ஒளி அமிழ்ந்த ஓர் இரவு, நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்.. வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம் விண்மீன்களைக் காணவில்லையென்று! கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்! யாருமிலா எனதறையின் உட்சுவர்களும் இருளை உமிழ்ந்து கொண்டிருக்க, ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்.. என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்!
1 செல்லச்சாமிக்கு வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு முழிப்பு வந்து விட்டது . மாடித் தரையில் படுத்திருந்தவரின் கண்கள் மேலே சிமிட்டிக் கொண்டிருந்த வானத்தின் எண்ணற்ற கண்களைச் சந்தித்தன . நீலமும் வெள்ளையுமாக வானில் தெரிந்த புரிபடாத சித்திரங்களில் எதையாவது தேடிக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்த்தார். அவர் சிறுவனாக இருந்த போது இம்மாதிரி வானில் காணப்படும் ஓவியங்கள் முந்தின ஜன்மத்தில், இதே நாளில் நடந்த காட்சிகளைத்தான் தீட்டிக் காண்பிக்கப் படுவதாக நினைத்ததுண்டு . வெட்ட […]