திரைப்படம் உருவாகும் கதை (மேதைகளின் குரல்கள். உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள். தமிழாக்கம். ஜா.தீபா நூல் திறனாய்வு)

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

பாவண்ணன் என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம். இளம்பருவத்தில் அம்மா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்கிற சார்லி, ராணுவ வீரர்கள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிப் பாடலுக்குப் பிறகு தொடரமுடியாமல் குரல் இடற தடுமாறிய தருணத்தில், சட்டென்று மேடைக்கு வந்து மீதிப் பாடலைப் பாடுகிறான். அதற்குப் பிறகு சார்லி மேடையை விட்டு இறங்கவே இல்லை. பாடல், ஆடல், நாடக நடிகன் என மாறிமாறி மேடையிலேயே சார்லியின் […]

மயிலிறகு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன் நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு ஒரு மாறுவேடப்போட்டியில் சிலையாக நிற்கவைத்தது குழந்தையை. அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய பெருமைக்குள்ளானதாக அது ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அவனுக்குக் குழந்தைகள் வந்தும் அது முதுமையடையவில்லை. ஆட்டமும் பாட்டும் மறந்து அசைவற்ற குழந்தைகள் தொலைக்காட்சி முன்னிருக்க கோடைச் சந்தையில் புழுக்கத்தோடு விசிறியபடி கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள் மயிலிறகு விசிறியை.

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார். பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது, சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் , திமுக விலிருந்து விலகி அதிமுக துவங்கியது, மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி […]

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா 5. ராமரத்தினத்தின் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவன் அன்று அந்த இதழில் படித்த ஒரு சிறு கதை ஓர் ஏழைப் பையனுக்கும் ஒரு பணக்காரப் பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல் கருகிப்போனது பற்றியதாக இருந்தது. அவன் சோர்வுடன் அதை மூடி வைத்தான். மாலாவும் அந்தக் கதையைப் படித்திருந்திருப்பாள் என்று தன்னையும் அறியாது அவன் எண்ணமிட்டான் அன்றிரவு உணவு அருந்துகையில், ‘அந்தப் பையன் – அதான் உன் சிநேகிதன் ரமணி – மட்டும் பணக்காரப் பையனா இல்லாம இருந்தா […]

கா•ப்காவின் பிராஹா -3

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

மே 9 -2014 பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர் ஆர்வத்துடனேயே கலந்துகொள்கிறோம். தவிர நண்பர்கள் அல்லது நமது மக்களுடன் செய்கிற குறுங்கால பயண அனுபவங்கள் பிராய்டுகூறுகிற அதிருப்தி விழுக்காடுகளைக் குறைக்க உதவுகின்றன என்பது சொந்த அனுபவம். தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவுக்கு மட்டும் ஏற்பாடு […]