கேட்க: http://thamizhstudio.com/Koodu/mutram_1.php கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பவா செல்லதுரை என்னிடத்தில் இப்படியான சில பொக்கிஷங்களை கொடுத்து வைத்தார். அதாவது தமிழ், மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் திருவண்ணாமலை முற்றம் நிகழ்வில் பங்கேற்ற ஒலிப்பேழைதான் அது. அதனை நவீன டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் பதிவேற்றி இருந்தேன். […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி “ஆனந்த்தோட சைக்கிள் காணாமல் போய் விட்டது’ என்று கோயம்புத்தூரிலிருந்து செல்வம் போன் பண்ணினார். மருதமலை அருகில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு புறநகர் பகுதியில் செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “எப்படி காணாமல் போனது? ஆனந்த் எப்பவும் சைக்கிளைப் பூட்டித்தானே வைத்திருப்பான்” என்றேன். “பூட்டை உடைத்து திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்” “கம்ப்ளைன்ட் பண்ணினீர்களா” “ஸ்டேஷனில் போய் சொன்னோம். பக்கத்தில்தான் எங்காவது இருக்கும். தேடிப்பாருங்கள். கிடைக்கவில்லை என்றால் நாளை வந்து கம்ப்ளைன்ட் கொடுங்கள் […]
==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை “ஆத்மா” என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த மரப்பாச்சிகளாய் உலா வருகின்றேன். எங்கே அது? என்ன அது? எதற்கு அது? புரியவில்லை! இருப்பினும் அந்த மூலப்பிரதி இன்னும் வரவில்லை! பெரிய பெரிய பரிய மனிதர்கள் அது பற்றி தேடுதல் வேட்டையில் ஞானத்தை கூர் தீட்டுகிறார்கள்! பாவம் என்கிறது […]