த்தி பல ஈழப் போராட்ட இயக்கங்களைத் தடைசெய்துமிருந்தனர். இக்காலத்தில் இவர்கள் சரியான தலைமைக்கு உட்படாது குழுக்குழுவாக இயங்கினர். அல்லது […]
[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் ! உலகின் மிகக்கூரான அந்த ஆயுதம் அழகானது தொட்டால் மென்மையானது செயல்படும் போது மட்டும் சில நேரங்களில் மிக அற்புதமாகவும் பல நேரங்களில் மனம் கிழிக்கும் பேராயுதமாக மாறிவிடும் அது கண் காணாத தீயால் நிரம்பியிருக்கிறது பெண் மனத்திலும் ஆண் மனத்திலும் மாறாத வடுக்களை விட்டுச் செல்கிறது மனம் கிழித்தல் அதன் வாடிக்கை நாக்கு ! கிடக்கும் இடம் வற்றுவதில்லை எப்போதும்… இதன் பயன்பாடு விசித்திரங்களில் சோதனைகளில் நல்ல […]
இல.பிரகாசம் விம்மி விம்மிச் செத்துக் கொண்டிருக்கிறது. அதன் அருகில் நிற்க நிற்க எனக்குக் கேவலமாகவும் அருகில் இருந்து விலகிச் செல்ல எனக்கு பயமும் தொற்றியது. சட்டெனச் சட்டென விம்மி விம்மிச் சாகும் நிலைக்கு வந்துவிட்டது ஒளி வெள்ளம் பாயப் பாய ஒழிந்து போனது இருளுக்கான அமைதியின் ஆற்றாமை -இல.பிரகாசம்
“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்[து] உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோ[டு உறவேல் நமக்கிங்[கு] ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்” இது ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்தெட்டாம் பாசுரம் ஆகும். கடந்த இரு பாசுரங்களில் ஆயர்குலப் பெண்கள் தாங்கள் நோன்பு நோற்பதற்கான உபகரணங்களையும் சில சன்மானங்களையும் பெற்றார்கள். “இவர்கள் ஊராருக்காக […]
-எஸ்ஸார்சி சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது ‘The idea of India’ என்னும் அற்புதமான நூல். இதனை ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது. இப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர்.மூல மொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழி பெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் […]
டாக்டர் ஜி.ஜான்சன் 210. இன்ப அதிர்ச்சி மருத்துவப்பணி வழக்கம்போல் சிறப்பாக நடந்தது. மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். கலைமகள்தான் என்னுடன் திருப்பத்தூரில் இருந்தாள். கlலைசுந்தரி தஞ்சாவூர் போர்டிங்கில் தங்கி பயின்று வந்தாள். அந்த போர்டிங்குக்கு அண்ணன் பொறுப்பாளராக இருந்தார். அண்ணன் அப்போது தரங்கம்பாடியில் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். அவருடைய பால்ய நண்பரான தெம்மூர் மதியழகனை விடுதி காவலராக அமர்த்தியிருந்தார். அண்ணனும் மதியழகனும் ஒரே வயதுடையவர்கள். மதியழகன் தெம்மூர் பள்ளியில் ஆறாம் வகுப்புடன் நின்றுவிட்டவர்.அதன் […]
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க நீரிழிவுக் கழகம், ” நீரிழிவு உள்ளது மாரடைப்பு உண்டான ஒருவர் அடுத்த மாரடைப்புக்குக் காத்திருப்பதற்கு சமமானது ” என்று எச்சரிக்கிறது.ஆகவே நீரிழிவு நோயாளிகள் இருதயங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது. […]
நாகரத்தினம் கிருஷ்ணா இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள் வந்துவிடுகின்றன. மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டிய நெருக்கடி. ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து, கூடாது. எவ்வித முற்சாய்விற்கும் இடம் தராமல் ஒரு படைப்பை அணுகுவதற்கு வசதியாக, உரிய அவகாசத்தை வாசகர்களுக்கு அளித்த பின்னரே விமர்சனங்கள் வரவேண்டும். பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எப்படி தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே […]