ஜி.ஜே. தமிழ்ச்செல்வி காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு வந்து யாழினியை எழுப்பினாள். காஃபியோடு வெளியே வந்த யாழினிக்கு மற்றும் மொரு ஆச்சர்யம், இரவு சுருண்டு கிடந்த வயோதிக மூதாட்டி கோட் மிடியுடன் கழுத்தில் முத்துமாலை அணிந்து நாற்காலியில் மிடுக்குடன் அமர்ந்து எதிர்சாரியில் தெரிந்த வயல்களில் பறந்துக்கொண்டிருந்த கொக்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லை இல்லை வேடிக்கைப் பார்ப்பதை […]
என் செல்வராஜ் பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் தொகுத்த தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விழி பா இதயவேந்தன் தொகுத்த தலித் சிறுகதைகள், சிவகாமி தொகுத்த தலித் சிறுகதை தொகுப்பு, பிரபஞ்சன்,பாரதிவசந்தன் தொகுத்த 20 ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள், உதயகண்ணன் தொகுத்த வானவில் கூட்டம் (உலகத் தமிழர் கதைகள்), ஷங்கரநாராயணன் தொகுத்த யானைச்சவாரி, ஜுகல் பந்தி, அமிர்தம்-2 தொகுதிகள், கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த […]
-எஸ்ஸார்சி பெரியசாமி மீது எந்த தவறுமில்லை.எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு. மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன் இலாகாவில் நானும் பெரியசாமியும் வேலையில் சேர்ந்தோம் சிலர் டெலிபோன் இலாகாவில் வேலை பார்த்தோம் என்பார்கள் ஒருசிலர் வேலைசெய்தோம் என்பார்கள் ஒரு அலுவலகத்தில் வேலையைப் பார்ப்பதா இல்லை செய்வதா என்கிற ஆராய்ச்சிக்குள் போய் யாருக்கும் ஒன்றும் ஆகப்போவது இல்லை. எது எப்படி என்று கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள் டெலிபோன் இலாகாவில் வேலை செய்கிறவர்களுக்கு தொழிற்சங்கம் அதன் தொடர்பான […]
கனவு திறவோன் எத்தனை இடங்களில் காத்திருந்தேன் எங்கும் அவள் வரவில்லை அவள் வராமலிருக்க எத்தனையோ காரணங்கள் என்னைக் காதலிக்காததும் சேர்த்து என்னை நான் எத்தனை முறை படம் பிடிப்பேன்? அத்தனையிலும் என் நிழல் இருந்தது ஆனால் உயிரில்லை? அவளில்லா செல்பி வெறும் யுனரி (ஒருமக்) குறியீடு தான்! எங்கும் நீ வந்தாய் சில நாட்களில் சின்னதாய் சிரித்து மறைந்தாய் சில நாட்களில் என்னையும் சிரிக்க வைத்து மறைந்தாய் இன்று உன்னோடு ஒரு செல்பி எடுத்திட வேண்டும் விடிந்தது […]
விக்ரமாதித்யன் நம்பி என்ன இது? என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன் உண்மையில் கேட்க நினைப்பது என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்றுதான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று இனி எவ்வாறு நடந்து கொள்வீர் என்று. என்ன இது என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன் உங்களெதிரே வேறு எப்படிக் கேட்பது. நட்பே சுற்றமே உறவே சூழலே என்னை விட்டுவிடு என்னை மறந்துவிடு உங்கள் அன்புகளை என்னால் தாங்க முடியவில்லை இப்போதும் மனிதன் உயர்ந்தவன் […]
அ.சுந்தரேசன். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம் உலகு இல்லை! புவிக்கு வெகு அருகாமையில்,சராசரியாக 1.496×1011 மீட்டர் தொலைவில் வெப்பமிகு அடர்த்தியான வாயுக்களான ஒரு கோளமே சூரியனாகும்.அதில் 73%ஹைட்ரஜன் வாயுக்களும்,25%ஹீலியம் வாயுக்களும்,1%க்கு குறைந்த அணு நிறை மிகுந்த தனிமங்களும் நிறைந்துள்ளன. சூரியனானது பலகோடி ஆண்டுகளாக குளிர்ச்சியடையாமல்4x1026Js-1வேகத்தில் கதிர்வீச்சாற்றலை வெளியிடுகிறது.அதற்கு சூரியனில் தொடர்ந்து நிகழும் அணுக்கரு இணைவு வினைகளே காரணம். இவ்வினையில், ஹைட்ரஜன் அணுவின் […]
சுப்ரபாரதிமணியன் தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக இருந்து வருகிறது. அறிவியல் விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது வெகு குறைவே. அதிலும் இலக்கிய அக்கறை கொண்டவர்களே அதை சில சமயங்களில் செய்கிறார்கள். […]
= சிறகு இரவிச்சந்திரன் 0 இத்தாலிய பிரபுவின் ஆவி துரத்தும் இளைஞர் பட்டாளம். அசத்தல் ஹாரர் ஓவியம். சீனிவாசனும் அவன் நண்பர்கள் ராகவன், விமல், சப்பையும், டிமான்டி பிரபுவின் ஆவி புகுந்த பழைய மாளிகையிலிருந்து, ஒரு தங்கப் பதக்கத்தை எடுத்து வந்து விடுகிறார்கள். அதற்காக அவர்களை விரட்டி பழி வாங்குகிறது வெள்ளைக்கார ஆவி! சீனிவாசனாக அருள்நிதி நடித்தாலும், இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்தான். அவரோடு கைக் கோர்க்கிறார் கலை இயக்குனர் சந்தானம். டிமான்டி […]
சத்யானந்தன் மரம் நெடிதுயர்ந்து நின்றது பாழுங் கிணற்றுள் இறங்கி நீண்ட வேர்கள் ஒரு நாள் ஒரு தவளையைக் கண்டு மௌனம் கலைத்தன “எங்களைப் பற்றி நீ மேலே போகலாமே” “பற்றுதலால் கிடைப்பதெல்லாம் திரும்ப முடியா இடமே” கீழ் நோக்கித் தாவியது தவளை
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இடிமுகில் திரண்டு வான்மீது வெடிக்கும் மின்னலில் பாஸிட்டிரான் பராமாணுக்கள் தோற்றம் முதன்முறை கண்டுபிடிப்பு ! காமாக் கதிரொளி எழுந்திடும் தூரத்தில் துகள், எதிர்த்துகள் பிணைந்து. விண்வெளியில் ஒளி மந்தைகளோ வெடிப்பு மீன்களோ, பரிதிக் கதிர்த்துகள்களோ அகிலக் கதிர்களாய் அடிக்குது. பூமியின் வானில் புரளும் இடிமுகில் மின்னழுத்தம் அளக்க அகிலக்கதிர்கள் உதவும். மின்னலைத் தூண்டி விடுமா அவை என்றறிய உதவலாம். +++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=M-uNtC426R4 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sjxsy3LpWd4 +++++++++++++++++++ நாங்கள் ஆராய்ச்சி விமானம் மூலம் எதிர்பாராதவாறு இடிமுகில் ஊடே சிறிது கண நிமிடங்கள் கடந்த […]