காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்

This entry is part 10 of 21 in the series 10 ஜூலை 2016

வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சிறுசஞ்சிகைகள் சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளது. எனவே சிறுசஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகளை அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

This entry is part 11 of 21 in the series 10 ஜூலை 2016

வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பனுவலில் தொடர்ந்து பல இலக்கிய நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், வாசகர் சந்திப்புகள், திரையிடல்கள், வரலாற்றுப் பயணங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என பல நிகழ்வுகளை வாசகர்களின் ஆதரவோடு நடத்தி வருகிறோம். வாசகர்களுக்கும் புத்தகங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதே எங்கள் […]

காப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் ​வாணிகம்

This entry is part 12 of 21 in the series 10 ஜூலை 2016

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com செல்வம் என்பது உயர்ந்தது. இதனைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான இன்பத்தையும் மேலுலக வாழ்க்கைக்குத் தேவையான வீடுபேற்றையும் அடையலாம். ஆலமரம் அழிந்தாலும் அதனை விழுதுகள் தாங்குவது போல தாங்கள் சேர்த்து வைத்த செல்வம் முதுமைக்காலத்தில் தங்களைத் தாங்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பெருங்செல்வத்தையும் பெருஞ்செல்வர்களையஙம் உருவாக்கும் தொழிலாக வணிகம் விளங்குகின்றது. சீவகசிந்தாமணியில் வணிகம் பற்றிய பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. சிந்தாமணியில் […]

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை

This entry is part 13 of 21 in the series 10 ஜூலை 2016

  ப.கண்ணன்சேகர் இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின் பாரதம் வேண்டிய பன்பாளர் சுந்தர வடிவாக சுதந்திரம் கண்டிட சுடர்மிகு திரியென சொல்லிடும் நெறியாளர் ! பரமாம்ச சீடராய் பகுத்தறிவு பெற்றிட பாரெல்லாம் ஆன்மீகப் பணிகளை செய்தவர்! உரமேற்றி இந்தியரை உள்ளத்தால் உழுதிட உண்மையின் ஒளியாக உருவாகி வந்தவர்! முரண்பாடு களைந்திட முழுமையாய் ஆன்மீகம் […]

சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.

This entry is part 14 of 21 in the series 10 ஜூலை 2016

அன்புடையீர் வணக்கம் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். போட்டி பற்றிய விதிமுறைகள் மற்றும் விபரங்கள் சீனாவில் என்ன பார்த்திருக்கிறீர்கள்?உங்களது சீனப் பயணம் எப்படி இருந்தது?சீன நண்பர்களுடனான மறக்க முடியாத நினைவுகள் என்ன?உங்கள் அனுபவங்களை “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் பங்கேற்க நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். நிழற்படங்கள் அல்லது விடியோ படைப்புகளையும் தயாரிக்கலாம். இன்று முதல் […]

படிக்கவேண்டிய சமீபத்திய வெளியீடுகள் சில

This entry is part 4 of 21 in the series 10 ஜூலை 2016

  லதா ராமகிருஷ்ணன் ஆளாளுக்கு புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்ற நூல்கள் என்று பரபரப்பாகப் பட்டியல் தந்துகொண்டிருக்கிறார்கள். பாதகமில்லை. இங்கே நான் புதிதாக வந்திருக்கும் வாசிக்கப்படவேண்டிய நூல்கள் சிலவற்றைத் தந்துள்ளேன். அழுக்கு சாக்ஸ் – நவீன தமிழ்க்கவிதையின் குறிப்பிடத்தக்க கவிஞரான பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு. விருட்சம் வெளியீடாக வந்துள்ளது.         தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு நல்ல பல எழுத்தாக்கங்களை மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள படைப்பு ‘கடவுளின் கையெழுத்து. CODE NAME […]

ஆத்மாவின் கடமை

This entry is part 16 of 21 in the series 10 ஜூலை 2016

என்.துளசி அண்ணாமலை   பாகம் 1 “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”   கேட்ட கதிரவனின் குரலில் பொறுமை காணாமல் போயிருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மணி நேரமாகக் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் அலுப்பும் சோர்வும் அவனுடைய பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.   உடன் அமர்ந்திருந்த பரமன், மெலிதாக சிரித்தான். “இந்தப்பாதை கொஞ்சம் சிரமம்தான். என்ன செய்வது? நமக்கு வேண்டுமென்றால் நாம் மெனக்கிடத்தான் வேண்டும்.” என்றான். காரை மிக இலாவகமாக ஓட்டிக்கொண்டிருந்த […]

புதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –

This entry is part 17 of 21 in the series 10 ஜூலை 2016

    நீர்க்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து அறிதலின் தீ என்னும் தலைப்பில் லாவண்யா சுந்தரராஜனின் மூன்றாவது தொகுதி வெளிவந்திருக்கிறது. நான் கவனித்த வகையில் தொடர்ச்சியாக சீராகவும் சிறப்பாகவும் எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர் லாவண்யா சுந்தரராஜன். முந்தைய தொகுதிகளில் காணப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய திசையில் புதிய வடிவத்தோடு பயணம் செய்பவையாக காணப்படுகின்றன இக்கவிதைகள். கவிதை முயற்சியில் லாவண்யாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையே இது சுட்டிக்காட்டுகிறது. […]

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

This entry is part 18 of 21 in the series 10 ஜூலை 2016

  ‘ரிஷி’   முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும். தவறாக நினைத்துவிடவேண்டாம்.     அதுசரி, நட்பென்றாலே பரஸ்பரம் தானே? இதில் என்ன தனியாய் ‘mutual friend’? – சாதா தோசை மசாலா தோசை கணக்காய்… ஏதும் புரியவில்லை. Mutual friend, actual friend ஆகிவிடமுடியுமா […]

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

This entry is part 3 of 21 in the series 10 ஜூலை 2016

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப் பொறியியற் கலைத்துவக் கலாச்சாரத்தைப் பற்றிய நூலிது.  நைல் நதி நாகரீகம் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து திண்ணையில் வெளிவந்தவை