சொல்லின் ஆட்சி

This entry is part 20 of 29 in the series 19 ஜூலை 2015

    சத்யானந்தன்   ஒரு உறைவிடத்தில் அமைவதோ அதை நீங்குவதோ சொற்களே தீர்மானிக்கும்   அதிகார முத்திரையுள்ள சொற்கள் பெரிய வளாகங்களை எழுப்பி விடுகின்றன   அவற்றுக்கு அன்னியமான விளிம்பு நிலையினனுக்கு கூரை என்னும் கொடுப்பினை இல்லை   சொல்லாடல்கள் சூழ சுவர்கள் எழும்பியதென்றே குகைகளை அடைந்தான் சித்தார்த்தன்   ஒரு துடைப்பக் குச்சி சணல் துண்டு உடுப்புக்களாய் இருந்த துணிகளின் துணுக்குகள் காகம் அறியும் மனித வசிப்பில் எதைக் கவ்வி எடுத்தால் கூடு அமையுமென்று

எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?

This entry is part 21 of 29 in the series 19 ஜூலை 2015

முனைவர் பி.ஆர். இலட்சுமி   தமிழ்மொழி காலத்தால் மிகவும் பழமையானது. ஆனால், சமீப காலமாகத் தமிழ் கற்க மாணவர்கள் உலகளாவிய அளவில் குறைந்து வருகின்றனர். தமிழ்பேசும் குடும்பத்தினர் தொழில் காரணமாகவோ,அல்லது வேறு காரணங்களினாலோ புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்வதால் அச்சமூகநிலையை ஒட்டி வாழவேண்டிய கட்டாயத்திலும், தொழில் அடிப்படையிலும் வாழ வேண்டியிருப்பதால் தமிழ்மொழி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பண்பாட்டுச் சீரழிவு குடும்பத்திலும், சமுதாயத்திலும் பிரதிபலித்துக்கொண்டிருப்பது உலகளாவிய அளவில் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். வாழ்க்கையின் தேவையே பணமாகிவிட்ட நிலையில் சுயநலம், மனிதநேயமின்மை,பொறாமை,தீவிரவாதம் […]

தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு

This entry is part 22 of 29 in the series 19 ஜூலை 2015

பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302 முன்னுரை: இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, […]

அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு

This entry is part 23 of 29 in the series 19 ஜூலை 2015

சுப்ரபாரதிமணியன் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த பிணைப்பும் அன்பும் சொல்லி மாளாது.அவரின் மகன் வில்சனும், மருமகளும் கூட எழுத்தாளர்களே . ( வில்சன் 75 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டிய தினமணி சிறுகதைப்போட்டியில் வில்சனின் கதைக்கு இரண்டாம் பரிசு- […]

சினிமா பக்கம் – பாகுபலி

This entry is part 24 of 29 in the series 19 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 கிராபிக்ஸின் பிரம்மாண்டமும் கலை வண்ணமும் கை கோர்க்கும் ராஜமௌலியின் அசத்தல் முயற்சி. சூழ்ச்சியால் கைப்பற்றப்பட்ட மாதேஸ்புரியின் சிம்மாசனத்தை மீட்க புறப்படும் ராஜ வாரிசின் கதை. மழலையிலேயே பலமான கரங்களைக் கொண்ட இளவரசன் பாகுபலி. அவனது இணை யாகப், ராஜ மந்திரிக்குப் பிறந்தவன் பல்லவதேவன். அரசியின் மரணத்தால், மந்திரி பிங்களதேவனின் மனைவி சிவகாமியால் வளர்க்கப்படுகின்றனர் இருவரும். அரியணைக்கு தகுதியானவன் பாகுபலியே எனும் சிவகாமியின் முடிவால் எரிச்சலுறும் பிங்களதேவன், தன் மகனை அரியாசனத்தில் அமர்த்த சதி […]

நேர்த்திக் கடன்

This entry is part 25 of 29 in the series 19 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன் நேற்று இரவு மீதமான சோற்றை ‘சில்வர்’ தட்டில் கொட்டினாள் நாகம்மா. தண்ணி சோறு. ஒரு கல் உப்பும் சிறிது மோரும் சேர்த்தாள். பாலு என்கிற பாலகிருஷ்ணனுக்கு காலை ஆகாரம் ரெடி. பாலகிருஷ்ணன் முப்பது வயது இளைஞன். பூர்வீகம் ஆந்திராவில் உள்ள நெல்லூர். சென்னை மாகாணமாக இருந்த போது ஆந்திரா தமிழகத்துடந்தான் இணைந்திருந்தது. பின்னர் பிரிக்கப்பட்ட போது பிரிய மனமில்லாமல் சென்னையிலேயே தங்கி விட்ட குடும்பம் அவனுடையது. அந்தக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலைகளுக்கு […]

நெசம்

This entry is part 26 of 29 in the series 19 ஜூலை 2015

எஸ்ஸார்சி ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு செந்நெல் என எல்லாம் விளையும் வயல்கள். வயல் வெளியிலிருந்து பார்த்தால் கேப்பர் மலை தூரத்தில் சிரியதாகத் தெரியும். அங்கேதான் வெள்ளைக்காரன் கட்டிய கேப்பர் குவாரி ஜெயில் இருக்கிறது. மாகவி பாரதியாரும் புதுச்சேரி விட்டு புறப்பட்ட சமயம் கைதாகி அங்குதான் சிறையில் இருந்தார். முழுப்புரட்சி என க்குரல் தந்த ஜெயப்பிரகாஷ் […]

வழி தவறிய பறவை

This entry is part 27 of 29 in the series 19 ஜூலை 2015

சேயோன் யாழ்வேந்தன் மனசுக்குள் புகுந்துவிட்ட வழி தவறிய பறவை ஒன்று வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது அதன் சிறகடிப்பு மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும் படபடப்பது சில சமயம் பதற்றத்தைத் தருகிறது கவிதைகளைக் கேட்டபின்பே உறங்கச் செல்லும் அது இரவுப் பூச்சிகளின் ஜல்ஜல் ஒலியை கொலுசொலியினின்றும் வேறுபடுத்தத் தெரியாமல் இரவெல்லாம் விழித்திருக்கிறது இப்படியொரு பறவையை எப்போதும் நெஞ்சில் சுமப்பதில் சிரமமொன்றுமில்லை எச்சங்களைத் தவிர. seyonyazhvaendhan@gmail.com

ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை

This entry is part 28 of 29 in the series 19 ஜூலை 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ ஜெயகாந்தன் கவிதைகள் ‘ என்ற தொகுப்பு தொடுவானம் வெளியீடாக வந்துள்ளது. ” எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத சிதைந்த படைப்புகள் இவை. இதைக் கவிதைத் தொகுதி எனக் கருதி யாராவது விமர்சனம் செய்வார்களேயாகில் அவர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன். ” என்கிறார் ஜெயகாந்தன் தன் முன்னுரையில் ! எதுகை மோனையுடன் சிறு சிறு வடிவங்களில் காணப்படும் இவை நிச்சயம் உரைநடையல்ல. சொற்கள் கவிதையை நோக்கிப் புறப்பட்டுவிட்டன. இத்தொகுப்பில் சில திரைப்படப் பாடல்களும் உள்ளன. […]