ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் பாயின் மீது விரித்த கம்பளியில் படுத்திருக்க, புத்தர் இருவருக்கும் இடையே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விடிந்து வெகு நேரம் கழித்தே சூரியன் தென்பட்டான். புத்தர் எழுந்து நீராடி பிட்சைக்குச் சென்று திரும்பிய போது மருத்துவர் அவர்கள் அருகே இருந்தார். “இஞ்சிச் சாறும் வென்னீரும் தேனும் கொடுத்துள்ளேன் புத்த பிரானே! கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் […]
சிறு வயசிலிருந்தே நான் பொம்மைகள் செய்ய ஆசைப்பட்டே.ன். முதலில் சில காலம் பாடல் பொம்மைகள் செய்து பார்த்தேன். பின்னால் கதைப் பொம்மைகள் செய்ய முற்பட்டேன்; பாடல் பொம்மைகளை விடவும் கதைப் பொம்மைகளிடமே எனக்கு ஆசை மிகுந்தது. ஆனால் ஒரு பொம்மையைச் செய்து முடித்துவிட்ட மறுகணமே அப்பொம்மை எனக்கு அலுத்துப் போய்விடும் ; சலித்துப் போய்விடும். வேறு பொம்மைகளுக்கான திட்டங்களைĪ போடத் தொடங்குவேன். சிலர் அடுக்கடுக்காகப் பொம்மைகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். அது எப்படித்தான் […]
தலைநகரில் பல நாடகங்களையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்த யதார்த்தா தற்போது ஒரு அறக்கட்டளையாகப் பதிவு பெற்றுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட யதார்த்தா அறக்கட்டளையின் சார்பில் ‘யமுனா சூத்ரா’ என்ற நாட்டிய விழா, இந்தியா ஹாபிடாட் சென்டரின் ஆதரவுடன் கடந்த ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் இந்தியா ஹாபிடாட் சென்டரின் ‘ஸ்டெயின் கலையரங்கில் நடைபெற்றது. 4 ஜூன் 2013 அன்று சுப்ரியா நாயக் ‘யமுனா’ என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார். வாய்ப்பாட்டு- பிரசாந்த் பெஹரா, மர்தலா- […]