ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

This entry is part 4 of 6 in the series 14 ஜூலை 2019

பேரா.க இராமபாண்டி

நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.

சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது. அதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல் போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்படுவதும், சமூக விடயங்களை நாடகப்படைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது.

கணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வேலையாலும் தொடர்வது புதிய சமூக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பையா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேருவது கூட அவ்வகையில் சிறு வெளிச்சம் தான்.

இழிவாக கருதப்படும் சோதிடம் பார்க்கும் சாதி . ஆனால் பண மதிப்பால் உயர்வதும் காட்டப்படுவது இன்னொரு கோணம்..அமலா என்ற் பூக்காரி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக்கல்வியில் ஈடுபடுவது ஆங்கிலமோகம் பற்றியதை சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிரான செயல்களில் ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளைக்கொண்டாடுவதும் சிறந்த சித்தரிப்புகள். .

முதல் அத்யாயத்தில் மர நாற்காலியும் பிளாஸ்டிக் நாற்காலியுமான தீச்சம்பவமே அதிர்ச்சி தரகூடியது. சாதி சார்ந்த வன்முறையைச் சொல்லிப்போகிறது.இயற்கை விவசாயம், தமிழ்க்கல்வி சார்ந்த கதாபாத்திரங்கள் சொல்லும் செய்திகள் அபாரமானவை. அவை சமூகத்தில் வாழும் மனிதர்களின் முன் மாதிரிகளைக்கொண்டே அவற்றை அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு புதினம் சமூகம் சார்ந்த நிறைய அனுபவங்களை, மனிதர்களை உள்ளடக்க முடியும் என்ற ஆச்சர்யத்தையும் இந்த ரேகை தருகிறது.

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ( பேரா.க இராமபாண்டி, மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக்க் கல்லூரி, சங்கரன் கோவில் 627754( ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 70104 84465 ) )

Series Navigationஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்குழந்தைகளும் கவிஞர்களும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *