ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ——————————————- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012 *அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்மணவாளன் 18, பத்மாவதி நகர் மாதவரம் பால் பண்ணை சென்னை-600 051 செந்தமிழ் […]
பத்து நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பதினாறு வகை உணவு கிடைத்த மாதிரி இருந்தது எனக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு மின்னஞ்சல். தமிழ் ஸ்டூடியோ டாட் காம் எனக்கு அனுப்பியது. ‘ ரவி சுப்ரமணியம் மற்றும் நான்கு பேர்.. ஆஸ்கார் திரைப்பட விழா. மாலை ஆறுமணி, முனுசாமி சாலை, கே கே நகர். ‘ ரவி சுப்ரமணியத்தை நான் இலக்கியக் கூட்டங்கள் வாயிலாக அறிவேன். ஆஸ்கார் திரைப்படங்களைப் பற்றிய, ஒரு ஆய்வுக் கூட்டமாக இருக்கும் என்று நினைத்து, கதவிலக்கம் […]
சிறகு இரவிச்சந்திரன் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதுவும் உபயம் தமிழ்ஸ்டூடியோ தான். நேற்று ( 19.2.2012) மாலை 7 மணிக்கு சப் டைட்டிலுடன் போட்டார்கள். கதைப் போக்கு புரிய இது மிகவும் உதவியாக இருந்தது. நாமொன்றும் வெள்ளைக்கார துரைகள் இல்லையே. அதனால்தான். கேல் பெண்டர் ஒரு எழுத்தாளன். அவனுடைய நிச்சயிக்கப்பட்ட காதலி அவனை ஹாலிவுட் படங்களுக்குப் பணிபுரியச் சொல்கிறாள். ஆனால் அவனது கவனம் முழுவதும், அவன் எழுதும் முதல் நாவலில். காதலியின் பெற்றோர் பாரிஸில் […]
இணையத்தில் இந்தப் படத்தின் முன்னோடியான, பத்து நிமிடக் குறும்படத்தைப், பார்த்ததாக ஞாபகம். ஆனால், அந்தச் சுவடே இல்லாமல், இதை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. தற்கால இளைஞர்களின் காதல் விவகாரங்கள், அந்தக்காலம் போல் இல்லை என்பதை வலிக்காமல் சொல்லியிருக்கிறார்கள். அருண் ( சித்தார்த் ) பார்வதியை ( அமலா பால் ) காதலிக்கிறான். நடுவில் அடிக்கடி ப்ரேக் அப். ஆனாலும் கடைசியில் சேர்ந்து விடுகிறார்கள். இதிலென்ன புதுமை என்கிறார்களா? கையாண்ட விதத் தில் தான் புதுமை. ஆரம்ப அரைமணி நேரம், […]
தமிழ்த் திரையுலகில் இப்போது ஒரு அதிர்ச்சியான டிரெண்ட் வந்திருக்கிறது. கையில் ஒரு ஐம்பது லட்சம் இருந்தால் போதும், தன் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்த, ஏதாவது ஒரு விசயத்தை தினமும் நினைத்து, அதை ஒரு வெறியாகவே ஆக்கிக் கொண்டு, கொஞ்சம் கூட முன்னனுபவம் இல்லாமல், ஒரு திரைப்படத்தை எடுத்து விடுகிறார்கள். ஒரு திரைப்படம், பெரிய சமூக மாற்றத்தை ஏற் படுத்திவிடும் என்று, தப்பாகக் கனவு கொண்டிருப்பவர்களில் பாலனும் ஒருவர் என்பது இந்தப் படத்தைப் பார்த்தவுடன் தெரிகிறது. கிராமங்களில், அவலை […]
விவேக் ஷங்கர், ஒரு நல்ல எழுத்தாளராக, மறைந்த நடிகர் கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டு, பரிமளித்தவர். கோபாலகிருஷ்ணன் இருந்தவரை, அவரைச் சார்ந்தே இருந்தார். 30 நாளும் நாடகம் என்று, அவர் எழுதிய ஒரு நாடகத்தை, கோபாலகிருஷ்ணன் நாரத கான சபா மினி ஹாலில் நடத்தியும் காட்டினார். என்ன! கூட்டம் தான் இல்லை. ஷ்ரத்தாவின் முதல் நாடகமான தனுஷ்கோடியும் இவர் எழுதியதுதான். பரவலாக வரவேற்பு பெற்ற நாடகம் அது. பிரய்த்னா என்னும் அவரது நாடகக் குழு சார்பில் இன்று ( […]
சீதாலட்சுமி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ..- வாழ்வியலின் வழிகாட்டி —————————————————- எட்டயபுரத்தில் பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள தெருவில் ஓர் சிறிய வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருவர் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். காலைப் பொழுது. கிணற்றை யொட்டி ஓர் முருங்கை மரம், தள்ளி ஓர் வேப்பமரம், சில காட்டுச் செடிகள். சுற்றி வந்த கண்களுக்கு அக்காட்சி நிறைவைக் கொடுக்கவில்லை. வானத்தைப் பார்த்தார். காணி நிலம் வேண்டும். பத்து பதினைந்து தென்னை மரங்களாவது […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com காலங்காலமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொண்டுதான் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் பல துரோக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. துரோகம் செய்பவர்கள் துரோகிகள்என்று வராலாற்று அறிஞர்களால் அடையாளப்படுத்தபடுகின்றனர். மனித இனத்தில் மட்டுமே இத்துரோகம் என்பது மிக எளிதாக நிகழ்கின்றது. மனித இன வரலாறு தொடங்கியதிலிருந்தே இத்துரோகங்கள் நிகழ்ந்துள்ளன. இத்துரோகத்தை, ‘‘கூட இருந்தே குழிபறிப்பது என்றம், வஞ்சனை என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு நடந்து கொள்பவர்களை இறைவனும், சமுதாயமும், மனச் […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> நாங்கள் பிளாக்ஸ்டேபிளை அடைகிறோம். ராய்க்காக ஒரு கார், ரொம்ப அலங்காரமாயும் இல்லை, எளிமையாயும் இல்லை, காத்திருந்தது. சாரதியிடம் எனக்காய் ஒரு குறிப்பு… மறுநாள் திருமதி திரிஃபீல்டுடன் மதிய உணவுக்கு வாருங்களேன் நீங்கள். நான் ஒரு வாடகைக்கார் பிடித்து பியர் அன்ட் கீ ஓட்டலை அடைந்தேன். ராய் சொன்னார். இப்ப முன்பக்கமாகவே புது மரைன் ஓட்டல் ஒன்று வந்திருக்கிறது. வசதிகள் அதிகமான பெரிய விடுதி அது, என்றாலும் எனது பால்யகாலத்தில் […]
இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் போய்விடு. நான் போய் இரை தேடிக்கொண்டு வருகிறேன்’’ என்று ஹிரண்யனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றது. ஏதோ ஒரு காட்டுக்குப் பறந்து போயிற்று. அங்ளே ஒரு புலி கொன்று போட்டிருந்த காட்டெருமையைக் கண்டது. வயிறு நிறைய அதைத் தின்ற பிறகு, செம்பரத்தைப்பூபோல செக்கச் செவேலென்றிருக்கும் மாமிசத் துண்டம் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பிந்து, ‘’ஹிரண்யனே; […]