1. பூனைமனம் வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில் நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம். நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன? அது ஆணா பெண்ணா தெரியாது. அதற்கு எத்தனை வயது – தெரியாது. அது எங்கிருந்து வருகிறது – தெரியாது. அதற்கான நீள்வட்டப்பாதையின் ஆரம், விட்டம் – சுற்றளவு – எதுவுமே தெரியாது. விளங்கவியலாச் சீட்டுக்குலுக்கலனைய வாழ்வியக்கத்தில் குறைகாலம் கூட்டுச்சேர்ந்தது போலவே கையாட்டி விடைபெறாமல் […]
ருத்ரா ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம் அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு 2023ன் அல்ஜிப்ராவை அலசலாம் என்ற நினைப்பில் கண்ணயர்ந்து விட்டேன். ஒன்றரை மணிகழித்து தான் முழித்தேன். அதற்குள் அந்த ரயில்வண்டி எங்கு ஓடிப்போயிருக்கும்? அவ்வளவு தான். காலக்குப்பியை பிதுக்கி எடுத்த நிகழ்வுகளை இனியும் அதில் அடைத்து பிதுக்க முடியுமா? என்ன? காலமாவது..குப்பியாவது? காலமும் வெளியும் பூஜ்யமாய் இருக்கும் அப்பாலுக்கே அப்பால் பில்லியன் அப்பாலும் கடந்து தன்கண்களைக்கொண்டு துருவிக்கொண்டு நிற்கிறதாமே ஜேமஸ் வெப் தொலைனோக்கி. அப்புறம் என்னடா […]