எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

This entry is part 31 of 42 in the series 29 ஜனவரி 2012

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த […]

முன்னணியின் பின்னணிகள் – 24

This entry is part 30 of 42 in the series 29 ஜனவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதற்கெல்லாம் பின்னால் ஒரு ஒருவருட அளவில், எப்போதெல்லாம் ரோசி என்னுடன் வெளியே வந்தாளோ, என் அறைவரை வந்து போவதை வழக்கமாக்கிக்கொண்டாள். சில நேரம் ஒருமணி தங்குவாள். சில சமயம் விடியல் வரை, அதாவது வேலைக்காரர்கள் முறைவாசல் என்று வாசலை சுத்தம்செய்கிற வேலை ஆரம்பிக்கும் வரை. கதகதப்பான காலைகளின் அழகான நினைவுகள் என்னுள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இரவின் அலுத்து ஓய்ந்த காற்றின் ஆயாசம் மெல்ல மாறி, இதமான புத்துணர்ச்சியைத் தருகிறாப் […]

இப்படியும்… பேசலாம்…..!

This entry is part 29 of 42 in the series 29 ஜனவரி 2012

உலகம் என்பது என்னுள் சுழல்வது…. ——————————- என்னை … அறியவா… எனக்கு இந்தப் பிறவி..! —————————— இந்த உடல் .. வாடகை வீடு… காலியாகி விடும்…….! உயிரே…புரிந்துகொள்.. இப்படிக்கு…. ஆன்மா..! ———————————- விதை தரும்…. விருக்ஷமும்… மண்ணுக்குள் அன்று…. விதையாகத் தான்..! ——————————————– கைப்பிடி …. மூளைக்குள் அனந்தகோடி அறைகள்…! ——————————– அளவில்லாததை…. “இதயம்” என அளந்து… வைத்தான்.! ———————————– பூஜ்ஜியமும் இல்லை ராஜ்ஜியமும் இல்லை… எதற்கு எல்லை..? ————————————– ஒன்றும் இல்லாத பரவெளிக்கு……? பந்தல் எதற்கு…! […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)

This entry is part 28 of 42 in the series 29 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏகாந்த வாழ்வு ஏகாந்த நிலையில் நான் தாமதிக் கிறேன் ! ஏகாந்த மாய் நான் மட்டும் என் படகினில் ! எங்கும் இருள் மயம் எந்தத் தளமும் தெரிய வில்லை ! திரண்ட முகில் மூட்டம் நீருக்கு மேலிருக்க முயல்கிறேன் ! ஆயினும் ஆழத்தில் ஏற்கனவே வாழ்கிறேன் அடிக்கடல் விளிம்புக்குள் ! ++++++++++++ அழுகை வருகுது ! அழுகை வருகுது எனக்கு ! […]

பள்ளி மணியோசை

This entry is part 27 of 42 in the series 29 ஜனவரி 2012

பிடிக்காத வாத்தியாரின் பாட நேரங்களில் கூர்ந்து கவனிக்கிறார்கள் அடுத்த பாட வாத்தியாரை வரவேற்க போகும் மணியோசையை அந்த நாளின் இறுதி பாடத்தின் கடைசி பத்து நிமிடங்களில் போர்கால அடிப்படையில் ஆயத்தமாகிறார்கள் விடுப்பு மணியின் மூன்றாவது மணி யாரும் கேட்காமல் ஆனாதையாய் வகுப்பறையில் உட்கார்ந்தபடியே ஒளிந்துக் கொள்கிறார்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாட்களில் கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே கத்துக் கொடுத்தார் ஆசிரியர் முதன் முறையாக வீட்டுப்பாடம் முடித்தும் படித்தும் வந்தவனிடம் அவர் ஒன்றும் கேட்கவில்லை வாத்தியார் அடிக்கும்போது […]

அப்பாவின் நினைவு தினம்

This entry is part 26 of 42 in the series 29 ஜனவரி 2012

அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன். அப்பளம்…அப்பளம்…இன்னும் எனக்குப் போடலை…போடலை.. -கத்தினார் அந்தப் பெரியவர். அய்யாவுக்கு இன்னொரு அப்பளம் கொண்டாப்பா.. -இவன் இலையில் அப்பளம் தீர்ந்துவிட்டது கண்டு எதிரில் அமர்ந்திருந்தவர் உபசரித்தார். எனக்கு வேண்டாம்..முதல்ல அந்தப் பெரியவருக்குப் போடுங்க… என்றான் இவன். லேசாக அவரின் பார்வை இவனின் பக்கம் […]

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

This entry is part 25 of 42 in the series 29 ஜனவரி 2012

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான். முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11

This entry is part 24 of 42 in the series 29 ஜனவரி 2012

நடராஜருக்குச்சேரவேண்டிய நிலமான்யங்களில் பெரும்பகுதியை இவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இனி நம்முடைய குடும்பங்களில் நடக்கும் பால்ய விவாகத்திற்கும் வரி செலுத்தவேண்டுமாம் 13 தீட்சதர் வீடெங்கும் இருட்டுடன், தீயில் உருகிய வெண்ணெயின் வாடை. காற்று வீசுகிறபோதெல்லாம் வாசல் மரங்கள் சோர்ந்து அசைந்தன. தெருத் திண்ணைகளிரண்டிலும் பொது தீட்சதர்கள் உத்தரீயத்தை உடலில் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். சிலர் சுவரிலும், சிலர் தூண்களிலுமாக சாய்ந்திருந்தனர். சிலர் சம்மணம் போட்டும், வேறு சிலர் முழங்கால்களை தரையிற் பக்கவாட்டில் மடித்துமிருந்தனர். அர்த்தஜாம பூஜையிலிருக்கும் தீட்சதர்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் […]

“எழுத்தாளர் விபரத் திரட்டு”

This entry is part 23 of 42 in the series 29 ஜனவரி 2012

தயாராகிறது!! “எழுத்தாளர் விபரத் திரட்டு” (ஈழத்து படைப்பாளர்களின் விபரங்கள் அடங்கிய தொகுதி) இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பட்டியல் நூலாக அச்சில் வெளி வருகிறது. எழுத்தாளர்கள் தங்கள் பெயர்,புனை பெயர்,பிறந்த இடம்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,கல்வி கற்ற கல்வி நிறுவனங்கள்,விருத்துகள்/பரிசுகள்,படைப்புகள் வெளி வந்த ஊடகங்கள், நூல்கள்,முகவரி,முகவரி,மின்னஞ்சல் எனும் விபரங்களை அனுப்பி நூலை சிறப்பியுங்கள். தொடர்பிற்கு: R.MAHENDRAN. 34,RED RIFFE ROAD, PLAISTOW, LONDON E13 0JX mullaiamuthan@gmail.com mullaiamuthan_03@hotmail.co.uk

ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1

This entry is part 22 of 42 in the series 29 ஜனவரி 2012

மாயன் ஐயா! நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன். பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக… என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில […]