Posted inகவிதைகள்
விளைவு
ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள்…