பார்வையற்றவன்

This entry is part 12 of 13 in the series 29 மார்ச் 2020

மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். அன்புத் தோழமைகளே! மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். கடந்த 21 மார்ச் சனிக்கிழமையோடு சென்னைப் பெருநகர இரயில்கள் நின்றுவிட்டன. விடுமுறையோ, வீட்டில் இருந்தபடி பணியோ இன்னும் சில நாளைக்கு அன்றாட அலைச்சல் இல்லைதான். ஆனாலும், இந்த ஊரடங்கு அமைதியிலும் அந்த கடக் கடக் சத்தம் உங்கள் காதில் ஒலித்துக்கொண்டுதானே இருக்கிறது? பர்பிகள் விற்றுக்கொண்டும், பாடல்கள் பாடியவாறும் வந்த பல பார்வையற்றவர்கள் இன்னும் உங்கள் கண்களில் நிழலாடிக்கொண்டுதானே இருப்பார்கள். இரயில்சேவை […]

கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.

This entry is part 10 of 13 in the series 29 மார்ச் 2020

_ லதா ராமகிருஷ்ணன் //மைக்கேல் லெவிட்  (*விக்கிப்பீடியாவில் இருந்து. மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க–பிரித்தானிய–இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, ஏரியா வார்செல் ஆகியோருக்கும் “சிக்கலான வேதி […]

மாயப் பேனா கையெழுத்து

This entry is part 11 of 13 in the series 29 மார்ச் 2020

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு இனிப் பூட்டெதற்கு? வானமே எல்லை நேற்று வீடே எல்லை இன்று உரசக்கூடாத ஒரு மரத்துக் கிளைகள் நாம்தானோ? ‘தனித்திரு விழித்திரு’ அட! இதுதானா? ஆற்றுக்கும் காற்றுக்கும் பாதை புரியும் நமக்கு? ஓளியால் பார்க்கலாம் ஒளியைப் பார்ப்பது எங்ஙனம்? எங்கும் மிதக்கும் மர்மத் […]

கொரோனா – தெளிவான விளக்கம்

This entry is part 8 of 13 in the series 29 மார்ச் 2020

ஸ்ரீகாந்த் சத்யநாராயணன் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார்.  நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அப்படியே பகிர்கிறேன். அனைவருக்கும் சென்று சேர வேண்டிய விஷயம் இது. * டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு […]

கொரோனா

This entry is part 7 of 13 in the series 29 மார்ச் 2020

கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று நீ புளகாங்கிதம் கொண்டபோது உன் அயல் நாட்டு நண்பன்  உனக்கு கொடுத்த தொற்றால் நீ  கொரோனா எனும்  அந்த முள்ளு உருண்டை வைரஸ் மூலம்  உன் அந்திச்சிவப்பை  நீ முத்தமிட்டு மறைந்து விடுவாயோ என்ற நிஜம் இப்போது ரத்தம் கொப்புளித்துக்கொண்டு நிற்கிறதே! என் செய்வது? செல் பேசிகளில் செல்லரித்துப்போய் விடுமோ நம்  மண்ணின் கனவுகள்? […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 13 in the series 29 மார்ச் 2020

                                                                                                                 ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ.              [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]       இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும் என எண்ணி, அதை விடுத்து, இராசமாபுரத்து இறைவரான சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பிறைச்சந்திரனுடன் சேர்ந்திருக்க விரும்பி இங்கு வந்துவாழும் தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள். =====================================================================================             போய பேரொளி அடைத்து வைத்த […]

வதுவை – குறுநாவல்

This entry is part 5 of 13 in the series 29 மார்ச் 2020

  அருணா சுப்ரமணியன்  காவ்யா பதிப்பக வெளியீடான “வதுவை” குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன். திருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன் அர்ஜுன் சந்திக்கும் மனிதர்கள், அவனது முதல் பணி அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், காதல்,  இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கான எதிர்ப்பார்ப்புகள்  என்று விரியும் கதைக்களம். இதுவரையில் எங்கும் சொல்லப்படாத வித்தியாசமான கதைக்களம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாது முற்றிலும் புதிய, வேறுபட்ட கோணத்தில் […]

ஆட்கொல்லி

This entry is part 4 of 13 in the series 29 மார்ச் 2020

சி. ஜெயபாரதன், கனடா ஆட்கொல்லி , ஆட்கொல்லி நச்சுக் கிருமி இது !   உடனே கொல்லாத நாட்கொல்லி  இது ! யுகப்போராய் ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும் காலக் கிருமி இது ! மனிதரால் உண்டாகி, மனிதரால் பரவி, மனிதரைக் கொல்லும் கிருமி இது ! உலகை ஒன்றாக்கி, ஒருவரை ஒருவர் மதித்து, உதவி செய்ய இணைத்த கிருமி  இது ! ஒளிந்திருந்து சில நாளில் உயிரைக் குடிப்பது ! கடவுளுக்கு அஞ்சாதவன் குடலும் நடுங்குது ! […]

ஒருகண் இருக்கட்டும்

This entry is part 9 of 13 in the series 29 மார்ச் 2020

. கோ. மன்றவாணன்       எனக்கு முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல் பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு.. படிப்பது உண்டு. அதுபோல் புத்தகக் காதலர்             சேலம் பொன். குமார் அவர்களின் முகநூல் பக்கத்தைப் பார்த்தபோது, சங்கரன்கோவில் அருணகிரி அவர்களின் பதிவைக் காண நேர்ந்தது. அவர், என் நூலுக்குப் பிழைதிருத்தம் செய்து செப்பமாக்கியவர் என்பதால் அவரது முகநூல் பக்கத்தில் நுழைந்தேன். அதில் Surveillance Camera என்பதற்குக் கண்காணிப்புக் கண்கள் […]

தமிழின் சுழி

This entry is part 3 of 13 in the series 29 மார்ச் 2020

கோ. மன்றவாணன்       பதிமூணாவது சரியா… பதிமூனாவது சரியா என்று வளவ. துரையன் அய்யா அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். 13 என்ற எண்ணே பலரைப் பயமுறுத்தக் கூடியது. அவர்களைக் கேட்டால் 13 என்ற எண்ணே சரியில்லை என்பார்கள்.       எழுத்து வழக்கில் மூன்று என்று எல்லாரும் எழுதுகிறோம். அதில் எந்தப் பிழையும் இல்லை. மேலும் இருசுழி ன்-க்குப் பிறகு று-தான் வரும்; றகர வரிசைதான் வரும். அதுபோல்  முச்சுழி ண்-க்குப் பிறகு  டகர வரிசைதான் வரும். எனவே […]