தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில

This entry is part 20 of 40 in the series 26 மே 2013

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை. உலகம் முழுவதும் தமிழ் பரவியிருந்தாலும், தமிழர் பரவியிருந்தாலும் தமிழுக்கு எங்கும் இரண்டாம் இடம் என்பதே தற்கால நிலைப்பாடாகும். பொருள் சார்ந்து இயங்கும் இந்த உலகத்தில் படிப்பை முடித்தவுடன்நாளும் பொருளை அள்ளித்தரும் கல்விகளுககு மட்டுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தச் சூழலில் தமிழைப் படித்தவர்களின் தமிழ்வழியில் படித்தவர்களின் எதிர்காலம் என்பது வரவேற்புமிக்கதாக இல்லை என்பதே உண்மை. மக்களால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தமிழ்க் கல்வி அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக […]

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21

This entry is part 19 of 40 in the series 26 மே 2013

  பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் வரிசை அப்படியே இருந்தது. மன்னருக்கு இணையான ஆசனம் ஒன்று இருக்காது. இன்று அப்படி ஒன்று இருந்தது. ராஜகஹ நகரத்தில் எல்லா கிராமணிகள், இசைக் கலைஞர்கள், சிற்பிகள், புத்தரின் சீடர்கள் எனப் பலருக்கும் சபை நிறைத்து இருக்கைகள் இருந்தன. அதற்கு அடுத்த சுற்றிலும் இறுதியான சுற்று முழுவதும் வெளியே தோட்டத்திலும் பணியாளர்களும் பொது மக்களும் கூடியிருந்தனர். […]

தாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !

This entry is part 18 of 40 in the series 26 மே 2013

தாகூரின் கீதப் பாமாலை – 66     பிரியும் வேளையில் நீ சொல்லி விடு  .. !         மூலம் : இரவீந்தரநாத் தாகூர்   தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.         பிரியப் போகும் அந்த நேரத்தில்   இறுதியாய்    எனக்கு ஒன்றைச் சொல்லி விடு !   எப்போதும்  உன்  வேதனை மறைத்து   குசும்பு விளை யாட்டில்   உனது […]

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

This entry is part 17 of 40 in the series 26 மே 2013

  (இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி) குர‌ல் த‌ந்து குரல் மூலம் முக‌ம் த‌ந்து இம்ம‌க்க‌ளை ஆட்சி செய்தீர். முருக‌ன் எனும் உந்து விசை அத்த‌னையும் உன்னிட‌ம் தேனின் ம‌ழை. “அன்ன‌ம் இட்ட‌ வீட்டிலே” அந்த‌ முத‌ல் பாட்டிலிருந்து “க‌ணீர்”க்குர‌ல் தேய‌வில்லை மாற‌வில்லை. கோடித் த‌மிழ் நெஞ்சுக்குள்ளும் ஊடி ஊடி பாய்ந்த‌தில் ஊன் உருக்கி என்பு உருக்கி ஊழி இசை வெள்ள‌ம் தான். உன் குரலுக்கு உதடு அசைத்தவர்கள் உயரம் போனார்கள். அவர்களை கீழே விழாமல் […]

ஜங்ஷன்

This entry is part 16 of 40 in the series 26 மே 2013

எஸ்.எம்.ஏ.ராம் சின்ன ஜங்ஷன். இங்கிருந்து இரண்டு கிளைகள் வெவ்வேறு திசைகளில் பிரிவதால் இது ஜங்ஷனாயிற்று. பிரிந்தாலும் ஜங்ஷன்; சேர்ந்தாலும் ஜங்ஷன். உயரத்திலிருந்து பார்த்தால் பிரிதல் சேர்தல் எல்லாம் ஒன்று தான். ஒரே புள்ளி. அதில் தான் தண்டவாளங்களின் பிரிதல் சேர்தல் எல்லா நிகழ்ச்சிகளும். இன்ஜினை அவிழ்த்துக் கொண்டு போய் விட்டாகள். இந்த ஸ்டேஷனில் தான் மின் என்ஜினுக்குப் பதிலாக டீசல் எஞ்சினையும், டீசல் எஞ்சினுக்குப் பதிலாக மின் எஞ்சினையும் மாற்றுகிறார்கள். பழைய காலத்தில் வண்டியில் மாட்டுக்குப் பதிலாகக் […]

நிறமற்றப் புறவெளி

This entry is part 15 of 40 in the series 26 மே 2013

விழி திறந்த பகலில் மொழி மறந்து மௌனமானாய் இமை மூடிய இரவில் தலைக்கோதி தாலாட்டினாய் நிழல் விழும் தூரத்தில் நீ எனது உறவானாய் தென்றலாய் எனைத் தொட்டு தீண்டும் இன்பம் தந்தாய் இளங்காற்றாய் மாறி வனப்பூக்களின் காதலை வளர்த்தாய் கடுங்காற்றாய் உருமாறி காதல் வேதனையைத் தந்தாய் நிறமற்றப் புறவெளியில் உருவற்ற உனை தலையசைத்து அறியவைத்தேன் எனை மறந்த நீயோ கடல் அலையைக் கைப்பிடித்து உடல் பிணைந்த மறதியில் புயலாய் வந்து சாய்த்து மரமான என்னை மரிக்க வைத்துவிட்டாயே […]

டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 7

This entry is part 14 of 40 in the series 26 மே 2013

  அந்த பிரம்மாணடமான லட்சுமி பில்டிங்க்ஸின் ஆறாவது தளத்தில் கௌரி லிப்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் முன்பாக அவள் போட்டுக் கொண்ட “ப்ளூ லேடி “சென்டின் மென்மையான மணம் அவளைத் தாண்டிக் கொண்டு அந்த நீள வராண்டா முழுதும் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டு பறந்தது…”டக் டக் ” என்ற கௌரியின் செருப்பின் சத்தம் எதிரொலியாக கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது. கௌரி வருவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்த ‘குரூப்4 செக்யூரிட்டி’ தன்னை சுதாரித்துக் கொண்டு […]

குரங்கு மனம்

This entry is part 13 of 40 in the series 26 மே 2013

  “அருந்ததி, அம்மா சாப்பிட்டாங்களா? எங்கே ஆளையேக் காணோம்” “இல்லப்பா, எங்கப்பா நேரத்துக்குச் சாப்பிடறாங்க.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அழுதுகிட்டே இருக்காங்க. இன்னும் உங்கப்பா செத்த அதிர்ச்சியில இருந்து மீளவே இல்லை பாவம். நானும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். வேற என்ன செய்யிறதுன்னு தெரியல. நீ போய் பாரு ஜனா”. கணவனும், மனைவியும் மாறி மாறி வருந்திக் கொண்டிருந்தனர். அப்பாவை திடீரென்று இப்படி ஒரு விபத்து அள்ளிச் சென்றுவிடும் என்று கனவிலும் யாரும் நினைக்கவில்லை. […]

எழிலரசி கவிதைகள்

This entry is part 12 of 40 in the series 26 மே 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 1968-ல் ராணிப்பேட்டையில் பிறந்த எழிலரசி தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது நாமக்கல் பள்ளி ஒன்றில் தமிழாசிரியையாக இருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்புதான் ‘மிதக்கும் மகரந்தம்’ இதில் 44 கவிதைகள் உள்ளன. தத்துவப் பார்வை, வாழ்க்;கையை ஊடுருவிப் பார்த்தல், எளிமை, பூடகத் தன்மை வழி வாசகன் மனத்தில் கேள்விகளை எழுப்புதல், அகநோக்கி ஆகியவை இவரது கவிதை இயல்புகள் எனலாம். ‘அந்தக் கணம்’ – முன் வைக்கும் வியப்பு எல்லோருக்குமானதுதான். கையால் பிடிக்க முடியாமல் […]

வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

This entry is part 11 of 40 in the series 26 மே 2013

-ராஜூ சரவணன் 2011 இறுதியில் கேரளாவின் விழிஞ்ஞத்தில் அமைந்திருக்கும் Cental Marine Fisheries Research Institute சென்டருக்கு செல்ல வேண்டிய வேலை ஏற்பட்டது. கர்நாடகாவின் கார்வாரில் கடலடித்தரை உயிரினங்களைப் (benthos) பற்றிய ஆய்விற்கு பயிற்சி முகமாக நான் விழிஞ்ஞத்தில் வந்திறங்கினேன். நான் அங்குள்ள தொழில் நுட்ப பணியாளர்களுடன் இணைந்து கடலடித்தரை உயிரினங்களை சேகரிக்க விழிஞ்ஞம் மீன்பிடித் துறைமுகத்தில் கிராப்(Grab) மற்றும் இன்ன பிற கருவிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஓரிரு முறை கிராப் சேம்பளர்களைக் கொண்டு கடலடித்தரை சேறை […]