ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். அவனைப் போன்றோர் ஒன்று சர்க்கஸில் இருக்க வேண்டும் அல்லது சினிமாவிலோ நாடகம் மற்றும் கூத்து போன்ற அமைப்பிலோ இருக்க வேண்டும் எனபது விதி. ஆனால் இதிலும் ராமுவின் வாழ்க்கையில் வித்தியாசம் உண்டு. ராமு எல்லோரையும் போல பள்ளிக்கூடம் போனான். ஆனால் ஆறாம் வகுப்பு தாண்டும் போதே அவனுக்கும் அவனைச் சுற்றி இருந்தோர்க்கும் தெரிந்து விட்டது […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பெரு மூச்சு விட்டவள் மெல்லப் புன்னகை செய்கிறாள். ஆறு வரை எண்ணி மேற்செல்வாள், பணப் பையை நிரப்பிக் கொண்டு, மனப் பயிற்சி செய்கிறாள்; ஒவ்வொரு வனும் தகுதி யான ஒரு காதலனே ! கால வரையறை இட்டார் அவர்கள்; காரணம் : அவளது ஆத்மா பிடிக்குள் விழ வேண்டும் உலகு அமைத்த பள்ளத்துள். எழிலான செவ்விதழ்கள் யாரிடமும் பொய் […]
சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள் தரப்பட்டிருந்து. அவற்றில் சரியான ஒரு விடையைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. தவறான விடை தந்தால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்! சுலபம்தான். ஆனால் படித்து பார்க்கும்போது ஐந்தும் சரியான விடைபோன்று தெரியும். அதுதான் சிக்கல். நான் நிதானமாக […]
இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு நுணுக்கங்களையும், பரவலாக்குவதை விரும்புவதில்லை. அது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களின் எதேச்சிகாரத்தை கோலோச்ச வழிவகை செய்கிறது. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை தொடர்பாகவும், அதில் இருக்கும் பல்வேறு சிக்கல் குறித்தும் ஒரு நீண்ட உரையாடலை […]
சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாகத் தெரியும் அது என் சடலம் தான் கண்ணாடியில் தினமும் பார்ப்பதுதானே அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? இப்போதெல்லாம் அடிக்கடி தென்படுகிறது என் சடலம் இல்லை, அது எப்போதும் இருக்கிறது நான்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லையோ என் சடலத்தை. நம் சடலத்தை நாம் கண்டு அழாமல் நாயா அழும்? வாழும் போது என் சடலம் எனக்கே தெரியாமல் போனால் செத்த பின்பு என் சடலம் தன் சடலமென்று தெரியாமல் போகாதா இன்னொருவனுக்கு? -சேயோன் […]
சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல இருந்தன. அதில் எங்களை சீனாவில் இருக்கும் நான்கு பெரிய பாண்டா சரணாலயங்களில் ஒன்றான லுவோ குவான் சின்லிங் மலைப்பகுதியில் இருக்கும் பாண்டா சரணாலயம் மிகவும் கவர்ந்தது. தங்கையின் மகளுக்கு வயது ஆறு. அவளுக்கு பாண்டா என்றால் மிகவும் பிடிக்கும். குங்பூ பாண்டா படத்தை எப்படியும் 50 முறையேனும் பார்த்திருப்பாள். அதிலிருந்து பாண்டாவை பார்க்க வேண்டும் […]
யாமினி தன் நடன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய ஆளுமையின் ஒரு அம்சமாக விருந்தது. அவரது மெல்லிய மென்மையான தேகம் அவர் இஷ்டத்துக்கு சிறுத்தையென பாயும், தன் பலத்தைக் காட்ட விரும்பினால். தன் சலனத்தில் ஒரு அழகைக் காட்ட விரும்பினால், அந்தப் பாய்ச்சல் மானைப் […]
எஸ்.எம்.ஏ.ராம் வால்மீகி ராமாயணத்தில் இருபத்தினாலாயிரம் சுலோகங்கள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு சுலோகத்தில் மட்டும், ஜனகரின் புதல்வியும் சீதையின் தங்கையும் லட்சுமணனின் மனைவியுமான ஊர்மிளையைப் பற்றிப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார் வால்மீகி. கைகேயியின் உத்தரவின் பேரில் காட்டுக்குக் கிளம்பும் ராமன், தன் அம்மா கோசலைக்கு ஆறுதல் சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் காட்சிக்கு மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சுலோகங்களைத் தாராளமாய்ச் செலவழித்திருக்கிறார் கவி. அதே மாதிரி, காட்டிற்குக் கிளம்பும் முன் ராமன் சீதையைச் […]
– கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை! சித்தார்த் திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆச்சர்யம் புதுமுகம் தீபா சன்னதி. அழகாகவும் இருக்கிறார். அசத்தலாகவும் நடிக்கிறார். அவர் சமந்தா ஜாடையாக இருப்பதில் ஏதும் உள்குத்து இல்லை என நம்புவோம். சிம்புவுக்குப் பிறகு, எடுப்புப் பல்லோடு வலம் வருகிறார் சித்தார்த். ஒரு சென்டிமெண்டாக இந்தப் படம் வெற்றி பெறும். உடல் மொழி, நடை, வசன உச்சரிப்பு எனப் பிரமாதப்படுத்தி இருக்கிறார் சித்து. […]
ஆனால் ஊருக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு ஊர்க்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்குள் நுழையும் இவர்கள் சில விஷயங்களைப் பார்த்து, மனம் கொதித்த பின்னரே மாற்றமடைகிறார்கள். ஊர் பெரிய மனிதர்கள் ஊர் பழக்கவழக்கததை, கட்டுப்பாட்டை எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. கமுதி பேருந்து நிலையத்திற்குள் ஒருவன் வெள்ளை வேட்டி சட்டையை அணிந்து கொண்டு நுழைகிறான் என்றால் அவன் எவ்வளவு துணிச்சல் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக […]