கதைக்கும் முகங்கள்

This entry is part 11 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  சோம.அழகு பெரிய எழுத்தாளர்கள் பலரும் தமது பயணங்களை ரசனையான எழுத்தாக வடிக்கும் போது அதை ஒரு நல்ல கற்பனையாக மட்டுமே நான் புரிந்துகொண்டதற்குக் காரணம், பயணம் என்பதை வெயில், வியர்வை, குமட்ட வைக்கும் காரின் ரெக்சின் வாடை போன்றவற்றோடு பிணைத்துப் பார்த்ததால்தான். இதுவரை நான் பெரிதாய்ப் பயணப்பட்டதில்லை……   பயணங்கள் சுவாரஸ்யமான ஒன்றாக இருப்பதற்கு மலைகளும் புல்வெளிகளும் மட்டுமல்ல…..சந்திக்க நேரும் மனிதர்களும் காரணம் என்ற ஞானோதயம் (இத்தனை வருடங்கள் கழித்து) இந்த 25வது வயதில்தான் பிறக்கிறது. […]

பொருனைக்கரை நாயகிகள் – திருக்குறுங்குடி சென்ற நாயகி

This entry is part 12 of 14 in the series 26 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி திருக்குறுங்குடி என்ற ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நம்மாழ்வார், திருக்குறுங்குடிப் பெருமான் திருவருளால் உடைய நங்கைக்குத் திருமகனாக அவதரித்தார் என்பது வரலாறு. இது வாமன க்ஷேத்திரமானதால் குறுங்குடி என்று பெயர் பெற்றது. இவ்வூர் சொல்லில் திருவேயனையார் வாழும் ஊர் செங்கால் அன்னம் தண்பணையில் பெடையோடும் கமலத்தலரில் சேறும் குறுங்குடி ஏழைச் செங்கால் இன்துணை நாரைக்கு இரைதேடிக் கார்வயல் மேவும் திருக்குறுங்குடி. இப்படி அன்னமும் நாரைகளும் இனிது வாழும் ஊர் அது. நம்பியைக் கண்ட நாயகி […]

சனிக்கோளின் துணைக் கோள் தென்துருவத்தில் ஒளிந்துள்ள உப்புக்கடலைச் சமிக்கை மூலம் காஸ்ஸினி விண்ணுளவி கண்டுபிடித்தது

This entry is part 13 of 14 in the series 26 பெப்ருவரி 2017

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் கடலாகக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை  வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் ! முகில் மயமான  அயான் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் ! வாயிலை வெப்ப மாக்கும் ! […]

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2017

This entry is part 14 of 14 in the series 26 பெப்ருவரி 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு (>280 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு