வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23

This entry is part 4 of 35 in the series 29 ஜூலை 2012

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?! சுற்றி நின்றவர் சிரித்தனர். மகிழ்ச்சியாலா அல்லது அவர்கள் போராட்டத்திற்கு ஓர் கூட்டாளி வந்துவிட்டான் என்பதாலா?! நாம் இலக்கியம் படைக்கும் பொழுதே வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்திருக்கின்றோம். மனிதனின் வளர்ச்சியையும் அப்படியே பிரித்துப் பார்ப்பதே சிறந்தது. குழந்தையின் […]

ஒரு புதையலைத் தேடி

This entry is part 3 of 35 in the series 29 ஜூலை 2012

    பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் […]

பரிணாமம் (சிறுகதை)

This entry is part 2 of 35 in the series 29 ஜூலை 2012

தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் ‘சுளீர், சுளீர்’ என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம்பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. அவன் மனைவி ‘உர்ர்ர், உர்ர்ர்’ எனத்தேய்த்துக் கொண்டிருந்த உருமிமேளம் அந்த நிகழ்வை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தது. கூட்டம் வேடிக்கை பார்த்து விட்டுப் போய்க்கொண்டே இருந்தது. அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் ஜெகனும் ஒருவன். ஜெகனுக்கு நமக்கென்ன என்று சும்மா பார்த்துக் கொண்டிருக்கமுடியவில்லை. அவன் அடித்துக் கொள்கிற ஒவ்வொரு சாட்டையடியும் ஜெகனின் மனத்தில் அடிப்பதாக இருந்தது. […]

உன் காலடி வானம்

This entry is part 1 of 35 in the series 29 ஜூலை 2012

அன்றைய மழைக்கால முன்னிரவில் அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம் தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே நழுவியதவளது பூமி தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள் இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு ஒரு சாத்தானின் உருவம் கொண்டது அந்தகாரத்தில் உனது நடை மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் நதிகள் உதித்தன தண்ணீரில் […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36

This entry is part 14 of 35 in the series 29 ஜூலை 2012

42. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய நகர சாம்ராச்சியத்தை உலுக்கிய உள்நாட்டு பிரச்சினை முடிவுக்கு வந்ததைப்போல தெரிகிறது. கிருஷ்ணபுர படை எறும்பு கூட்டத்தில் தீக்கங்கு விழுந்ததுபோல சிதறி ஓடுகின்றது. ஆளுயர புரவியொன்றில் இரகுநாதநாய்க்கர் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ஆழம்குறைந்திருக்குமென நம்பப்பட்ட கொள்ளிட நதியின் நீர்ப்பரப்பைத் தேடி நடந்தும் நீந்தியும் அவரது படைகள் பின் தொடர்வதையும் அவதானித்தாள். குதிரைகளின் அடிவயிற்றை எந்தி வெருட்ட அவை நுரையொழுக முன்கால்களை வதைத்துக்கொண்டு பரபரப்பதும்; ஆற்றை நெருங்க யோசித்து துதிக்கையை உயர்த்தி பின்னர் பெரும் […]