தொடுவானம் 51. கிராமத்து பைங்கிளி

This entry is part 10 of 23 in the series 18 ஜனவரி 2015

கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.விடுதிகளில் மாணவர்கள் தங்க முடியாது என்றும் உத்தரவு.எங்களுக்கு போராட்டத்தில் இருந்த ஆர்வம் ஊர் செல்வதில் இல்லை. நாங்கள் விடுதிகளில் தங்கியிருந்தால் ஒன்றுகூடி திட்டமிடுவோம் என்ற காரணத்தினால் விடுதிகளையும் மூடி எங்களை பிரித்து விடும் முயற்சி இது. நான் பிரயாணப் பெட்டியில் வேண்டிய பொருட்களை அடுக்கிக்கொண்டு சிதம்பரம் செல்ல தயாரானேன். அதற்கு முன் அத்தை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்ல முடிவு செய்தேன். அந்த இரண்டு நாட்களும் அத்தை மகள் நேசமணிக்கு […]

” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு

This entry is part 14 of 23 in the series 18 ஜனவரி 2015

நட்பே நலமா: நூல் வெளியீடு திருப்பூரில் அரோமா ஓட்டலில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. சிலரின் உரைகள்: சுப்ரபாரதிமணியன் ( எழுத்தாளர் ) : பாட்டாளிகள் படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாறிய மறுமலர்ச்சி காலம் இது. ஒரு காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும், மெத்த படித்தவர்களும் ., புலவர்களுமே எழுதும் சூழல் இருந்தது. விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் அவர்களே எழுதினர். ஆனால் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களிலிருந்தே, சாதாரண மக்களிலிருந்தே தலித்கள், பெண்கள், நெசவார்கள், பனியன் தொழிலாளர்கள், […]

தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்

This entry is part 15 of 23 in the series 18 ஜனவரி 2015

பண்டைய காலத்தில் மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், ச+த்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பவர்கள் யாகங்களையும் சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல அன்பளிப்புகளை பெற்றனர். அரசர் அதாவது சத்திரியர் என்பவர் உடல் வலிமையால் மற்றவர்களை அடக்கியாண்டு சமூகத்தின் தலைமையைப் பெற்றிருந்தனர். வைசியர் என்பவர் உழவுத்தொழிலும், கால்நடை வளர்ப்பும், வணிகம் செய்வதுமான தொழில்களைக் கொண்டிருந்தனர். நான்காவது வர்ணத்தவரான ச+த்திரர் என்பார் உடைமை எதுவம் இல்லாத உடல் உழைப்பாளிகள். மற்ற மூன்று […]

இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது

This entry is part 6 of 23 in the series 18 ஜனவரி 2015

வித்யா ரமணி வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் – இயற்கைக் கவிஞன், ஏரிகளின் கவிஞன், கற்பனையும் காதலும் பரவி நிற்கும் ரொமாண்டிக் கவிஞன் கிராஸ்மேரின் ஞானி என்று பலவாறாக அறியப்படுபவன். எனக்கோ அவன் பிரிய கவிஞன், அபிமானப் புலவன். அவனது கவிதைகள் என்னைப் பலவிதமாய்ப் பாதித்திருக்கிறது. இலக்கியம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் என்னுடைய அனுபவங்கள் விரிவடையும் போதெல்லாம், அவனுடைய கவிதைகள் குறித்தான புரிதலும் விரிவடைவதை நான் உணர்கிறேன். ஏன் ஒரு பழங்காலக் கவிஞனை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவனின் கவிதைகளை […]

ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்

This entry is part 16 of 23 in the series 18 ஜனவரி 2015

புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு அழகான‌ பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு. பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில், உடன் நடிக்க வேண்டிய ஆண் மாடல் ஜான் ஒத்துழைக்க மறுக்க, வேறு மாடல் தேவைப்படுகையில், லிங்கேஸ்வரன் பயன்படுகிறான். பழகபழக லிங்கேஸ்வரன் மீது காதல் வருகிறது. லிங்கேஸ்வரன் வளர வளர, எதிரிகள் […]

ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்

This entry is part 18 of 23 in the series 18 ஜனவரி 2015

நாள்: ஞாயிற்றுக் கிழமை, 25 ஜனவரி 2015 நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை இடம்: 2nd Floor, Ocean View Court, 25 Chatham Road, Tsimshatsui, Kowloon, Hong Kong, தொலைபேசி: 2721 9655 பொருள்: சரிதையும் சுயசரிதையும் நிரல்: திரு.கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)- வந்தார்கள், வென்றார்கள், நின்றார்கள் திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம்- கிரண் பேடியின் ‘வானம் வசப்படும்’ திரு மு. இராமனாதன்- லூயி பிஷரின் காந்தி திரு. எஸ்.பிரசாத்- ஆசிரியரும் மாணாக்கரும்: […]

மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்

This entry is part 19 of 23 in the series 18 ஜனவரி 2015

தமிழ் மொழி – கல்வியில், ஊடகத்தில், படைப்பிலக்கியத்தில் எவ்வாறு உருமாற்றம் அடைகிறது – ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் தமிழ்மொழி உரைநடையில் நிகழும் மாற்றங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் MORWELL என்னும் இடத்தில் அமைந்துள்ள திறந்த வெளிப்பூங்காவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. தற்பொழுது கோடை விடுமுறை காலம் என்பதனால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஊடகங்களில் எழுதும் பேசும் – ஊடகவியலாளர்கள், மற்றும் படைப்பிலக்கியவாதிகளின் கருத்துக்கள் சங்கமிக்கும் கலந்துரையாடலாக வெளிஅரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி எதிர்வரும் 24-01-2015 […]

ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22

This entry is part 20 of 23 in the series 18 ஜனவரி 2015

இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம். நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா. (சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான். அவள் தலை குனிந்து அங்கே நின்றிருக்கிறாள்) ராஜாமணி: சரி ஜம்னா… நானும் அம்மாவும் வந்த வேலை முடிஞ்சுடுத்து! ஒங்க மன்னியையும் ஒன் மருமானையும் கொண்டாந்து ஒன்கிட்டயே சேத்தாச்சு… பொறப்படறோம். ஜமுனா: ம் ம் ம். ராஜாமணி: நேத்தியிலேர்ந்து நீ என்கிட்டே ஒண்ணுமே […]

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…

This entry is part 21 of 23 in the series 18 ஜனவரி 2015

நண்பர்களே, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளில் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன. திரைப்படம் தொடங்கி இலக்கிய பிரதிகள் வரை ஒரு படைப்பாளி நேர்மையாக தான் நினைத்ததை சொல்லும் போக்கு வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதை சொன்னால் அவருக்கு பிடிக்காது, அதை சொன்னால் இவருக்கு பிடிக்காது என்று பல்வேறு வகைகளில் சிந்தித்து, ஒரு படைப்பாளியால் இயங்கிக் கொண்டிருக்க முடியாது. தமிழ்நாட்டில் மதவாத சக்திகளால் அதிகரித்து வரும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த நிலையை உடனே முதல்வர் […]

திரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ நூல்விமர்சனம்

This entry is part 2 of 23 in the series 18 ஜனவரி 2015

[ எம்.ஜெயராமசர்மா …. மெல்பேண் ] பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர் மனத்தில் ஏதோ ஒரு […]