குப்பை சேகரிப்பவன்

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

 ஷங்கர் ராம சுப்ரமணியன் குப்பைகளிலிருந்து கவிதைகளைச் சேகரிக்கும் சிறுவன் நான். எரியும் சூரியனுக்குக் கீழே நான் வெயிலின் மகன் தனிமையான இரவு வானத்தின் கீழே நான் நட்சத்திரத்தின் பிள்ளை. மழையில் என் வசிப்பிடம் மூழ்கும்போது தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில் ஒரு உயிர் நான். ஈரக்குப்பை உலர்குப்பை மக்காத குப்பை அனைத்தும் எனது கைகளுக்குத் தெரியும் கண்ணாடிப் பொருட்களால் ஊறுபட்ட காயங்களும் தழும்புகளும் எனக்கு உண்டு. நட்சத்திரத்தின் உயரத்திலிருந்து குப்பைத்தொட்டிகளைப் பார்த்தால் இந்த உலகம் அழகிய சிறு கிணறுகளால் […]

மருத்துவக் கட்டுரை ஆஸ்த்மா

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

ஆஸ்த்மா நோய் என்பது இன்று வளர்ந்து வரும் நாடுகளில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக பெருகிவரும் தொழிற்சாலைகளும், வாகனங்களும், அதனால் உண்டாகும் சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கெடும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. வளர்ந்துவரும் நாடுகளில் ஆஸ்த்மா 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாகி வருகிறது. அங்குள்ள ஜனத்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப் படுகின்றனர். மக்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தைக் கடைப் பிடிப்பதால் இந்த வியாதி இன்னும் அதிகமாகத் தோன்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும் […]

பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு

This entry is part 2 of 23 in the series 16 மார்ச் 2014

    நாளுக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும்தான் நிற்கும் அந்த ஸ்டேஷனில்.   நேரம் காலை எட்டு மணி இருக்கும். பத்து மணிக்கு வர வேண்டிய அந்த ரயிலுக்காக மூன்று பேர் மட்டும் காத்து கொண்டு இருந்தார்கள், வெறிச்சோடிக் கிடந்த அந்த ஸ்டேஷனில்.   ஒருவர் பேண்ட் சர்ட், மூக்கு கண்ணாடியுடன் ஐம்பது வயது மதிக்க தக்க மனிதர். கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்தார்.   மற்ற இரண்டு பேர் […]