இல.பிரகாசம் குறியீடுகள் எல்லாவற்றுக்கும் சூட்டப்படுகின்றன அவைகள் சமத்துவமானவையா? சில குறியீடுகள் அஃறினைக்குச் சூட்டப்படுகின்றன சில குறியீடுகள் உயர்தினைக்குச் சூட்டப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலையற்றதாக படைக்கப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலைத் தத்துவத்தை போதிக்கின்றன அஃறினைக் குறியீடுகளில் அது அவை என்றும் இது இவை என்றும் சுட்டப்படுகிற போது பால் பேதங்கள் அவற்றிற்கு சூட்டப்படுவதில்லை முதன்மையாக. உயர்தினைக் குறியீடுகளில பால் பேதங்கள் முதனிலை வகிக்கின்றன. ஆண்குறி என்றும் பெண்குறி என்றும் திருநங்கை என்றும் குறிப்பிடும் குறியீடுகளில் சமத்துவ […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அப்பாவின் பாசத்தைத் தான்மட்டுமே தட்டிக்கொண்டு போனவள் அக்கா வீட்டின் முதல் பெண்ணான அவள் மூக்கில் எப்போதும் நிற்கும் கோபம் நூறு கிலோமீட்டர் வேகத்தில் பிறரைத் தாக்கும் பிள்ளைப் பருவத்தில் என்னை ‘ஏமாற்றும் ‘ விளையாட்டு ஒன்று செய்வாள் நான் வியந்து போவேன் வலது புறங்கை நடுவிரல் நடுக்கணு சிறு குழியில் சாக் – பீஸால் ஒரு புள்ளி… கையைப் பின்னால் மறைத்து ஒரு நொடியில் ஏதாவது ஒரு […]
கோ. மன்றவாணன் நாளிதழ்களில் பிரபல ரவுடி, பிரபல கிரிமினல் என்று எழுதுகிறார்கள். அதுபோலவே பிரபல நடிகர், பிரபல எழுத்தாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நற்செயல்கள் அடிப்படையில் அறியப்படும் ஒருவரைப் பிரபல என்ற அடைமொழியிட்டு அழைக்கையில், தீச்செயல்கள் மூலம் அறியப்படும் ஒருவரை அதே “பிரபல” என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுவது சரியாகுமா? நல்வகையில் புகழ்பெற்றவரை ஆங்கிலத்தில் Famous என்றும்- தீய குணத்தால் ஊரறிந்தவரை Notorious என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழிலும் அவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கும் சொல் இருக்கிறதா? சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள […]
சு. இராமகோபால் அந்தரங்கம் சிந்தனைக்குச் சிரிப்பு ஶ்ரீரங்கம் தெரிகிறது என் மனதில் புகுந்து வாழும் ரீங்கார வண்டுகளே இன்று எந்தன் சிந்தனையே சிரிப்பே வந்தே மாதரம் பிறக்குமுன்னர் வந்ததிந்த சிரிப்பு தந்தையின் நாமமே தரணியெங்கும் படர்ச்சி விந்தை விந்தை விந்தை வீதியெல்லாம் வண்டுகள் ஐந்தே நாகங்க ளாடுகின்ற அரண்மனையில் தனிக்குடிப்பு சிந்தனையின் வீதியே சந்நிதியின் திறப்பு வாசல் வாசல் வாசல் வழிவதெல்லாம் வானீர் மூன்றே முகங்களும் தோன்றுதற்கு முருகு கண்ட இருட்டு சிரிப்பினின் திரட்டே ஶ்ரீரங்கம் வருவதற்குக் […]
எஸ் .ஆல்பர்ட் கடற்கரைக் காற்று மெய் தொட்டுத் தடவியுட் புகுந்து கவிராசன் பட்டத்துப் புரவியைத் தட்டிக் கொடுக்கக் கொடுக்கத் தரை விட்டெழும்பிப் பறந்ததம்மா. கவிராசனும் லேசாகி லேசாகி நிசராசன் ஆனதுடன், முன்பின் யோசனை யில்லாமல், சாசகான் பிறப்பெடுத்து; ஆசை மனைவி மும்தாசைப் பறிகொடுத்து, தாசுமஹாலைக் கட்டிப் பேரெடுத்தான். பின்னர் இன்னும் லேசாகி, அந்தப் புரத்துக்குள் எட்டிப் பார்த்து ஆருமில்லை யென்று அந்தரடித்து, குளத்துக்குள் குதித்து குடைந்து விளையாடி திணித்துக் களிககையில் கலகலவெனச் சிரித்து வந்த கைகொட்டக் குதித்து […]