அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான். மினிலாரி கோர்ட்டர்சின் வாயில் பகுதியில் முன்பாக நின்றுகொண்டது. ஆசாரி லாரியின் முன்பக்கத்தில் இருந்து இறங்கி வந்து […]
“என்னப்பா ஸ_ப்பரான டீ-சர்ட் போட்டிருக்கே..” “ஆமாம் சுரேஷ்.. எனக்கு பேஸ்புக் போட்டி ஒண்ணுல டீ-சர்ட் பரிசாக கிடைச்சது” “என்ன பேஸ்புக் போட்டியா? அதுல பரிசா? அது எப்படி?” “காதே பசிபிக் விமான நிறுவனம் பேஸ்புக்ல்ல சுனாமி வந்த ஜப்பான் பக்கமா வியாபாரத்தைப் பெருக்க ஒரு போட்டி நடத்தினாங்க. ஹாங்காங் மக்கள் ஜப்பான் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும், ஜப்பான் மக்கள் ஹாங்காங் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும் பேஸ்புக்கிலேயே பதிய வேண்டும். அதில் நல்லப் பதிவுகளுக்குப் பரிசுன்னு […]
இருபதாம் நூற்றாண்டில் வெளியான “குருவியின் வெற்றி” என்னும் கவிதைத் தொகுதி “ஷிங்கிசி தகஹாஷி” என்னும் ஜென் சிந்தனையாளரின் படைப்பாகும். சமகாலத்திய ஜப்பானியக் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். இவரது கவிதைகளில் சிலவற்றை வாசிப்போம். ஓசையில் ஒரு வனம் _______________ மேலெழும் புகையில் பைன் மரம் அசைகிறது ஓசையில் ஒரு வனம் டஃபோடில் பூக்களை நதி ஒரு கண்ணாடி போலப் பிரதிபலிக்கும் இடத்தின் என் கால்கள் தாமே தோற்கின்றன ஒரு குளிர் காற்று ஸஸாங்கா பூக்களின் வெண்மை நினைவுகள் வெதுப்பான […]
கனடியத் தமிழரின் அடையாளமாக, வரலாற்றுப் பதிவாக தன்னை நிலைநாட்டி, தொடர்ந்து 21 வருடங்களாக வெளிவந்து சாதனை படைக்கும் தமிழர் தகவல் இவ்வருடத்திற்கான இலக்கிய விருதை எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு (Kuru Aravinthan)வழங்கிக் கௌரவிக்கின்றது. பல விருதுகளைப் பெற்ற இவர் நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், நாடகம், கட்டுரை, திரைக்கதை என பன்முக ஆளுமைகொண்டவர். ஓன்ராறியோ அரசின் தொண்டர் சேவை விருதைப்பெற்ற இவர் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். தமிழ்த்துறைசார் எழுத்து, இலக்கியம், சிறுவர் கல்வி, […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பித்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப் போல இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு. இரயில் விரைந்து செல்லும் வழியெல்லாம் நில்லாக் காட்சிகளில் மனந் தோய்ந்து நிற்கும் புதிரை அவன் இரயில் பயணம் முழுவதும் விடுவித்துக் கொண்டே இருப்பதுண்டு. இரயில் நிற்கும் இரயிலடிகளை விட தான் […]
பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என நிலப்பகுதியை வகைப்படுத்தி இருந்தனர். அந்தந்த நிலங்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் செய்யும் தொழில்களும் நடந்து வந்தன. பாலை நிலத்தில் வாழ்வோர் விவசாயமோ வேறு தொழில்களோ செய்ய இயலாச் சூழலில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்நிலவழிச் செல்பவரிடம் வழிப்பறி செய்து வாழ்வை நடத்தினர். இவர்கள் காலச் சூழலில் வேறு நிலங்களுக்குக் குடியேறியபோதும் பிறர் பொருளைக் களவு செய்யும் தொழிலை நடத்த நேர்ந்தது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில கிராமங்களில் வாழ்ந்து […]
கணேஷ் வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள். பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் […]
ஒரு மழை நாளின் மதிய வேளையில் தொலைந்து போன பொருளை பரணில் தேடிய போது கிடைத்து தொலைத்தது தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன அப்பாவின் கிழிந்து போன சட்டை அ.லெட்சுமணன்
முனைவர் மு.வ – அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்ற மூத்த தமிழ்அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த்தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையேசாரும். 19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்துகொண்டன. முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன் முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப்போட்டியும் நடைபெற்றன. நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல விளக்கைஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில்இருந்து விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராசஇராசேசுவரி பரிசோ. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்குக்காகக் கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர்அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின்துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றிநல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக ‘மு;வ நூற்றாண்டுவிழா’ மலர், ‘அன்னை தெரெசா மலர்’, ‘கவிஞர் தமிழ்ஒளி மலர்’ ஆகிய மூன்று மலர்களைவெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன் யுவராசன் என்னும் ஆதவன்செங்குட்டுவன். ஔவையாரின் ஆத்திசூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக் கேட்ட அவையோர் அசந்துபோயினர். சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் பேராசிரியர்பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில்நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தலைமையில் பொங்கல்கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர்கள்அருணா செல்வம், பாரீசு பார்த்தசாரதி , பாமல்லன், மருத்துவர் சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன்,சிவ அரி முதலானோர் பொங்கல் கவிதைகள் படைத்தனர். இறுதி நிகழ்ச்சியாகப் பட்டி மன்றம். தலைப்பு சிக்கலானது. “ஊழ் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில் கொள்ளத்தக்கனவே – தள்ளத்தக்கனவே“. பேராசிரியர் பெஞ்சமின் லெபோ நடுவராக அமர்ந்தார் கொள்ளத்த்தக்கனவே என்று திருமதிகள் எலிசபெத் அமல்ராசு, சுகுணா சமரசம், கவிஞர் பாரதிதாசன்பேசினார்கள். தள்ளத்தக்கனவே எனத் திருமதிகள் லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால்,அருணா செல்வம் பேசினர்.அவரவர்களும் தத்தம் கோணத்தில் தம் கருத்துகளை வலியுறுத்தினர். நடுவர் தன் முடிவை அறிவித்தார் : ‘ஊழ்’ பற்றி வள்ளுவர் சொல்லும் கருத்துகள் இக்காலத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமாக இல்லை ; ஊழ் என்ற அதிகாரமேவள்ளுவர் இயற்றியதாக இருக்க முடியாது ; கடைசிக் குறள் மட்டுமே ஊழ் பற்றிக் குறிப்பிடுகிறது.அதனை மட்டும் வேண்டுமானால் ஊழ் பற்றிய வள்ளுவர் கருத்தாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்அதனையும் விஞ்சும் மாற்றுக் கருத்தை – antidote- ஆள்வினை உடைமை அதிகாரக் கடைசிக் குறளில்வள்ளுவர் கூறிச் செல்கிறார். எனவே திருவள்ளுவர் ‘விதி’யை ஏற்றுக்கொள்ளவில்லை, மனிதனின் மதியையும் முயற்சியையுமே வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்காட்டுகள் பல காட்டி ‘ஊழ்’ அதிகாரத்தில் வள்ளுவர் கூறியதாகச் சொல்லபடும் கருத்துகள் தள்ளத்தக்கனவே’ என்று தன் தீர்ப்பை ஆணித்தரமாக நிலை நாட்டினார். ஓவியப் போட்டி கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நு}ல், குறுந்தகடு எனப் பரிசுகள் வழங்கப் பட்டன. பங்கு கொண்ட இளைய மகளிர்க்கு அழகிய […]