ரொறொன்ரோ சுயாதீன கலைத் திரைப்படச் சங்கத்தின் பத்தாவது குறுந்திரைப்பட விழா கடந்த சனிக்கிழமை (23-06-2012) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான விழாவின் முதல் அங்கமாக, இரு விசேட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘பாலை’ ஒரு அரங்கிலும், கனடிய தயாரிப்பான ‘ஸ்ரார் 67’ பிறிதொரு அரங்கிலும் காண்பிக்கப்பட்டன. முடிவில் இவ்விரு திரைப்படங்களையும் பார்வையிட்ட இரசிகர்கள் […]
1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள். சூனிய மாசம்னாலும் அமிர்தமான மாசம். நேரம். நல்ல நாளும் பெரிய நாளுமா அத்தை வந்திருக்கா. வந்தேளா, குளிச்சேளா சாப்பிட்டேளான்னு பக்ஷமா நாலு வார்த்தை பேசாமா, ஏழுகிணறு நாயுடு கொண்டு வந்து கொடுத்த சொம்பைக் கட்டித் தூக்கிண்டு அலைஞ்சாறது. பகவதி அத்தை வீட்டுக்கு வந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டே வீட்டுக்காரனைப் பற்றிக் குறைப்பட்டுக் […]
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்பது பிரசித்தமான சினிமாப் பாடல் வரி. வளர்ச்சி முழுமையடைய ஒரு பக்கம் பாடத் திட்டக் கல்வி, மறுபக்கம் விளையாட்டு, பேச்சுத் திறன், போட்டியிட்டு வெல்லும் தன்னம்பிக்கை, தலைமைக் குணங்கள் ஆகிய பலவும் மாணவனின் வளர்ச்சியின் அடையாளம். பாடத் திட்டங்கள் குறித்து வல்லுனர் மட்டுமே விவாதிக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் ‘பிஹெச்டி’ பட்டம் பெற்ற பெரிய கல்வியாளர் பணி அது. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி […]
கணினியில் இணையத்தை இணைத்து, திண்ணை இணைய வார இதழுக்குள் நுழைந்தததும்…கண்கள் “மஞ்சள் கயிறு” கதையைத் தேடியது. சென்ற வாரம் முழுதும் மனதை ஆக்கிரமித்து வார்த்தை வார்த்தையாக ஊறிப் பிரசிவித்த கதை. எல்லா உடல் வலிகளையும் வீட்டு வேலைகளையும் உதறித் தள்ளி விட்டு பொறுமையாக கருமமே கண்ணாயினவளாக சுமந்த கதைக்கரு, ஜம்மென்று கண்ணாடி அறைக்குள் அமர்ந்து என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.. மனசுக்குள் ஏதோ ஒரு நிறைவு. பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு முடிவுகளுக்குக் காத்திருந்த மனநிலை பாஸான […]
சிறுகதை – இராம.வயிரவன் துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம் போடுகிறது. ஒடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு ஒருவன் தான் துரத்தி வந்தான். இப்போது நான்கைந்து பேராகக் கூட்டமாகத் தெரிகிறது. அவர்களின் வேகம் அதிகரிக்கிறது. கால்களை எட்டிப்போடுகிறார்கள். என்னால் முடியவில்லை. கீழே விழுந்துவிடுவேன் போல இருக்கிறது. மாட்டிக்கொண்டால் என்னாவேன் என்று நினத்துக் கொண்டே ஓடுகிறேன். எப்படியும் தப்பித்துவிட வேண்டும் […]
இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு: கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால் இழக்கிறவன் துயரப்பட வேண்டியதுதான். மூல முதலையைக் குரங்கு வஞ்சித்தது. அரசகுமாரர்கள், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்; ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று நீரிலிருந்து வெளிவந்து அந்த நாவல் […]
(ஜாசின் ஏ.தேவராஜன்) ஆக பின் நடந்துகொண்டிருக்கிற சம்பவம் 1 இனி அமீராவைப் பள்ளியில் பார்க்கவே முடியாது.அவள் கோலாலம்பூருக்கு மாறிப் போய்விட்டதாக உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். கோலாலம்பூரில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தூரத்து உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருக்கிறாளாம். எல்லாம் அபுவின் ஏற்பாடு! அந்த ஏற்பாட்டுக்குள் இன்னும் சில ஏற்பாடுகள் அபுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள் அவை! முன் நடந்த சம்பவம் 1 அமீராவுக்கு நிதானம் தேவைப்பட்டது இப்போது. வகுப்பறையில் அவள் பழையபடி இல்லை. வோங் வழக்கம்போல் […]
ஜென் தத்துவம் சார்ந்து எழுந்ததுதான் ஹைக்கூ என்று சொல்கிறார்கள். ஜப்பானியத் துறவிகள் எழுதியவை அவை என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. அவர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள் என்பது, கற்று தெளிந்த உண்மை. ஜென் என்னும் gene (மரபணு) பல கல் தாண்டி, எப்படி தமிழன் உடலுக்குள் புகுந்தது என்பது ஆய்வுக்கான விசயம். இன்னும் சொல்லப் போனால் குருவை மிஞ்சிய சிஷ்யனைப் போல், தமிழ் கவிஞர்கள்தான் இப்போதெல்லாம் ஜப்பானியர்களை விட அதிகம் எழுதுகிறார்கள். இந்த விசயத்தில் ஜப்பானியன் […]
ஒரு முறை ஒரு மனிதன், தனக்குத் தகுந்த காலணியை வாங்கச் சென்றான். அவன் தனக்கு காலணி மிகச் சரியானதாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு காகிதத்தில் தன்னுடைய காலைப் பதித்து, அதை வரைந்து கொண்டான். அதை எல்லாப் பக்கத்திலிருந்தும் அளந்து, பற்பலக் கணக்குகளைப் போட்டு படத்தைச் சுற்றிலும் கிறுக்கினான். அவன் எழுதியிருந்த அத்தனை எண்களையும் சரி பார்த்தான். ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்தான். இறுதியாக, அவனது படத்தின் துல்லியத்தில் திருப்தி கொண்டு, நீண்ட தொலைவில் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com குழந்தைகளுக்குப் பாடிய குழந்தைக் கவிஞர்கள் குழந்தைகளே நாட்டின் எதிர்காலச் சிற்பிகள். அவர்களால் தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் நல்ல வலிமையான நாட்டை உருவாக்குவர். குழந்தைகளை வைத்தே ஒரு நாட்டின் தலையெழுத்து அமைகிறது. ஒரு சமுதாயத்தில் குழந்தைகளை மாற்றிவிட்டால் பின்பு அந்தச் சமுதாயக் கட்டுக்கோப்பே கலகலத்துவிடும். இதனை உணர்ந்துதான் மகாகவியும் மக்கள் கவியும் குழந்தைகளுக்காக எழுதினர். குழந்தைகளின் […]