“இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்)

This entry is part 1 of 14 in the series 15 ஜனவரி 2017

முனைவர் சு.மாதவன்                     தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர்                        மா.மன்னர் கல்லூரி (தன்னாட்சி) செம்மொழி இளம் தமிழறிஞர்              புதுக்கோட்டை – 622 001. யுஜிசி ஆராய்ச்சி விருதாளர்                    பேச : 9751330855, 04322 221515 மின் அஞ்சல்: semmozhi200269@gmail.com       semmozhi_200369@yahoo.com         நாள் : 14.01-2017 “இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்) தமிழில் இதுவரை இசைக்கப்பட்ட விழிப்புணர்வுப் புரட்சிப் பாடல்களிலேயே […]

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது

This entry is part 7 of 14 in the series 15 ஜனவரி 2017

அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் விருதிற்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என். கல்யாண ராமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.   செய்மதிதொடர்பாடல் பொறியாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய ISROவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி விட்டுத் தற்சமயம் சென்னையில் வசிக்கும் என். கல்யாண ராமன், “இலக்கியம், நாம் வாழும் உலகத்தை முழுமையாகக் கண்டறிய வகை செய்யும் ஒரு கருவூலம். இதை மேட்டிமைத் தனத்தாலும் உள்ளொளி போன்ற மாயாவாதத்தாலும் குறுக்கி விடக்கூடாது” […]

எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

This entry is part 8 of 14 in the series 15 ஜனவரி 2017

மிசிரியா காலத்துக்கும்,சூழலுக்கும் பொருந்தும் வகையில் எச்.முஜீப் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்ட நான் ஏன் வஹாபி அல்ல? என்ற நூல் உள்ளடக்கத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நூல் ஆகும்.தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்க புத்தக ஏஜென்சிகளும் எங்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.சமானிய முஸ்லிம் முதல் அறிஞர் பெருமக்கள் வரை இந்த நூலை வாங்கி சமகால பிரச்சனைகளை அணுகும் விதங்களை அறிந்து கொள்ளவும் அதற்கான இயல்புகளை சொல்லிக்கொடுக்கவும் இந்த நூல் எல்லாவகையிலும் பயன்படும். இஸ்லாமிய வரலாற்றின் கறுத்த […]

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 14

This entry is part 2 of 14 in the series 15 ஜனவரி 2017

பி.ஆர்.ஹரன்   தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகப் புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், பரணி வகை இலக்கியம்,  ஆகியவற்றில் யானைகள் பற்றிய பல்வேறு குறிப்புகளைப் பார்த்தோம். யானைகள் பற்றி மேலும் பல குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன.   போர்களில் யானைகள் காட்டு விலங்கான யானையை அரண்மனைகளிலும், கோவில்களிலும், போர்க்களங்களிலும் ஈடுபடுத்தும் அளவுக்கு அவற்றைப் பழக்கும் ஒரு அற்புதமான பாரம்பரியம் நமது பாரத தேசத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. யானைப்படை தமிழ் மன்னர்களின் நால்வகைப்படைகளில் ஒன்றாக இருந்தது. பகைவர்களின் […]

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)

This entry is part 3 of 14 in the series 15 ஜனவரி 2017

அன்புடையீர் வணக்கம் தமிழர் திருநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஏப்ரல் 7, 8.9, 10 ஆகிய நான்கு நாள்களில் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நடைபெறஉள்ளது. இதனை ஒட்டி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளோம். இக்கருத்தரங்கில் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வழங்க அன்புடன் வேண்டுகிறோம். அதன் அ்றிவிப்பு மடல் இதனுடன் இணைப்பாக உள்ளது. இதனை மற்ற நண்பர்களுக்கும் பகிரவும். அன்பும் பணிவுமுள்ள கம்பன் கழகத்தார். காரைக்குடி                            […]

கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

This entry is part 4 of 14 in the series 15 ஜனவரி 2017

கவிதை குறித்த பொது வெளி உரையாடல்.( றியாஸ் குரானா வாசகர் வட்டம் ) ♪ புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை) இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம். நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம் ♦ முன்னிலையும் தலைமையும் Riyas Qurana 01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா ) ♦உரையும் கருத்தாடலும்  ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் ) 02 றியாஸ் குரான கவிதைகள் ♦ உரையும் கருத்தாடலும் […]

புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது

This entry is part 5 of 14 in the series 15 ஜனவரி 2017

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9 https://youtu.be/9JpgHUO0qLI ++++++++++++++++++ பூதக்கோள் வியாழன் சூரிய குடும்பப்  புறக்கோள்களில் பெரியது ! சூரியன் போலுள்ள வாயுக்கோள்  தன்னொளி யின்றி  கண்ணொளி குருடாய்ப் போனது ! கவர்ச்சி மிக்கது ! பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது ஒற்றை வளையம் ! கியூப்பர் வளைய வால்மீன் பாதை நழுவி வியாழக் கோள் ஈர்ப்பு விசையில்  விழுந்து தூளாகி நீர்க் களஞ்சியம் சிதறி   வேர்வை ஆவி யானது ! வெடிப்பதிர்ச்சி […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 6 of 14 in the series 15 ஜனவரி 2017

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   16. வாழ்வுமேல் மனிதர் வைக்கும்  நம்பிக்கை நாசமாகும் அல்லது நன்கு முன்னேறும்; பாலை வனத்தூசி முகப் பனிபோல் ஒளிரும் ஓரிரு கணம், மறையும் பிறகு.     16. The Worldly Hope men set their Hearts upon        Turns Ashes — or it prospers; and anon,        Like Snow upon the Desert’s dusty Face […]

கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”

This entry is part 9 of 14 in the series 15 ஜனவரி 2017

  நல்லு இரா. லிங்கம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன? அது எப்போது நிகழ்கிறது? மரணித்த பின் மீண்டும் எழுதலே உயிர்த்தெழுதல் என்று அறியப்பட்டு வந்திருக்கிறது. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு மரணமில்லை என்பதையே உயிர்த்தெழுதல் எனும் சொல் நமக்கு உணர்த்துகிறது. உடலை விட்டு உயிர் நீங்கியபின் பதப்படுத்தப்படாத சூழலில் அடுத்த ஒரு நாளுக்குள்ளாக அந்த உடல் தீ அல்லது மண்ணுக்கு உண்ணக்கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அந்த உடலுக்கு உயிர் மீண்டும் திரும்பினால் அங்கே உயிர்த்தெழுதல் நிகழ்கிறது. உறங்குவது […]

ஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…

This entry is part 10 of 14 in the series 15 ஜனவரி 2017

குமரன் கட்டுரையின் துவக்கத்திலேயே நான் உங்களிடம் ஒன்றை சொல்லிவிட கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் எதிர்பார்க்கும் “வண்ணம்” இக்கட்டுரை இல்லாமல் போகலாம். என் மீது உங்களுக்கு கோபம் கூட தோன்றலாம். ஆனால், “ஜல்லிக்கட்டு எங்கள் வீரவிளையாட்டு அதற்குத் தடை என்பது தமிழ் இனத்தை வேரறுக்கும் சதி” என்றெல்லாம் கூட்டத்தில் கோவிந்தா போடாமல் சற்றே சிந்திப்பதும் தமிழ் இனத்திற்குரிய பண்பு என்பதால், அதன் வழி யோசித்ததில் விளைந்த எண்ணங்களே இந்தக் கட்டுரை! கடந்த வாரம் மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டுக்கான தடை […]