சு. இராமகோபால் கதவு திறந்தது மஞ்சள் கலிடோனியாவின் கண்ணில் பிறந்த கரும்புத் தொட்டிகளைப் பரிசோதித்து வந்த நானும் உதவியாளனும் உள்ளே நுழைந்தோம் மேலே செல்ல பொத்தானை அமுக்கினான் கதவு மூடுமுன் எங்களுடன் வேகமாக சேர்ந்தாள் இளம் தீவுப்பெண்ணொருத்தி முழங்கால்களைத் தாண்டும் அடர்ந்த கருங்கூந்தல் குடியேறிய மூன்று நான்கு இனங்களின் சேர்க்கையில் பரிணாமித்த எழில் ஜிம் அவளைக் கிண்டல் செய்தான் உனக்கென்ன நீ வரலாம் போகலாம் தளம் வந்ததும் முதலில் வெளியேறிய அவள் நகைத்தபடி சொன்னாள் நான் […]
இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில் ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன் சுப்ரமணியின் பக்கத்தில் பாலு உட்கார்ந்திருந்தான். நடு ஹாலில் வக்கீல்கள் கருப்பு அங்கிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். இளம் வக்கீல் சுந்தரம் தனது அம்மா பாக்யலட்சுமி பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பாக்யலட்சுமி சீனியர் கிரிமினல் வக்கீல். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்ரமணியின் […]
தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை ” கிரேம்ப் ” என்பர். உண்மையில் இதை தசைகளில் உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு. இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை நார்ச் சுரிப்பு, தசை மரத்தல், சூரை பிடித்தல், தசை இசிவு, பிடியிருக்கம் என்ற பெயர்களில்கூட இது அழைக்கப்படுகிறது. கடுங்குளிரினால் அல்லது மட்டுமீறிய தளர்ச்சியினால் உண்டாகும் தசைநார் பிடிப்பு இது எனலாம். தசைப் பிடிப்பு என்பது […]
தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல் சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய “சீரங்கநாயகியார் ஊசலின் எட்டாம் பாடல் இதுவாகும். சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் […]
எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்’பருவம்’ என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்குக்கொண்டு தந்தவர். ஊரும் சேரியும்,கவர்மென்ட் பிராம்ணன்,பலிபீடம்,நாகமண்டலம், பசித்தவர்கள்,அக்னியும் மழையும்,ஓம்நமோ,பருவம் இன்னும் இப்படி எத்தனையோ. பைரப்பாவின் ‘பருவம்’ பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் சிலிர்த்துக்கொண்டு வெளிப்பட்டு வாசகனை ச்சிந்தனைச்சாகரத்தில் அமிழ்த்திப்பார்க்கிறது.அறிவினை விரிவு செய்,அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை, […]