வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

  ஜோதிர்லதா கிரிஜா          சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான்.  நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும் தன்னுள் பசியைத் தோற்றுவித்தாலும் வியப்பதற்கில்லை என்று மனத்துள் சொல்லிக்கொண்டான்.  அந்த வாசனைகள் ஓட்டலையும், புதிய பணியாள் ராமரத்தினத்தையும் அவனுக்கு நினைவூட்டின. ராமரத்தினம்! அவனைப் பற்றி நினைத்த போது, பெண்களினுடையவை போன்ற அவனின் கரிய, பெரிய விழிகளே அவன் கற்பனையில் தோன்றின. ஊர்மிளாவைப் […]

திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

புதியமாதவி, மும்பை   அத்தியாயம்…7   திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.     பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.   கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட ஒரு கருப்பொருள். உலகின் முதற்பொருள் நிலமும் பொழுதும் என்று சொன்ன தொல்காப்பியர் நிலம், பொழுது ஆகியவற்றின் இயக்கம் சார்ந்து தோன்றும் கருப்பொருள்களாக பறவை, விலங்கு என்று பட்டியலிடும் போது நிலம் சார்ந்த கருப்பொருள்களில் ஒன்றாக […]

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல் காமெடி ,   மன்மோகன் சிங்கின் தவிர்க்க முடியாத மௌனம் , நரேந்ரமோடியும்   மோடிமஸ்தானும் இவையெல்லாம் விவாதத்தில்  இடம்பிடித்தன. மன்மோகன் சிங்கைப்பொருத்தமட்டில்  அவருடை செயல்பாடுகள்  அவர் சொன்னதுபோல ஒருகாலத்தில் பேசப்படும் என்பது என்னுடைய அபிப்ராயம். நாங்கள் ஒன்பதுபேரும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக  […]

மராமரங்கள்

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ருத்ரா இ.பரமசிவன்   மறைந்து கொள்ளத்தானே வேண்டும் உனக்கு. இதையே மராமரங்களாக்கிக்கொள்.   தெய்வம் காதல் சத்தியம் தர்மம் அதர்மம் ஜனநாயம் ஆத்மீகம் நாத்திகம் சாதி மதங்கள்.   எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக்கொள் மனிதனே! இவற்றிலிருந்து கள்ளிப்பால் சொட்டுவது போல் ரத்தம் கொட்டுகிறது தினமும் உன் சொற்களில். மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய் கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய். உன் பிம்பங்களுக்கு நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய். மனிதனுக்கு மனிதன் உறவாடுவதாய் நடத்தும் உன் நாடகத்தில் அன்பு எனும் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Roots & Leaves Themselves Alone) வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா        வேர்களும், இலைகளும் தமக்குள் தனித்தே உள்ளன ! மனிதர்க்கும்  வனிதை யர்க்கும் நறுமணங்கள், வனத்தி லிருந்தும், நீர்க் குளத்தருகி லிருந்தும் வருகின்றன ! சூரியன் காலை எழும்போது மார்புச் சிவப்பு காதல் நினைவில் மலர்ந்து கை விரல்கள் திராட்சைக் கொடிகளை விடவும் இறுகச் சுற்றிக் கொள்ளும் ! மறைந்த வண்ணம், பறவை இனம் வாய் பிளந்து கூச்சலிடும் !     கடற் பயணிகளே ! நிலத்தடித் தென்றலும், நேசத் தனமும், அலை அடிக்கும் கடற் […]

முக்கோணக் கிளிகள் படக்கதை – 4

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)  மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 13, 14, 15 & 16​   ​இணைக்கப்பட்டுள்ளன.       ​+++++++++++++++​  

கையறு சாட்சிகள்

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

  சத்யானந்தன்   உயர்ந்த கட்டிடங்கள் மெலிந்த கைகளால் எழுப்பப் படவில்லை?   பலமாடிகள் கடக்கும் தசை வலிமை தேவையில்லை   மின் தூக்கி எண் வழி தளங்களுக்கு இட்டுச் செல்லும்     மின் தூக்கியில் முன்னே நுழைந்தது யார் என்பது அற்ப நிகழ்ச்சி   அது அதிகம் நிற்கும் இடம் அதிகார மையம்   அசுர வளாகங்களை மின் தூக்கியின் எண் பலகை இயக்கும்   தளங்களில் அறைகளில் கணினி விசைப் பலகைகள் வணிக […]

தொடுவானம்   16. இயற்கையின் பேராற்றல் காதல்.

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

                                                                                                                  டாக்டர் ஜி. ஜான்சன்            16.   இயற்கையின் பேராற்றல் காதல்.           1962 ஆம் வருடம் ஏப்ரல் எட்டாம் நாளன்று ” சென்னை ராஜ்யம்  ” கப்பல் மூலமாக அப்பா தமிழகம் பயணப்பட்டார்.          அவர் திரும்பும் வரை நான் மோசஸ் வில்லியம் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பு அவர்கள் மலையில்தான் லதாவின் வீடு அருகில் இருந்தனர். ஆனால் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வரிசை வீட்டுக்குச் சென்று விட்டனர். அந்தப் பகுதி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதனால் நான் லதாவைத் தினமும் பேருந்து நிற்கும் இடத்தில்  பார்க்க […]

தனியே

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

    இருட்டுப் போர்வையைத் தரை போர்த்திக் கொள்கிறது   எம்மை அணைக்க யாரும் இல்லையென இலைகள் கேவின   வியர்வை ஆறுகள் மறையும் மந்திரம் தேடினர் மாந்தர்கள்.   அணு அனல் நீரால் வரும் சக்தி வாசல்களும் அனல்கள் கக்கின   ஒரே ஓர் அசைவு போதுமென உச்சிக் கழியில் கொடி கூக்குரலிட்டது   புகை போக்கிகளோடு நேர்க்கோடொன்றாய் புகையும் நிற்கிறது   கடைசியில் வந்த காற்று கவிதையில் அடங்காத சொல்லெனத் தனியே போனது

2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் விண்வெளித் திட்டமிட்டுள்ளது ரஷ்யா  ! […]