படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி

This entry is part 1 of 23 in the series 18 ஜனவரி 2015

  ” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம்  இது என்று சுட்டிக் காட்டியவர்  கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் […]

நாவல் – விருதுகளும் பரிசுகளும்

This entry is part 3 of 23 in the series 18 ஜனவரி 2015

  என். செல்வராஜ்   வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.   சாகித்ய அகாடமி ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அந்த விருது பற்றிய சில விமர்சனங்கள் இருந்த போதிலும் விருது தருவதையே குறை சொல்ல முடியாது. மத்திய […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடு

This entry is part 4 of 23 in the series 18 ஜனவரி 2015

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? அண்டத்தில் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? ஒற்றைத் தள மட்டத்தில் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்

This entry is part 7 of 23 in the series 18 ஜனவரி 2015

அன்புடையீர், 2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி  2015  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 428 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்

This entry is part 17 of 23 in the series 18 ஜனவரி 2015

அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். அகில இந்திய அளவில் ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அவர் ஏற்படுத்திய மக்கள் விழிப்புணர்வு மற்றும் அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த இந்தியரிடையேயும் கிடைத்த வரவேற்பு […]

சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு

This entry is part 12 of 23 in the series 18 ஜனவரி 2015

வைகை அனிஷ் நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படம் தயாரித்து தற்பொழுது திரையரங்குகளி;ல் திரையிடப்பட்டாலும் நாயிக்கு பின்னர் சங்க காலம் கொண்டு வரலாறே உள்ளது. சங்க இலக்கியங்களில் நாய் நன்றி கெட்ட நாயே என வசைபாடுவதையும், ஏன்டா நாய் மாதிரி லோ லோ என அலைகிறாய் எனவும், நாய் வாயில் கிடைத்த தேங்காய் மாதிரி என நாயை பற்றி கீழ்தரமாக வார்த்தைகளை அன்றாடம் பிரயோகிப்போம். நாய்கள் சங்க காலத்திலிருந்து இன்று வரை எப்படி மனிதனுக்கும் நாயுக்கும் உள்ள உறவு […]

பெருந்திணை- இலக்கண வளர்ச்சி

This entry is part 8 of 23 in the series 18 ஜனவரி 2015

முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை தமிழ் அக இலக்கண மரபில் பெருந்திணை வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. அகன் ஐந்திணையில் தொல்காப்பிய கால வளர்ச்சி நிலை அப்படியே இருக்க, கைக்கிளையும் பெருந்திணையும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களால் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளன. இவ்வளர்ச்சி ஆண், பெண் இருவர் பக்கத்திலும் ஒத்த அன்பினைக் கொள்ளாத கைக்கிளையும், பெருந்திணையும் புறப்பொருள் திணைகளாகவும் கொள்ளத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தொல்காப்பியப் பெருந்திணை தொல்காப்பியர் பெருந்திணைக்கான இலக்கணத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். […]

பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

This entry is part 5 of 23 in the series 18 ஜனவரி 2015

வளவ. துரையன் [ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன. முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். […]

சீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்க

This entry is part 11 of 23 in the series 18 ஜனவரி 2015

நாங்கள் சீஅன் நகரம் செல்லப் புறப்பட்டது மிகவும் எதேட்சயாக நடந்தது. பல வருடங்களாக செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்த போதெல்லாம், அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த வருடம் பல மாதங்களாக, கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், இந்த இடத்தைப் பற்றி எண்ணவில்லை. எந்தத் திட்டமும் டிசம்பர் 22ஆம் தேதி வரையிலும் தீட்டவுமில்லை. அன்று தான் திடீரென்று பயணம் மேற் கொள்ள வேண்டும் என்ற […]

பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழா

This entry is part 13 of 23 in the series 18 ஜனவரி 2015

பஹ்ரைன் அரசாங்கத்து சமூக விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரப் பதிவு பெற்று, பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாவை ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமான முறையில் கொண்டாடியது. வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம், ஆதலால் எல்லோரும் வந்து கலந்துக்கொள்ளும் வண்ணம் பொங்கல் பண்டிகை முன்கூட்டியே கொண்டாடப்பட்டது. . பஹ்ரைன் இந்தியச் சங்கத்தின் (Indian Club) நூறாவது ஆண்டு தொடர் கொண்டாட்டத்தை […]