மணிகண்டன் ராஜேந்திரன் எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன.மதங்கள் ஒருபோதும் மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்வதில்லை..மதங்களை முன்னின்று தூக்கி பிடிப்பவர்களே மதங்களின் கொள்கைகளை திரித்து மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்கின்றனர்.. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தை அழித்துவிட்டு என்றான் பாரதி.. ஆனால் எந்த மதமும் எந்த கவிஞனும் எந்த ஞானியும் மற்றவர்கள் உண்ணும் உணவிற்காக அவனை படுகொலை செய்ய சொன்னதில்லை.. மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிசெய்யும் இவர்கள் வரம்புமீறி மற்ற மதத்தவர்களின் உணவு விஷயத்தில் தலையிடுகின்றனர்.. அடுத்தவனின் […]
நித்ய சைதன்யா 1.நிசி இருள் நகர்ந்த நதியில் விழுந்து கிடந்தது வானம் விண்மீன்கள் நீந்த படித்துறையில் தேங்கின பால்வீதியின் கசடுகள் நிலாவைத் தின்னத்தவித்த கெழுத்தி மீனை பாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று இலைமீதமர்ந்து விட்டில்தேடிய தவளை ஒளிப்புள்ளிகளை அஞ்சியது சுடுகாட்டு தகரக்கூரையைத் தீண்டி துயில் கலையச்செய்தன நகரும் பெருக்கில் நனையாத நிழல்கள் கால்கழுவி மேம்பாலம் ஏறி கருத்த உருவொன்றைக் கண்டவனை இறுக்கிக்கொண்டது பௌர்ணமி இரவு 2.அகாலம் நண்பனின் வருகை முடிந்து டி.வி.பார்த்து உண்டு கிளம்பும்போதுதான் கண்டுகொண்டேன் கைக்கடிகாரமற்ற […]
கவிநுகர் பொழுது-16 —————————————————– தமிழ்மணவாளன் ——————————————————————————————————————————- ( கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து) ——————————————————————————————————————————- ’எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்’, என்பது ஔவை மொழி. ’எண்ணும் எழுத்தும் கவிதையெனத் தகும்’, என்கிறார், தன் புதிய தொகுப்பான, “எண்ணும் எழுத்தும்’, மூலமாக பிருந்தா சாரதி.ஒன்றைச் செய்வது எவ்வளவு சிறப்போ அதனினும் பன்மடங்கு சிறப்பானது அதனைத் தொடங்குவது. பெரிதகன்று வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியின் பிறப்பு சிற்றூற்றாய் இருப்பினும் அதுவே மூலம். அதுவே வணக்கத்திற்குரியது. அத்தகைய தொடக்கம், இந்த எண் […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 20000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>450 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு
மணிகண்டன் ராஜேந்திரன் இன்று நாம் விவாதிருக்க வேண்டிய களம் வேறு..ஆனால் வேறொன்றை பற்றி ஆழமாகவும் தீவிரமாகவும் விவாதித்து கொண்டிருக்கிறோம்.. நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மதுரையில் 463 இடங்களில் “இரட்டை குவளை” நடைமுறையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது.. பிராமணர்களையும் பிராமினியத்தையும் எதிர்த்து இங்கே தான் முதலில் பிராமணர்கள் அல்லாதோர் இயக்கம் தொடங்கப்பட்டது..பின்பு இது நீதிக்கட்சியாக பரிணமித்து பிறகு அய்யா பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கமாக வீறுகொண்டெழுந்தது..மற்ற மாநிலத்தவர்கள் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு முன்பே சாதிஒழிப்பில் நாம் வெகுதூரம் […]
THE CONTRACT (1999) Dir: K.C.Boscombe DOP : Jay Ferguson Music : Haig Armen 0 – சிறகு இரவி 0 ஆக்ஷன் மூவிஸ் என்று போட்டால் யூ ட்யூப்பில் இந்தப் படம் கிடைக்கிறது. ஆனால் கொஞ்சம் இணைய இணைப்பில் நொண்டித்தனத்தால் மெதுவாக விரிகிறது. ஆரம்பமே அட்டகாசம். ஒரு ஆக்ஷன் படத்திற்கு ஆரம்பக் காட்சி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இதில் இருக்கிறது. லூகோஸ் ஒரு கட்டிடத்தின் மாடி அறைக்கு போகிறான். தன் கையில் இருக்கும் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ‘ நரிக்குறவர்கள் இனவரைவியல் ‘ என்ற வாழ்வியல் ஆய்வு நூலின் ஆசிரியை. ‘ சிசு ‘ இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதில் உள்ளவை அனைத்தும் துளிப்பாக்கள். பெண்ணியச் சிந்தனையாளரான பத்மபாரதியின் பல புதிய சிந்தனைகள் இதில் காணப்படுகின்றன. இதைப் படக்கவிதைப் புத்தகம் என்றும் சொல்லலாம். கண்ணும் கண்ணும் பார்த்தால் சாதல் என்றே அர்த்தம் ‘ பல்லிகளின் நடுவே கொசு ‘ — மேலோட்டமாகப் பார்த்தால் திரைப்படத் […]
வளவ. துரையன் தம் தொகுப்பான முதல் தொகுப்பான,”மெல்ல விரியும் சிறகுகள்” என்னும் கவிதைத் தொகுப்பிலேயே நம் கவனத்தை ஈர்க்கிறார் பரிமளாதேவி. காரணம் இவரது கவிதைகளின் எளிமைத்தனம்தான். எந்தவித மறைபொருளோ, படிமம், மற்றும் இருண்மையோ இல்லாமல் நேரிடையாகக் கைப்பிடித்துத் தம் கூடவே வாசகனை அழைத்துச் செல்கின்றன இவர் கவிதைகள். பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வீதிகளுக்கு வந்து ”ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று பாரதி சொன்னதற்கேற்ப பல்துறை வித்தகராய் விளங்கும் காலம் இது. ஆனாலும் கூட […]