தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

This entry is part 11 of 14 in the series 15 ஜனவரி 2017

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள் தங்கி, பின்பு  இருவராகி, இறுதியில் தனி அறையில் தங்கியதும் இனிமையான அனுபவமே. இப்படி கடந்த ஆறு ஆண்டுகள் வாழ்க்கையின் இளமையான பருவத்தை விடுதிகளில் தனியாகக்  கழிப்பதும் நல்லது என்றே தோன்றியது. நாம் இனி என்றுமே […]

மாமதயானை கவிதைகள்

This entry is part 12 of 14 in the series 15 ஜனவரி 2017

மாமதயானை வீடு எரிந்து வீதியில் நிற்கின்றோம்… பெய்யத் தொடங்கியது மழை   எதிரியின் வீட்டருகே எலும்புத்துண்டாய் கிடைத்தது… தொலைந்த கோழி   பலூன் விற்கும் சிறுவனிடத்திலிருந்து பறந்து விடவே இல்லை… பள்ளிக்கூட ஆசைகள்   சாதி நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது… சமத்துவப்பொங்கல்   எந்தப்பூவை பார்த்தாலும் பறித்து விடுவாள்… அந்த விதவை   குறிபார்த்து சுடத்தெரியாதவன் எப்படி … தன்னைத்தானே சுட்டுக்கொண்டான்   தன் வீட்டிலேயே திருடி மாட்டிக்கொண்டான்… திருடன்   வழுக்கைத் தலையுடன் வருகின்றான் பாருங்கள்… […]

மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்

This entry is part 13 of 14 in the series 15 ஜனவரி 2017

-எஸ்ஸார்சிமொழிபெய்ர்ப்பாளர் திரு.குறிஞ்சிவேலன் உள்ளத்தில் வித்தாகிய ஒன்று ‘திசை எட்டும்’ விருட்சம் எனப் பரந்து விரிந்து செழித்து ஓங்கி வாசக நெஞ்சங்களுக்கு விருந்தாகி நிற்கிறது.கடலூர் மாவட்டத்து சிறிய நகரமாம் குறிஞ்சிப்பாடியை ஒட்டியது மீனாட்சிப்பேட்டை.அங்கிருந்து முகிழ்த்துக்கிளம்பி இந்தப்பாரினை வலம் வருகிறது. இம்மொழி பெயர்ப்புக்காலாண்டிதழ்’திசை எட்டும்’ வாராது வந்த ஒரு மாமணி. மாகவி பாரதியின் வார்த்தைதனைத் தன் சிரமேற்கொண்டு செய்ல்படுவதால் கூடுதலாய்ச்சிறந்து சிந்தனைக்கு விருந்தாகி நிற்கிறது.‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ வாசகனுக்குச்சொல்லும் எட்டையபுரத்து முண்டாசுக்கவியின் முகம் அதன் கீழே விரிந்து […]

தோழிக் குரைத்த பத்து

This entry is part 14 of 14 in the series 15 ஜனவரி 2017

  இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள். ஆனால் ’தோழி’ என்று ஒருமையில் சொல்லக் காரணம் தோழியாம் தன்மையின் ஒற்றுமை கருதியேயாகும். இனிப் பாடல்களை நம் பேச்சு வழக்கில் காண்போம் தோழிக்குரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! மகிழ்நன் கடனன்[று] என்னும் கொல்லோ–நம்மூர் […]