வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.41] அனந்தா! விண்ணகத் தேவரும் விண்டிலர் நின் உண்மை உருவின் வீச்சையும் விரிவையும்! வியப்பென் எனில், அங்கிங்கெனாதபடி நீக்கமற நீள் விசும்பெலாம் நீயே நிறைந்தும் நீயே முழுதும் நின்னை இயம்ப இயலா எல்லையில்லா விஶ்வரூபம் நின் ஸுஸ்வரூபம்! ககன வெளியில் பவனமுந்த பாய்ந்தோடும் தூசித்துகள் போல் காலச்சகடமுந்த கோடி கோடி அண்ட பிரம்மாண்டம் கூடி நின்று நின் திருவுந்தியுள் சுற்றிச் சுழன்று செல்லுதே! நின் பேராளுமையின் எல்லைதான் ஏது பேரருளாளா? உன் ஸ்வாஸமேயான மறைகளாம் […]
ஆர் சீனிவாசன் ஒப்புக்கொள்கிறேன். நான் தான் உரசலை ஆரம்பித்தேன். வேலை அழுத்தத்தின் பின் விளைவுகளை நாவு வரை செல்ல அனுமதித்திருக்க கூடாதுதான். வீட்டிற்கு வந்தவுடனே அலர் “ஏன் இவ்வளவு லேட்டு. இன்னைக்கு வெளியில சாப்பிடலாம்னு நினைச்சோமே” என்றதிற்கு முகம் சுளித்திருக்க கூடாததுதான். “ஏன் இப்படி…” என வாக்கியத்தை முடிக்காமல் ‘உம்’மென முகத்தை வைத்துக்கொண்டு போனவளை சமாளிக்க முடியாமல் அன்று மாலை முழுவதும் மூலைக்கு ஒருவராக கழித்தோம். படுக்கையில் சீண்டி கொஞ்சம் அத்து மீறலாமா என நினைத்தேன். ஆனால் […]
வசந்ததீபன் (1) உதிர்ந்த இலை உலர்ந்த கனவு உடைந்து சிதைகின்றன கல் தீபத்தை ஏற்ற முனைந்தேன் துளிர்த்த ஒளி சட்டென்று காணாமல்போகிறது காற்றை தின்றிட துடிக்கிறேன் பேருந்து புறப்பட்டு விடும் நீர்ததும்பும் விழிகளோடு நினறிருக்கிறாய் நிரப்ப முடியாத இடைவெளிகள் பெருக்கெடுக்கிறது ஆதியில் வார்த்தை இருந்தது அப்புறம் காணாமல் போனது மீண்டும் ஆடுகளின் பேச்சாய் மீண்டது பாடல்களின் வரிகளில் புதைந்து போன கவிதையே…! இசையின் அலைகளுக்களுக்குள் கரைந்து போனதேன்…? பாம்பு நல்லதாம் கொன்றவர்கள் கணக்கில்லை அது இறந்ததற்கு வருத்தப்படணுமா […]
ரவி அல்லது உடைகள்மாறும் பொழுதுஅதுஉலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.உணவுகள் மாறும்பொழுதுஉற்சாகமாக இருந்தது.நினைவுகளைஞாபகிக்க முடியாமல்நடப்பவைகள்யாவும்நிரம்பியபொழுதுநாகரீகமெனத் தோன்றியது.அழுத்த விசைகளுக்குஆட்கொண்டபொழுதுஅடுத்த தலைமுறைவளர்ந்து நின்றுஅயலகனாகஆச்சரியம் தந்தது.அவ்வப்பொழுதுதானஊர்ப் பயணங்கள் அங்கேயும்ஒன்ற முடியாதஅவஸ்தைகளைக் கொடுத்தது.அயலகத்தின் பிரஜையாகமாறிப்போன பொழுதும்அவர்கள்அந்நியராகவேப்பார்த்ததுஅச்சத்தைக் கொடுத்தது.ஆதிச் சரடைஅடையும் ஆசைகள்துளிர்த்த போதுபெயர் மட்டுமேதங்கிகண்ணாடிக்குள்சிக்கிய மீன்காவந்தில் இருப்பதான பொழுதாகநீந்தி நீந்திவெளிவர முடியாதுவாழ்க்கையாவருக்கும்மாறிப்போனது.இப்பாடுகளுக்கிடையில்‘மாப்ளை வேலை என்னாச்சு.’ ‘மகளுக்கு மாப்பிள்ளை என்னாச்சு ‘ போன்றகேள்விகளுக்குபதில் சொல்லியேமத்திய வயதைக்கடந்தவர்களுக்குவெளிச் சொல்ல முடியாதவேதனையில்அன்றாடங்கள்மிகைஅலுப்பைக் கூட்டுகிறது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com நன்றி:அயலக வாழ்க்கையைஅங்கலாய்த்து அங்கிருக்கும்நண்பர் தேனி பாபு அவர்கள் கவிதை எழுதச்சொன்னதற்கு.
ரவி அல்லது ஆசையாக எட்டிப் பார்க்கிறது. சுவை மொட்டுக்கள் உள் நாக்கிலும் எச்சிலூற. குரலெடுத்து கூவினாலும் குயிலை ரசிக்க முடியவில்லை கண்ணி வைக்கும் மனதைத் தாண்டி கறியின் சுவை கண் முன் நிழலாடுவதால். *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com