நுரைகள்

This entry is part 6 of 6 in the series 14 ஜூலை 2019

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு குழுமியிருக்கின்றன வாழ்வின் வண்ணங்கள் ஒவ்வொரு கூடாரமும் தன் வண்ணம் விற்க கூவி அழைக்கிறது மக்களை வண்ணம் தானே வளராத தன்மையினால் வண்ணம் பற்றிய கதைகள் நீட்டி முழக்கப்படுகின்றன பொய்க் கதைகளுடன் வாங்கப்பட்ட வண்ணங்களில் உண்மைக் கதைகள் இருப்பதாக நம்பிக்கை காதருந்த மக்களுக்கு ! நுரை பொங்கிய வண்ணங்களுடன் வெளியேறுகின்றனர் கூடாரங்களை விட்டு நுரைகளை ஊதி தள்ளுகிறது காலம் !

குழந்தைகளும் கவிஞர்களும்

This entry is part 5 of 6 in the series 14 ஜூலை 2019

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  பிரியப்பட்டு  பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல்.  கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில் தலைதாழத் தெரியாத மகிமையிலிருந்தும். (*தமிழில் – லதா ராமகிருஷ்ணன்) Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் கலீல் கிப்ரானுடைய  கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. […]

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

This entry is part 4 of 6 in the series 14 ஜூலை 2019

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன. சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது. அதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல் போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் […]

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

This entry is part 3 of 6 in the series 14 ஜூலை 2019

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான மனநிலை சில நேரங்களில் அந்த தொகுப்பின் தலைப்பாகக்கூட இருக்கலாம். கிழக்கிலங்கையின் திரிகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” அத்தகையதொரு மனநிலையை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. ஜூலை மாதம் மதுரையில் நடைபெற்ற புலம் இலக்கிய அமைப்பில் நண்பர்களிடையே ஏற்பட்ட சந்திப்பில் இத்தொகுப்பினைக் காண நேர்ந்தது. ஜே.பிரோஸ்கானின் ஏழாவது பிரசவம் இது என்றாலும்கூட இத்தொகுப்பு என் வாசிப்பில் அவருக்கான முதல் பிரசவத்தின் அனுபவங்களைச் சுமப்பதாகவே தெரிகிறது. வாழ்க்கை எப்போதும் விசித்திரமான […]

எளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

This entry is part 2 of 6 in the series 14 ஜூலை 2019

சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திராயன்2019  ஜூலையில் சென்று இறக்கும்விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி !பாரத விண்வெளித் தீரர் இயக்கும்சீரான விண்கப்பல் ஓர்நாள்தாரணி சுற்றி வரும் […]

இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு

This entry is part 1 of 6 in the series 14 ஜூலை 2019

ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைக ளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக்கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த கவிஞர் ஷகிக்கு கவிதை எழுதுதல் வலிநிவாரணமாக வும் வடிகாலாகவும் இருந்திருக் கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் கவிஞர் ஷகி 44 வயதே ஆகி யிருந்த நிலையில், அமரரானார். அவருடைய கவிதைகளின் வழி அவர் என்று வாழ்வார். திருமலை ஷகி என்றும் […]