கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

This entry is part 29 of 29 in the series 19 ஜூலை 2015

புகலிடத்தையும் தாயகத்தையும் முடிச்சுப்போடும் கதைகளிலிருந்து வெளியாகும் செய்திகள் கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும் — முருகபூபதி – அவுஸ்திரேலியா அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சலில் தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி – பரிசு 3000.00 உருவா. என்ற தலைப்பில் ஒரு அறிவித்தல். எனக்கு அதனைப்படித்ததும் குழப்பமாக இருந்தது. அது என்ன தனித்தமிழ்….? அது என்ன உருவா…? ஏனைய மொழிகளில் இத்தகைய திருக்கூத்துக்கள் இல்லை என நம்புகின்றேன். நான் இலக்கியப்பிரதிகளை எழுதவும், பேசவும் தொடங்கிய காலத்தில் […]

மிதிலாவிலாஸ்-26

This entry is part 1 of 29 in the series 19 ஜூலை 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி தொழிலாளர் கோ ஆபரேடிவ் சொசைட்டிக்கு வந்தாள். மெம்பர்களை அழைக்கச் செய்தாள். அந்த மீட்டிங்கில் தான் கமிட்டியின் டைரக்டர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தாள். “என்ன மேடம் இது?” வைஸ் பிரசிடென்ட், மற்ற மெம்பர்கள் திகைத்து விட்டார்கள். “சொந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. மாலதி நன்றாக பயிற்சி பெற்றுவிட்டாள். இருந்தாலும் நான் எத்தனை வருடங்களுக்கு இந்த பொறுப்பில் இருப்பது? இனிமேல் இதை நீங்களாகவே நடத்திக்கொள்ள […]

தொடுவானம் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை

This entry is part 2 of 29 in the series 19 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை நீண்ட விடுமுறை விடப்பட்டது. திட்டமிட்டபடியே திருவள்ளுவர் துரித பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன். அங்கிருந்து மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன். அத்தை மாமா பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. எங்களுடைய குடும்ப வரலாற்றில் நான்தான் முதல் மருத்துவனாகப் போகிறேன். அப்பா, பெரியப்பா, அத்தை, அண்ணன், அண்ணி ஆகியோர் ஆசிரியர்கள். அத்தை மகள் நேசமணி பாசத்தோடு ” […]

தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்

This entry is part 3 of 29 in the series 19 ஜூலை 2015

வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. சண்டை என்று வந்துவிட்டால் “சிவகங்கைச் சீமையிலே படத்தில் வரும் எஸ்.எஸ்.ஆரைப் போல் பொங்கி குமுறுகிறாள். சுமார் 40 பக்க வசனங்களை மனப்பாடம் செய்யாமல் முன் தயாரிப்பின்றி, தங்குதடையின்றி சரளமாக மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்க்கின்றாள். அவள் ஆவேசமாக சண்டையிடுகையில் அவளது […]

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்

This entry is part 4 of 29 in the series 19 ஜூலை 2015

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 25/07/2015 அன்று காலை 9.30 மணிக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன் வழங்க, திரு. எச்.எச். விக்கிரமசிங்க நூல் அறிமுக உரையை வழங்குவார். மேலும் ஆய்வுரையை கலாநிதி ந. இரவீந்திரன், சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் […]

‘ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 5 of 29 in the series 19 ஜூலை 2015

வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….   இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்   இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;   ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;   அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு குறையாத  உவகைகொள்ளும் உலகளாவிய அன்பு மனம் வேண்டும்   புரையோடிய வன்மத்தில் யாரோ எழுதிய அற்ப வாசகத்தைத் தப்பாமல் தன் முகநூலில் பதிவேற்றம் செய்து யுகப்புரட்சி செய்துவிட வேண்டும்!   பொறுப்பேற்பில்லா அரியாசனத்தில் பெருமையோடு அமர்ந்துகொள்ள வேண்டும்   ’குரலற்றவர்களின் […]

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

This entry is part 6 of 29 in the series 19 ஜூலை 2015

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரையில், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும். சங்கத்தின் தலைவர் திரு […]

காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்

This entry is part 7 of 29 in the series 19 ஜூலை 2015

கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு. விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் […]

வீடெனும் பெருங்கனவு

This entry is part 8 of 29 in the series 19 ஜூலை 2015

சோ.சுப்புராஜ் ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் – குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து சேரவில்லை. ஜெயசீலியும் செல்வகுமாரும் சில வருஷங்கள் அபுதாபியில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பி யிருந்தார்கள். மறுபடியும் அபுதாபிக்குத் திரும்பிப் போக வேண்டாமென்றும் அங்கு சேமித்து வைத்த பணத்தில் சென்னையின் […]

அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா

This entry is part 9 of 29 in the series 19 ஜூலை 2015

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தங்களுக்கு, வணக்கம். ஒரு ஞாயிறு என்பது ஓயாத உழைப்புக்கிடையே கிட்டும் சிறு ஓய்வு. அந்த ஓய்வில் பங்கு கோருவது சரியில்லை தான். எனினும் அன்பும் தமிழும் நேசமும் அனுமதிக்கும் உரிமையில் வேண்டுகிறேன்.அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இவ்விழாவிற்கு அன்பு கூர்ந்து வருகை தந்து வாழ்த்துங்கள்.