வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77 ஓர் அன்னியனுக்கு !

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (To a Stranger) ஓர் அன்னியனுக்கு ! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எதிரே செல்லும் அன்னியனே ! மதிப்புடன் நோக்கி உனைநான் நேசிக்கிறேன் என்று எனைத் தெரியா துனக்கு. தேடிச் செல்லும் ஆடவன் அல்லது பெண்மணி நீயாகத் தான் இருப்பாய். கனவு போல் தெரியுது. நிச்சயம், உன்னோடு எங்கோ […]

எரிந்த ஓவியம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

முடவன் குட்டி பின் வீட்டு மாடிக்கதவு திறந்தேன் ஆரத்தழுவியது காற்று விரிந்த கண்மாய் வற்றும் குளம் மரங்களூடே மறைந்து மறைந்து தோன்றும் தூரத்து தொடர்ச்சி மலை குளக்கரை தொட்டுவிட சரிந்து இறங்கும் வானம் தவிப்போ தவமோ ஏதுமிலாது சும்மா நிற்பது போல் காத்திருக்கும் கொக்குகள் ஏதோ ஓர் வான் பறவை கீழ் இறங்கி -குளம் தொட்டு- மேலேகும் வாயில் மீனுடன் குளத்தின் பேரழகு மலைத்து நின்றேன் சாயுங்காலம் வரை அழியுமோ இவ்வோவியம்..? பார்வை விலகி குளக்கரை மேட்டில் […]

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில் ISF கிழக்கு மாகாண தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார். காயல் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நரிப்பையூர் குதுபுதீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.முன்னதாக தம்மாம் கிளையின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.கூட்டத்தில் […]

வீடு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

-எஸ்ஸார்சி தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம் .ஏதோ வீட்டில் நடந்துவிட்டிருக்க வேண்டும். உள்ளூர் நகராட்சித்தொடக்கப் பள்ளியில்தான் நான்காவது படிக்கிறான் என் தம்பி.அவன் இப்போது எங்கே சென்றிருப்பான். அவனைத்தான் வீட்டில் காணவில்லை. கேள்விக்குப்பதில் ஏதும் எனக்குச்சொல்லாத அம்மா எதிரே இருக்கும் மேசையை மட்டுமே காட்டினாள். அந்த மேசையின் மீது அப்படி என்ன இருக்கிறது. நான் எட்டிப்பார்தேன். தம்பியின் திருத்தப்பட்ட தமிழ்த் தேர்வுத்தாள் ஒன்று கிடந்தது. […]

சரியா? தவறா?

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

அம்பல் முருகன் சுப்பராயன் நேற்றைய சரி இன்று தவறானது.. நாளை சரியாகலாம்.. எனது சரி உங்களுக்கு தவறாகலாம்.. உங்களது சரி எனக்கு தவறாகலாம்… சரியையும் தவறையும்… எப்படி தீர்மானிப்பது? எது தீர்மானிக்கிறது? பிரச்சினையின் தன்மையா? காலமா? சூழ்நிலையா? இடமா? மனமா? இப்படி ஆராய்வது சரியா? தவறா?

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 } நாள் : 08—06—2014, ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆர்.கே.வீ தட்டச்சகம், முதன்மைச்சாலை தலைமை உரை ; திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : முனைவர் திரு க. நாகராசன், புதுவை பொறியியல் கல்லூரி பொருள் : சாகித்திய அகாதெமி விருது பெற்ற ”கொற்கை” நன்றியுரை : திரு […]

பெருங்குன்றூர் கிழார் கவிதைகள் .

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

1. மரண பயம் என்னை வரவேற்ற எமன் கண்ணில் திகைப்பு நான் முன்வந்த காரணத்தை முக்கண்ணன் அறிந்தால் மூன்றாம் கண் திறக்குமென்ற மலைப்பு. மூன்று நாள் பசிதின்ற உடல் சுமந்து கேட்டேன் சிவன் என்தோழனென்றால் நீ யாரென? சொல்கேட்டு பயந்த எமன் கேட்டான் நான் உன் நண்பன் /நன்று ஆயின் சிவன் உன் தோழனென முன்பே ஏன் பகிரவில்லை? 2 உயிரை எரிக்க நெருப்பு தேடி அலைந்தேன் சாவின் மணம் நுகர்ந்த மூக்கு சிரிக்கும் இருகாட்டின் முருங்கை […]

அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து… சுப்ரபாரதிமணீயன் கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று விவாதம் எப்போதும் இருக்கிறது. கட்சி சார்ந்து இயங்குகிறவனுக்கு அது எப்படியும் ஆயுதம்தான். வெகுஜன அரசியல் சார்ந்த வாக்குப்பொறுக்கிக்கு அது வெற்று ஜாலம். ” நீ நிமிர்ந்தால் இமயமலை, நடந்தால் பாரத நதி ” என்று […]

தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 18. அப்பாவின் ஆவேசம்! ஜூன் மாதம் அப்பா திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் எங்கள் வீடு திரும்பி விடுவேன். அதே மலையடிவாரத்தில் பழக்கமானவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். பேருந்து நிலையத்தில் தினமும் லதாவை ஒருமுறையாவது பார்க்கலாம். நான் மீண்டும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். தேர்வுகள் நெருங்கி விட்டன . காலம் செல்லும் வேகத்தைக் கவனியாமல் போனதால் நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணினேன்.நான் தேர்வில் தோற்பதா? இல்லை! உடன் பாடங்களில் முழுக் […]

‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

எனது 7 ஆவது நூலான ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உபபீடாதிபதி தாஜுல் உலூம் கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கௌரவ […]