”ஏங்க.. அம்மா பாருங்க இன்னும் படுக்காம ஏதோ எழுதிட்டே இருக்காங்க. உடம்பு கெட்டுடப் போகுது. டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்திருக்கார். நேரத்திலேயே படுக்கச் சொன்னாரே.. நீங்கதான் சொல்லக் கூடாதா…” “விடும்மா.. வனிதா… அவங்க முருகா சரணம் எழுதுவாங்கன்னு உனக்குத்தான் தெரியுமே. தூக்கம் வந்தா அவங்களே படுக்கப் போயிடுவாங்க” இருவர் மனதிலும் ஏதோ பாரம் அழுத்த பேச்சு தடைப்பட்டு, சிந்தனை வலுப்பெற்றது. அப்பாவிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததற்கு முழுதாக நண்பர்களிடம் வாங்கிய ஐந்து இலட்சம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. […]