வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4

This entry is part 1 of 17 in the series 19 மார்ச் 2017

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்க்கும் பிரகாஷ், “உங்கள் குரலில் ஏனிந்தக் கிண்டல்? ஒரு பெணணை விரும்புவது பெருங்குற்றமா என்ன?” என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்கிறான். “சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? ஒரு நண்பனைப் போல் […]

வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்

This entry is part 2 of 17 in the series 19 மார்ச் 2017

என்.செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம். 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெளிவந்துள்ளன என்று நிழல் இதழ் முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் சில படங்கள் விடுபட்டு இருக்கலாம். ஆனாலும் இவ்வளவு தமிழ்ப் படங்கள் வந்துள்ளன என்பதே உண்மை. பல படங்கள் தோல்வியைத் தழுவின. பல படங்கள் நூறு நாள் படங்கள். வருடத்துக்கு ஒரு சில படங்களே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இந்த பட்டியல் தனஞ்செயன் எழுதிய […]

பிரியும் penனே

This entry is part 3 of 17 in the series 19 மார்ச் 2017

பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை என்னோடு வைத்திருந்ததில் கர்வப்பட்டிருக்கிறேன் எது இருந்ததோ இல்லையோ இல்லாமல் நீ இருந்ததில்லை நான் என்னோடு நீ இருந்ததால்தான் எனக்குப் புகழ் நீ வந்தபின்புதான் பெருமை என்னிடம் வந்தது ஒருபோதும் எனக்குப் பெருமை வந்ததில்லை பெருமிதம் வந்ததுண்டு நான் நினைத்ததை வடித்தது நீதானே […]

ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

This entry is part 4 of 17 in the series 19 மார்ச் 2017

பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான கடலோர சமதளங்களில் அமைந்திருக்கிற நிலப்பகுதிதான் ஒகோனி.. ஷெல் நிறுவனம் இயற்கை வளமிக்க அப்பகுதியில் எண்ணெய் எடுத்ததால் ஒகோனி பகுதிக்குள் 1,தூய காற்றோ, பசுமை அடர்வுகளோ இல்லாத இடமாகிவிட்டது. 2, பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு […]

கவிதைகள்

This entry is part 5 of 17 in the series 19 மார்ச் 2017

அருணா சுப்ரமணியன் 1. அடைக்கலம்.. சின்னஞ்சிறு குருவி ஒன்று கூட்டிலிருந்து தவறி விழுந்தது சிறு அலகும் எழில் சிறகும் வெகுவாய் கவர தூக்கி வந்தேன் …… முப்பதுக்கு நாற்பது வெறும் கூட்டை இளஞ்சிறகுகளின் வண்ணம் வானவில்லாக்கியது….. 2. வினா – விடை விடைகொடுக்கத் தயங்கியதால் வினாக்கள் பல சேர்ந்தன.. விடை தெரிந்தும் தெரியாமலும் விடப்பட்டன வினாக்கள் … தெரியாத விடைகள் எதிர்வரும் நேரம் தெரிந்த விடைகள் விடைபெறத் தொடங்கின.. புதிய விடைகளும் பழகிய வினாக்களும் நிரம்பி வழிகின்றன […]

ஐஸ் குச்சி அடுப்பு

This entry is part 6 of 17 in the series 19 மார்ச் 2017

சிவகுரு பிரபாகரன். மா சுவை காண்பதாய் வேண்டி ஆரம்பித்தது, அவனோ, தினசரி வாடிக்கையாளராய் வரும் போதெல்லாம் மணி அசைக்கிறான் நானும் திறவாது கதவருகே நிற்கிறேன் போவதாயில்லை, அவனை போக சொல்லவும் மனமில்லை வெளியே நிற்கும் ஈருருளியை அகத்தே வைக்க கூட இருமாடி இறங்க இருபதாயிரம் முறை யோசிப்பவன் ஆனால் என் கண் முன்னால் வந்து போகும் குல்பி குச்சியால் விறகு எரிக்கும் வடக்குகாரனின் வயிற்றுப்பசி; மணிச்சத்தம் கேட்கிறது அவனாத்தான் இருக்கனும் இரண்டு மாடி இறங்குவதெல்லாம் வழக்கமாய் கொள்கிறேன் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 7 of 17 in the series 19 மார்ச் 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [40] ஒருகண நிறுத்தம், சில வினாடிச் சுவை, கழிவுகளுக் கிடையே ஊருணி உள்ளது, மெதுவாய்ச் செல்லும் குறியிலாப் பயணம் எதையும் அடையாது, விரைவாய்ச் செல் ! [40] A Moment’s Halt – a momentary taste Of Being from the Well amid the Waste – And Lo! […]

மொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்

This entry is part 8 of 17 in the series 19 மார்ச் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல் அ. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres) பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும் அதற்குச் சரியானச் சொல்லாடலைப் பிரெஞ்சு இலக்கிய உலகம் உபயோகிக்கத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில். அக்காலக் கட்ட த்தில் சமயபோதனைகள், பைபிள், சமய வரலாறு ஆகியன மறை எழுத்து (Lettres-saintes) என்றும், இதனைத் தவிர கல்விமான்கள் எழுத்து(Lettres savantes), நல்ல எழுத்து […]

பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்

This entry is part 9 of 17 in the series 19 மார்ச் 2017

அன்புடையீர் வணக்கம்.   ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் இன்று(17 – 03 – 2017)வாசிக்கப்பெற்ற, நாளை (18 – 03 – 2017) வாசிக்கப்பெற உள்ள கட்டுரைகள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப் பெற்றுள்ளன. பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன் தமிழ்ப் பிரிவு, இந்திய மொழிகள் மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புது தில்லி – 110 067. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் – […]

பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு

This entry is part 10 of 17 in the series 19 மார்ச் 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++++++++++ ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு. பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில் எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று ஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், எப்போது நான் அழைக்கப் பட்டாலும் என்னிதயப் போக்கில் போக வேண்டும் […]