புதுக்கவிதையில் சமுதாய சிந்தனைகளைத் தூண்டிய தொகுப்பு “நெருஞ்சி”. இதன் ஆசிரியர் கால காலன். எல்லாந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் படைத்திருக்கும் இவர் தனது சொந்தப் பதிப்பகத்திலேயே இதை வெளியிட்டிருக்கிறார். விலை ரூ 75. 75 கவிதை கொண்ட இந்த கவிதைத் தொகுப்பு சமுதாயத்தின் அவலங்களைச் சுட்டி நெருஞ்சி முள்ளாய்த் தைக்கிறது. இதன் முன்னுரையில் கவிப்பேரரசு வைரமுத்து இதைக் குறிஞ்சிப் பூக்கள் எனக் குறிப்பிட்டது தகுமே.. ஏனெனில் சமுதாய நோக்கோடு படைக்கப்படும் கவிதைகள் அரிதான காலகட்டத்தில் இந்தத் தொகுப்பு நம் […]
எச்சத்தாற்காணப்படும் உட்கார உறங்க களிக்க இசை பாட கூடு கட்ட முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உணவுகொடுத்து பசியாற்றிய மரம், விழுங்கிய பழத்தின் விதையை பிறிதொரு இடத்தில் எச்சம் வழி ஊன்றச்செய்த பறவை. —————- உருப்படியான கவிதை சலவைக்குச்சென்று திரும்பிய துணிகளில் போடாத என் உருப்படியைத்தேடுவது போல இதழ்களுக்கு அனுப்பாத என் கவிதைகளை அதன் பக்கங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். — சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
கறுப்பு நிறத்தில் நீண்ட கழுத்தை மூடிய அங்கியும், இடுப்பில் இறுகச் சுற்றி பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த கயிறும் தலையில் கிரீடம்போல ஒரு தலைப்பாகையும் அணிந்து நன்கு சிவந்த தோலுடன் எதிர்பட்ட ஆசாமியைப் பார்க்க வியப்பாக இருந்தது. தோல்வியாதி பிடித்த மனிதன்போலிருந்தான். கையை உயர்த்தி ஆசீர்வதித்தான், அதை ஏதோ கெட்ட சகுனம்போல உணர்ந்தார். 16. நேற்று அணில் கடித்த மாம்பழத்தை எவருடன் பங்கிட்டுக்கொண்டாயென்று கேளுங்கள், மூன்று நாட்களுக்கு முன்பு பல்லாங்குழி ஆட்டத்தின் முடிவில் வீட்டிற்குக்கொண்டுவந்த சோழிகள் எத்தனையென்று கேளுங்கள் அல்லது […]
புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின் அழகியலையும் அதன் ஆன்மாவையும் சுவைத்திருந்ததாலும், அந்த “சுட்ட சட்டி சட்டுவத்தில்” கவிதையின் ஆன்மா கொஞ்சம் ஒட்டியிருந்தது. ஆனால் நமது காலத்தில் புதுக் கவிதை என்றும் நவீன கவிதை என்றும் பின்நவீனத்துவக் கவிதை என்றும் […]
சு.சமுத்திரம் =========== எழுத்து நிறைய கடல் உண்டு. ஒரு துடுப்பு தேடும் துடிப்பு உண்டு. பி.எஸ் ராமையா ================ மணிக்கொடியை கொடி அசைத்து ஓட்டியவர் இவரே. சாவி ==== மாற்றிப்படியுங்கள். அமெரிக்காவுக்கு “விசா” இவரது “வாஷிங்க்டனில் திருமணம்” மணியன் ======== ஆனந்த விகடனில் அங்குலம் அங்குலமாய் ஊர்ந்த எறும்பு. ஸ்டெல்லா புரூஸ் ================= காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் நாவல்களில் காதலுக்கு துடிப்புமிக்க கண்கள் தந்தவர். டாக்டர் லட்சுமி ============== பெண்கள் என்றாலே குத்துவிளக்கு தான் என்று […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா என் பெற்றோர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். ஆனால் அவர்கள் அந்தச் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனத்தார். அவரது திருமணம் ஆஸ்திரேலியாவில் மட்டும் அங்கீகாரம் பெற்றது. ஆனால் இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை ! என் தாய் என் தந்தையின் இறந்த மனைவிக்குத் தங்கை […]
வருமானவரித் துறை இணைய தளத்தில் பெறப்பட்ட ஃபார்ம் பற்றிய மாதிரியை கீழே பாருங்கள், அதில் டிடக்டர் பெயரிடத்தில் இருப்பதை… குசும்பு என்று சொல்வது தவிர என் சொல்ல… https://www.tin-nsdl.com/form-16a/form-16a-overview.php அதில் கீழாக உள்ள லிங்கைத் தட்டுங்கள்…
(கட்டுரை : 2) [Safe Storage of Nuclear Radioactive Wastes] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: இந்தியரில் சிலர் அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் இயக்கத்தை அறவே வெறுத்து வருகிறார். சிலர் அவற்றிலிருந்து வெளிவரும் பேரளவு வெப்பசக்தியில் மின்சாரம் உற்பத்தி செய்வதை வரவேற்கிறார். 1974 முதல் அணு ஆயுதங்களைத் தயாரித்து இந்தியா அண்டைப் பகை நாடுகளைப் பயங்காட்ட அணு ஆயுதங்களைத் தேசியப் பாதுகாப்புக்குப் பதுக்கி வைத்துள்ளது. கடந்த […]
எஸ்ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக பாராட்டு விழாவில் தமிழகக்த்தின் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். பெருமைக்குரிய விஷயம் தான் இது. எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கௌரவம் தமிழ் நாட்டில் என்ன தவம் செய்தனை என்று பாடலாம். ஆனால் அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஞானசம்பந்தம் இன்ன பிற பிரபலங்கள் எஸ் ராமகிருஷ்ணன் படைப்பை ஆழப் படித்து ஆய்வு செய்து பெருமை கொண்டாட வந்தார்களா அல்லது சூப்பர் ஸ்டாரின் அருகாமையில் நானும் இருக்கிஏன் என்று ஆஜர் […]
பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால் பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் தடங்களை அழியாமல் பாதுகாக்கும் செயல் என்று வருகிறபோது எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் மனசு சோர்ந்துதான் போகிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி அவசியந்தான். ஆனால் ஒவ்வொரு சாதாரண ஊருக்குமேகூட ஒரு பின்னணியும் அதற்கென்றே ஒரு பிரத்தியேக வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதுதான் முறையாக இருக்கும். அதிலும் சென்னை […]